70, 80, 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் .. இடிக்கப்படும் ‛பார்லே - ஜி’ பிஸ்கட் முதல் ஆலை.. இனி கிடைக்காதா?
மும்பை: 70, 80, 90-ஸ் கிட்ஸ்கள் முதல் 2கே கிட்ஸ் வரை அனைவருக்கும் ‛பேவரைட்' பிஸ்கட்டாக இருக்கும் பார்லே - ஜி மும்பையில் உள்ள தனது முதல் உற்பத்தி ஆலையை மூடியுள்ளது. இந்தியா மட்டுமின்றி நாடு முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வரும் ‛பார்லே - ஜி' பிஸ்கட்டின் மூடப்பட்ட முதல் ஆலையை இடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் அதன் பின்னணி பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
நம் நாட்டில் பல லட்சக்கணக்கான மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் இரண்டற கலந்த பிஸ்கட்டுகளில் ஒன்று ‛பார்லே - ஜி'. இது நம் நாட்டு நிறுவனத்தின் தயாரிப்பாகும்.
காலை எழுந்தவுடன் ஒரு பாக்கெட் பார்லே-ஜி பிஸ்கட்டை தேநீருடன் சேர்ந்து சுவைக்கும் பழக்கம் பலருக்கும் இருக்கும். குறைந்த விலையில் சுவையோடு பார்லே ஜி பிஸ்கட் விற்பனை செய்யப்படுவது தான் இதற்கு முக்கிய காரணம்.

70ஸ், 80ஸ், 90ஸ் கிட்ஸ் முதல் 2கே கிட்ஸ் வரை அனைவருக்கும் இன்று வரை பார்லே ஜி பிஸ்கட் ‛பேவரைட்' ஆக உள்ளது. இதுதவிர முதியவர்களும் இந்த பிஸ்கட்டை விரும்பி சுவைக்கின்றனர்.
பார்லே - ஜி விரும்பிகளுக்கு அதிர்ச்சி
இன்னும் சொல்லப்போனால் நம் நாடு மட்டுமின்றி பல நாடுகளில் ஏழை தொழிலாளர்களின் காலை, மதியம், இரவு நேர உணவாகவே பார்லே ஜி பிஸ்கட்உள்ளது. இதனால் தான் இந்த ‛பார்லே ஜி' பிஸ்கட்டை மக்களிடம் இருந்து பிரிக்க முடியவில்லை. இந்நிலையில் தான் பார்லே ஜி பிஸ்கட்டின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியான செய்தி வெளியாகி உள்ளது.
மும்பையில் முதல் ஆலை
இந்த ‛பார்லே - ஜி' பிஸ்கட்டின் பாரம்பரிய உற்பத்தி ஆலை மும்பையின் வைல் பார்லே பகுதியில் அமைந்தது. நாம் சுவைத்த பார்லே- ஜி பிஸ்கட்டுகள் இங்கிருந்து தான் முதன் முதலில் உற்பத்தியாகி உலகம் முழுவதும் சென்ற நிலையில் அந்த ஆலை இடிக்கப்பட உள்ளது. இதற்கான அனுமதி வழங்கப்பட்டது.
இடிக்க அனுமதி
இந்த பார்லே ஜி நிறுவனம் கடந்த 1929ல் மும்பையின் வைல் பார்லே பகுதியில் தொழிற்சாலையை தொடங்கியது. இப்போது இந்த தொழிற்சாலை இருக்கும் இடம் வணிக வளாகமாக மாற்றப்பட உள்ளது. இதற்காக கடந்த 2016ம் ஆண்டிலேயே இந்த ஆலையில் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
கடந்த ஜனவரி 7 ம் தேதி மகாராஷ்டிரா மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் (SEIAA), பார்லே புராடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு வணிக மேம்பாட்டு திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கியது. அதன்படி 54,438.80 சதுர மீட்டர் (13.54 ஏக்கர்) பரப்பளவில் உள்ள 21 பழைய கட்டிடங்களை இடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலை விரைவில் வணிக வளாகமாக கட்டப்பட உள்ளது.
மிட்டாய் தயாரிப்பு டூ பிஸ்கட்
இந்த முதல் ஆலை இடிக்கப்பட்டாலும் கூட நம் நாட்டில் பிற இடங்களில் பார்லே - ஜி பிஸ்கட் ஆலை உள்ளது. அங்கிருந்து தொடர்ந்து பிஸ்கட் உற்பத்தி செய்து விற்பனைக்கு வர உள்ளது. இந்த பார்லே - ஜி நிறுவனத்தை மோகன்லால் தயாள் சவுகான் என்பவர் தான் தொடங்கினார்.
மும்பை புறநகர் வைல் பார்லே என்ற இடத்தில்ஆலையை தொடங்கியதால் அதன் பெயரில் பார்லே - ஜி என்று பெயர் வைத்தார். தொடக்கத்தில் சாக்லேட்டுகள் மற்றும் மிட்டாய்களைத் தயாரித்த இந்த ஆலை, 1939இல் இனிப்பு பிஸ்கட்டுகளின் உற்பத்திக்கு மாறியது. இப்போது இந்தியா உள்பட உலகளவில் பார்லே - ஜி நிறுவனம் பேமஸாக உள்ளது.
பாக்கெட்டில் இருக்கும் பாப்பா யார்?
இந்த பார்லே - ஜி பிஸ்கட்டில் கொழு கொழு தேகத்துடன் குழந்தை ஒன்று க்யூட்டாக இருக்கும். இந்த குழந்தை யாருடையது? இந்த குழந்தை இப்போது எப்படி இருக்கும்? குழந்தையின் பெயர் என்ன? என்பது கூட சமீபத்தில் இணையதளங்களில் விவாதத்தை கிளப்பியது.
இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி, நீரு தேஷ்பாண்டே, குஞ்சன் குண்டானியா போன்ற பலருடனும் இந்தக் குழந்தையின் உருவம் இணைத்து பேசப்பட்டது. பார்லே - ஜி பிஸ்கட் பாக்கெட்டின் கவரில் உள்ள இந்த குழந்தை உண்மையானது இல்லை. 1960களில் 'எவரெஸ்ட் கிரியேட்டிவ்' நிறுவனத்திற்காகக் மகான்லால் தஹியாவால் என்ற கலைஞர் வரைந்த ஓவியம் தான் அந்த குழந்தை.
பிற தயாரிப்புகள் என்ன?
இந்த பார்லே ஜி பிஸ்கட்டை தயாரிக்கும் நிறுவனம் தற்போது 'ஹைட் & சீக்', 'கிராக்ஜாக்', 'மொனாக்கோ' போன்ற பல பிஸ்கட்டுகளையும் 'கிஸ்மி', 'மெலடி', 'எக்லேர்ஸ்' போன்ற மிட்டாய்களுடன், ஸ்நாக்ஸ், வேஃபர்கள், ரஸ்க்குகள், கேக்குகளையும் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications