சட்டசபையில் அல்ல.. அரசியலில் பெரும்பான்மையை நிரூபியுங்கள்.. ஷிண்டேவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

மும்பை: சட்டசபையில் அல்ல.. அரசியலில் பெரும்பான்மையை நிரூபித்துக் காட்டுங்கள் என்று மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவசேனாவின் கட்சியும், சின்னமும் ஷிண்டே அணிக்கு ஒதுக்கப்பட்டதை எதிர்த்து, உத்தவ் தாக்கரே தொடுத்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்துள்ளது.

மேலும், சிவசேனா உத்தவ் தாக்கரே அணியில் இருந்த எம்எல்ஏக்கள், ஷிண்டே அணிக்கு மாறியது குறித்தும் பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர்.

ஷிண்டே கையில் சிவசேனா

ஷிண்டே கையில் சிவசேனா

மகாராஷ்ட்ராவில் சிவசேனா ஆட்சியில் இருந்தபோது, முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக மூத்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே போர்க்கொடி தூக்கினார். பின்னர் பெரும்பாலான எம்எல்ஏக்களை தனது பக்கம் இழுத்த ஷிண்டே, பாஜகவுடன் கூட்டணி அமைத்து மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்றார். இதன் தொடர்ச்சியாக, தாங்கள்தான் உண்மையான சிவசேனா என உத்தவ் தாக்கரே அணியும், ஏக்நாத் ஷிண்டே அணியும் சண்டையிட்டு வந்தன. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த தேர்தல் ஆணையம், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணிக்குதான் சிவசேனா கட்சியும், அதன் வில் அம்பு சின்னமும் சொந்தம் என அறிவித்தது.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவு உத்தவ் தாக்கரேவுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இதனால் கடும் அதிருப்தியில் உள்ள உத்தவ் தாக்கரே தேர்தல் ஆணையத்தை கடுமையாக விமர்சித்து வருகிறார். தேர்தல் ஆணையம் ஒரு மோசடி அமைப்பு என்றும், பாஜக அரசின் அடிமை எனவும் அவர் குற்றம்சாட்டினார். மேலும், தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்திலும் அவர் வழக்கு தொடர்ந்தார். அதில், "சிவசேனாவில் இருந்து ஷிண்டே அணிக்கு மாறிய எம்எல்ஏக்களை, கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதிநீக்கம் செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் நான் வழக்கு தொடுத்திருந்தேன். இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது தேர்தல் ஆணையம் எப்படி இந்த தீர்ப்பை வழங்க முடியும்? எனவே, தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்" எனக் கோரியிருந்தார்.

"அரசியல் பெரும்பான்மையை காட்டுங்கள்"

இந்த வழக்கானது, தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் எம்.ஆர். ஷா, கிருஷ்ணா முராரி, ஹிமா கோஹ்லி, பி.எஸ். நரசிம்மா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி நரசிம்மா, "சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்பது விஷயம் அல்ல. ஏக்நாத் ஷிண்டே அணி அரசியலில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டார். அப்போது ஷிண்டே அணி வழக்கறிஞர், "இதுதொடர்பாக நாளை (இன்று) பதிலளிக்கிறோம்" எனக் கூறினார்.

 சரமாரி கேள்வி

சரமாரி கேள்வி

இதனைத் தொடர்ந்து, ஷிண்டே அணியிடம் நீதிபதிகள் சரமாரியாக கேள்வியெழுப்பினர். அதாவது, உத்தவ் தாக்கரே அணியில் இருந்து ஷிண்டே அணிக்கு எம்எல்ஏக்கள் மாறியது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் வராதா? வராது என்றால், எதன் அடிப்படையில் சொல்கிறீர்கள்? அவ்வாறு அணி மாறிய எம்எல்ஏக்களை ஏன் தகுதிநீக்கம் செய்யக் கூடாது? கட்சித் தாவலுக்கும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியதற்கும் சம்பந்தமில்லை என எப்படி சொல்கிறீர்கள்? என்பன உள்ளிட்ட கேள்விகளை நீதிபதிகள் கேட்டனர்.

"இது கட்சித் தாவல் வழக்கல்ல"

இதற்கு பதிலளித்து ஷிண்டே அணி வழக்கறிஞர் கூறுகையில், "தற்போது நடைபெறும் எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்வது தொடர்பானது அல்ல. ஒரே கட்சியில் இருக்கும் அதிருப்தி அணியை பற்றிய வழக்குதான் இது. இரு அணிகளும் சிவசேனா என்ற ஒரே கட்சியை சேர்ந்தவை என்பதால் இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் மட்டுமே தீர்வு காண வேண்டும். இந்த வழக்கில் நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்தும், கட்சித் தாவல் குறித்தும் பேசுவது சரியல்லை" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+