Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"இது மராட்டி மண்.. இந்தியை திணிக்க முயன்றால் விரட்டி அடிப்பேன்.!" மும்பையில் ராஜ் தாக்கரே ஆவேசம்!

Subscribe to Oneindia Tamil

மும்பை: மும்பை தேர்தலை இந்த முறை உத்தவ் தாக்கரே- ராஜ் தாக்கரே இணைந்து எதிர்கொள்கிறார்கள். இதற்கிடையே பிரச்சாரம் ஒன்றில் பேசிய ராஜ் தாக்கரே, உபி & பீகார் மாநில மக்கள் இந்தியைத் திணிக்க முயன்றால் அவர்கள் மகாராஷ்டிராவில் இருந்து விரட்டி அடிக்கப்படுவார்கள் என்றார். மேலும், மும்பை மக்கள் விழிப்புடன் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்றார்.

மும்பை உள்ளாட்சித் தேர்தல் வரும் 15ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அங்குப் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. எப்போதும் சிவசேனாவின் கோட்டையாகவே மும்பை இருந்துள்ளது. இதனால் தாக்கரே தரப்பு எப்படியாவது மும்பையில் அதிகபட்ச இடங்களில் வென்று காட்ட வேண்டும் என்ற முனைப்பில் இறங்குகிறது. இதனால் நீண்டகாலமாகப் பிரிந்திருந்த தனது சகோதரர் ராஜ் தாக்கரேவுடன் உத்தவ் தாக்கரேவுடன் கூட்டணி அமைத்துள்ளார்.

Raj Thackeray Warns UP Migrants Will Kick You If Hindi Imposed in Maharashtra Calls It a Crisis

இந்தித் திணிப்பு

இதற்கிடையே பிரச்சாரம் ஒன்றில் பேசிய ராஜ் தாக்கரே, மராத்தி மொழி மற்றும் இந்தி திணிப்பு குறித்துப் பேசியிருக்கிறார். உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மகாராஷ்டிராவில் இந்தி மொழியைத் திணிக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் என ராஜ் தாக்கரே கடுமையாக எச்சரித்துள்ளார்.

விரட்டி அடிப்போம்

இது தொடர்பாக மும்பையில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ராஜ் தாக்கரே, "உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்களை இங்கு வந்து இந்தியைத் திணிக்க முயன்றால் அவர்களை மகாராஷ்டிராவிலிருந்து உதைத்து, விரட்டி அடிப்பேன்.. உ.பி. மற்றும் பீகார் மக்கள் ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள்.. இந்தி எங்களுடைய மொழி இல்லை. எனவே, இங்குக் கொண்டு வர வேண்டும்.

எனக்கு எந்தவொரு மொழி மீதும் வெறுப்பில்லை. ஆனால், அதைத் திணிக்க முயன்றால் நான் உங்களை நிச்சயம் உதைத்து வெளியேற்றுவேன். உங்கள் நிலமும் மொழியும் போனால், உங்களின் அடையாளமே அழிந்துவிடும். எனவே, எங்கள் மொழியை நிச்சயம் விட்டுத் தர மாட்டோம்" என்று அவர் தெரிவித்தார்.

கடைசி வாய்ப்பு

மராத்தி மக்களுக்குக் கிடைத்துள்ள கடைசி வாய்ப்பு தான் மும்பை மாநகராட்சி தேர்தலை என்று குறிப்பிட்ட அவர், மராத்தி மக்களின் இறுதித் தேர்தல் இது என்றும் தாக்கரே அழுத்தமாகத் தெரிவித்தார். அவர் மேலும், "இந்த அருமையான வாய்ப்பைத் தவறவிட்டால், நீங்கள் எல்லோரும் நிச்சயமாக அழிந்துவிடுவீர்கள். மராத்தி மக்களுக்காகவும், மகாராஷ்டிராவுக்காகவும் நாம் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். இந்த நெருக்கடி இப்போது உங்கள் வீட்டு வாசலுக்கு வந்திருக்கிறது. மும்பை நகரம் எத்தனையோ மக்களின் தியாகத்தால் பெறப்பட்டது. அவர்களுக்கு நாம் என்ன பதில் சொல்வோம் என்பதைச் சற்றே யோசித்துப் பாருங்கள்" என்றார்.

தொடர்ந்து தனது கட்சி நிர்வாகிகளுக்கு அவர், "தேர்தல் நாளில் காலை 6 மணிக்கு பூத் ஏஜெண்டுகள் தயாராக இருங்கள். விழிப்புடன் இருக்க வேண்டும். யாரும் கவனக்குறைவாக இருக்க வேண்டாம். ஒரு முறை வாக்களித்த நபர் மீண்டும் வாக்களிக்க வந்தால், அவர்களை உடனடியாக வெளியேற்றுங்கள்" எனவும் அவர் வாக்காளர்களுக்குத் தீவிரமாக வலியுறுத்தினார்.

போலி இந்துத்துவம்

பாஜகவின் சித்தாந்தத்தை "போலி இந்துத்துவம்" என்று விமர்சித்த தாக்கரே சகோதரர்கள், மும்பைக்கு வரும் ஆபத்தைத் தடுக்கவே கருத்து வேறுபாடுகளைத் தாண்டி தாங்கள் இணைந்ததாகக் குறிப்பிட்டனர். மேலும், மராத்தி மக்களின் நலன், இந்துக்கள் மற்றும் ஒட்டுமொத்த மகாராஷ்டிராவின் நலன் கருதியே இந்தக் கூட்டணியை அமைத்ததாகவும் குறிப்பிட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+