கோயிலுக்கு வழிகேட்ட உ.பி. சாதுக்கள்?.. "பிள்ளை பிடிக்க வந்தியா?" அடித்து உதைத்த மக்கள்.. வீடியோ

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிராவில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த சாதுக்கள் 4 பேரை குழந்தை கடத்தல்காரர்கள் என நினைத்து, ஊர் மக்கள் சேர்ந்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தைகளை கடத்திச் செல்பவர் என தவறாக நினைத்து, அப்பாவிகள் அடித்துக் கொல்லப்படும் சம்பவம் நாட்டில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. வாரம் ஒரு முறையேனும் இதுபோன்ற செய்திகள் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன.

இந்த விவகாரத்தில் அந்தந்த போலீஸார் நடவடிக்கை எடுக்கும் போதிலும், இதுபோன்ற சம்பவங்களை தடுக்க கடுமையான சட்டம் இயற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். தற்போது இதுபோன்ற ஒரு சம்பவம்தான் மகாராஷ்டிராவில் நடைபெற்றுள்ளது.

சிறுவனிடம் வழிகேட்ட சாதுக்கள்

சிறுவனிடம் வழிகேட்ட சாதுக்கள்

உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 4 சாதுக்கள், நாட்டில் உள்ள சிவன் கோயில்களை தரிசிப்பதற்காக காரில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். உத்தரபிரதேசத்தில் இருந்து கடந்த 10 நாட்களாக ஒவ்வொரு மாநிலமாக செல்லும் இவர்கள் நேற்று மகாராஷ்டிரா மாநிலம் சங்லி மாவட்டத்தில் உள்ள லவானா கிராமத்தை அடைந்தனர். இது கர்நாடகா எல்லை அருகே அமைந்துள்ள கிராமம் ஆகும். பின்னர் அங்குள்ள ஒரு கோயிலுக்கு சென்று வழிபட்ட அவர்கள், அங்கிருந்து கர்நாடகாவின் பிஜாபூருக்கு செல்ல அங்கிருந்த சிறுவனிடம் வழிகேட்டுள்ளனர்.

சரமாரி தாக்குதல்

சரமாரி தாக்குதல்

இதனை பார்த்த கிராம மக்கள், அந்த சாதுக்களை குழந்தை கடத்தல்காரர்கள் என நினைத்துக் கொண்டு அவர்களை சூழ்ந்தனர். தொடர்ந்து, சாதுக்களிடம் ஆதார் அட்டைகளை காண்பிக்குமாறு அவர்கள் கூறினார். ஆனால் அவர்களிடம் ஆதார் அட்டை இல்லை. இதையடுத்து, கிராம மக்கள் அவர்களை சரமாரியாக தாக்கினர். கல், கம்பு உள்ளிட்டவற்றை கொண்டு நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் சாதுக்களின் மண்டை உடைந்தது ரத்தம் வந்தது.

 மருத்துவமனையில் அனுமதி

மருத்துவமனையில் அனுமதி

இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் அங்கு உடனடியாக வந்து, கிராம மக்களிடம் இருந்து சாதுக்களை மீட்டனர். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் உத்தரபிரதேசத்தின் அகாடா மடத்தைச் சேர்ந்த சாதுக்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் அவர்களை அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களில் 3 பேருக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளதால் அவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 கைது

கைது

இச்சம்பவம் குறித்து புகார் கொடுக்குமாறு போலீஸார் வற்புறுத்திய போதிலும், சாதுக்கள் புகார் கொடுக்க மறுத்துவிட்டனர். இருந்தபோதிலும், போலீஸாரே முன்வந்து வழக்கு பதிவு செய்து அந்த கிராமத்தைச் சேர்ந்த 6 பேரை கைது செய்தனர். மேலும் பலரை தேடி வருகின்றனர். இந்நிலையில், சாதுக்களை கிராம மக்கள் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை அடிப்படையாக கொண்டு போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+