இந்திய முதலீட்டாளர்களுக்கு ‘இடி’! 16.97 லட்சம் கோடி இழப்பு.. டிரம்ப் முடிவால் திணறும் பங்குச்சந்தை
மும்பை: பங்குச் சந்தை கடும் சரிவைச் சந்தித்து வருகிறது. கடந்த 5 நாட்களில் முதலீட்டாளர்கள் ரூபாய் 16.97 லட்சம் கோடியை இழந்துள்ளனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரிவிதிப்பு கொள்கை, இந்தியப் பங்குச் சந்தைகளிலும் கடுமையாக எதிரொலித்து வருகிறது.
இன்று காலை, பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கிய முதலே சரிவில் இருந்து வந்தது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 363 புள்ளிகள் சரிந்து 76,952 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 108 புள்ளிகள் சரிந்து 23,273 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

கடந்த ஐந்து நாட்களில், மும்பை பங்குச் சந்தை குறியீடு பி.எஸ்.இ சுமார் 2,290.21 புள்ளிகள் சரிந்து வர்த்தகமாகி வருகிறது. ஐந்தாவது நாளாக இன்றைய வர்த்தகத்தில், இன்று 30 பங்கு கொண்ட மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் சுமார் 1,018.20 புள்ளிகள் சரிந்து இரண்டு வார குறைந்த அளவான 76,293.60 என்ற புள்ளிகளில் நிலைபெற்றது.
தொடர்ந்து அந்நிய நிதி வெளியேற்றம் மற்றும் வர்த்தகப் போரை தொடங்கி வைத்துள்ள அமெரிக்க வரி விதிப்பு காரணமாக, கடந்த ஐந்து நாட்களாக இந்திய பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் சுமார் ரூ.16.97 லட்சம் கோடி அளவுக்கு இழப்பை சந்தித்துள்ளனர்.
மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மூலதனம் கடந்த ஐந்து நாட்களில் சுமார் ரூ.16,97,903.48 கோடி சரிந்து ரூ.4,08,52,922.63 கோடியாக உள்ளது. இன்று மட்டும் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு சுமார் ரூ.9,29,651.16 கோடி சரிவை பதிவு செய்துள்ளது.
பங்குச் சந்தை சரிவுக்கான காரணம் குறித்து, ஜியோஜித் நிதிச் சேவைகளின் ஆராய்ச்சித் தலைவர் வினோத் நாயர் கூறுகையில், அமெரிக்க வர்த்தகக் கொள்கைகள் மற்றும் கரன்சிகளின் தொடர்ச்சியான நிச்சயமற்ற தன்மை, உள்நாட்டு பொருளாதார வளர்ச்சி சார்ந்த நிலைத்தன்மையின்மை ஆகியவற்றால் பங்குச் சந்தை சரிவைச் சந்தித்து வருகிறது." எனத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று, விதிவிலக்குகள் இல்லாமல் எஃகு மற்றும் அலுமினிய இறக்குமதிகளுக்கு சீரான 25% வரியை அறிவித்தார். இந்த முடிவு, உள்நாட்டுத் தொழில்களை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதேசமயம் வர்த்தக மோதலையும் ஏற்படுத்தும் அபாயத்தைக் கொண்டுள்ளது.
டிரம்ப் அனைத்து இறக்குமதி வரி விலக்குகளையும் ரத்து செய்தார். புதிய கொள்கை மார்ச் 4 முதல் அமலுக்கு வரும் என்று வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். கனடா, பிரேசில், மெக்சிகோ, தென் கொரியா மற்றும் முன்னர் விலக்கு அளிக்கப்பட்ட பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% விகிதம் பொருந்தும்.
எஃகு மற்றும் அலுமினியம் மீது 25% வரி விதிக்கும் டொனால்ட் டிரம்பின் சமீபத்திய முடிவு மெக்சிகோ, பிரேசில், தென் கொரியா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளை மிகவும் பாதிக்கும் என்று ஜியோஜித் நிதி சேவைகளின் தலைமை முதலீட்டு நிபுணர் டாக்டர் வி.கே. விஜயகுமார் கூறியுள்ளார்.
ஃபெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல் செனட் வங்கி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரக் குழுவில் உரையாற்றத் தயாராகி வருவதால் வர்த்தகர்களும் முதலீட்டாளர்களும் எச்சரிக்கையாக உள்ளனர். இதன் காரணமாகவும் பங்குச் சந்தை இழப்பைச் சந்தித்து வருகிறது.
NSDL தரவுகளின்படி, நடப்பு ஆண்டில் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தைகளில் இருந்து 9.94 பில்லியன் டாலரை திரும்பப் பெற்றுள்ளனர், இது பங்குச் சந்தை செயல்திறனில் பிரஷரை அதிகரித்துள்ளது எனக் கூறப்படுகிறது.
மேலும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டாததன் எதிரொலியாகவும், இந்திய பங்குகளை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் விற்று வருவதன் காரனமாகவும், இந்தியப் பங்குச் சந்தைகளில் வீழ்ச்சி நீடித்து வருவதாகத் தெரிகிறது.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications