Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முகேஷ் அம்பானியின் லிட்டில் பிரின்சஸ்! இஷா அம்பானிக்கு இவ்ளோ சொத்துக்களா? வாய்பிளக்க வைக்கும் தகவல்!

Subscribe to Oneindia Tamil

மும்பை : தனது தந்தை மரணத்திற்கு பிறகு தனக்கு நேர்ந்தது போல் தனது வாரிசுகளுக்கு ஏற்பட்டு விட கூடாது என்பதில் உறுதியாய் இருக்கும், முகேஷ் அம்பானி தனது காலத்திலேயே நிறுவனத்தின் பொறுப்புகளை தனது 3 வாரிசுகளுக்கும் பிரித்து அளித்து வரும் நிலையில், அவரது மகளான இஷா அம்பானி குறித்த சில தகவல்களை பார்க்கலாம்..

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் யார் என்றால் குழந்தை கூட கண்ணை மூடிக் கொண்டு சொல்லும் அம்பானி குடும்பம் என்று. அந்த அளவுக்கு இந்தியாவின் கோடீஸ்வரக் குடும்பத்தைப் புகழ்பெற வைத்தவர் திருபாய் அம்பானி.

அவரது மறைவுக்கு முன்னதாக தங்களது இரு மகன்களான முகேஷ் அம்பானிக்கும், அனில் அம்பானிக்கும் சொத்துக்களை பிரித்துக் கொடுக்காமல் மறைந்தார். இதனையடுத்து முகேஷ் மற்றும் அவரது சகோதரர் அனில் ஆகியோர் ரிலையன்ஸ் நிறுவனங்களின் தலைமை பொறுப்பை கூட்டாக வகித்து வந்தனர்.

ரிலையன்ஸ் குடும்பம்

ரிலையன்ஸ் குடும்பம்

இதையடுத்து சொத்துகளை பிரிப்பது தொடர்பாக அவர்களுக்குள் சகோதர சண்டை ஏற்பட்டதால் அவரது தாயாரின் சமரசத்தை தொடர்ந்து ரிலையன்ஸ்-ன் சொத்துக்கள் பிரிக்கப்பட்டது. இதையடுத்து முகேஷ் அம்பானி உலக அளவில் பிரபலமாக தொடங்கினார். அவரது சொத்து மதிப்பு 100 மில்லியன் டாலரை தாண்டிய நிலையில் அவரது சகோதரர் அனில் அம்பானி தவறான கொள்கை முடிவுகளால் கடனாளியாகும் நிலைக்கு தள்ளப்பட்டார். இதை யடுத்து முகேஷ் அம்பானியே தனது சகோதரருக்கும் உதவ வேண்டிய நிலை ஏற்பட்டது.

இஷா அம்பானிக்கும் பொறுப்பு

இஷா அம்பானிக்கும் பொறுப்பு

இந்த நிலையில் தான் தனக்கு ஏற்பட்ட சிரமங்கள் தனது குழந்தைகளுக்கும் ஏற்படக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் முகேஷ் அம்பானி அதனை உணர்ந்தே தற்போதே தனது வாரிசுகளுக்கு சொத்துக்களை பிரித்து அளித்து வருகிறார். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜியோ நிறுவன தலைமை பொறுப்பை தனது மகன் ஆகாஷ் அம்பானிக்கு முகேஷ் அம்பானி கொடுத்தார். ஆகாஷ் அம்பானியுடன் இரட்டையராகப் பிறந்த இஷா அம்பானிக்கும் முக்கிய பொறுப்பை வழங்கி உள்ளார். தற்போது இந்தியா மட்டுமல்லாது பல நாடுகளிலும் பரந்து விரிந்திருக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ரீடைல் மற்றும் இ காமர்ஸ் பிரிவின் பொறுப்பு இஷா அம்பானிக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், அமேசான் பிளிப்கார்ட் போன்ற ஜாம்பவான்களுடன் போட்டி போடும் அளவுக்கு இஷாவுக்கு திறமை இருப்பதை உணர்ந்தே இந்த முடிவை முகேஷ் அம்பானி எடுத்து இருக்கிறார்

வர்த்தக திறமை

வர்த்தக திறமை

தனது உடன் பிறந்த சகோதரன் ஆகாஷ் அம்பானியை போலவே இஷா அம்பானியும் சளைத்தவர் அல்ல பிசினஸ் மேனேஜ்மென்ட் படிப்பில் ஸ்டாண்ட்போர்ட் யூனிவர்சிட்டியில் பட்டம் பெற்றுள்ளார். தொடர்ந்து மறைமுகமாக ரிலையன்ஸ் நிறுவன வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியுள்ளார் அதுமட்டுமல்லாது பார்ச்சூன் பத்திரிகை நிறுவனமானது கடந்த ஆண்டு அவரை 'கடமையின் வாரிசு' என்று பெருமைப்படுத்தியதோடு 'இந்தியாவின் 21வது சக்தி வாய்ந்த பெண்மணி' என்றும் புகழாரம் சூட்டியது.

ஆடம்பர மாளிகை

ஆடம்பர மாளிகை

தற்போது முழுக்க முழுக்க ரிலையன்ஸ் பொருட்களை மட்டுமே விற்பனை செய்யும் வகையில் ஒரு மிகப்பெரிய ஷாப்பிங் மாலை உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள இஷா அம்பானி கடந்த 2018 ஆம் ஆண்டு மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்ற விழாவில் ரியல் எஸ்டேட் துறையில் கொடிகட்டி பறக்கும் ஆனந்த் பிரமாலை திருமணம் செய்து கொண்டார். அப்போது அவரது தந்தை இஷாவுக்கு அளித்த விலையுயர்ந்த ஆடம்பர மாளிகையை பரிசளித்தார். அவரது கணவரது குடும்பமும் சளைத்ததல்ல. அவர்கள் வசிக்கும் வீடு இந்தியாவின் மிக விலை உயர்ந்த வீடுகளில் ஒன்றாகும்.

சொத்து மதிப்பு எவ்வளவு?

சொத்து மதிப்பு எவ்வளவு?

தெற்கு மும்பையில் அல்டாமண்டு சாலையில் உள்ள அன்பிலாவில் இஷா அம்பானி மற்றும் அவரது கணவர் வசிக்கும் இந்த வீடு பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அடுத்தபடியாக உலகின் மிக விலை உயர்ந்த வீடுகளில் ஒன்றாகும். இதுமட்டுமின்றி உலகின் மிக விலையுயர்ந்த கார்கள், நகைகள் என அவரது தந்தை அளித்த சீர்வரிசைப் பொருட்கள் மட்டுமே பல நூறு கோடிகளை தாண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. மகன்களை போலவே மகளையும் நீதா அம்பானி கண்டிப்புடன் வளர்த்தாலும் தனது மகள் மீது மட்டும் எப்போதும் முகேஷ் அம்பானிக்கு சற்று பாசம் அதிகம். அதனால் எப்போதும் அவரை தன் அருகிலேயே வைத்துக் கொள்ள விரும்புவார் முகேஷ்.

5 ஆயிரம் கோடி சொத்துகள்

5 ஆயிரம் கோடி சொத்துகள்

இஷா அம்பானியின் தனிப்பட்ட சொத்து மதிப்பு மட்டும் சுமார் 5 ஆயிரம் கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படும் நிலையில் தற்போது ஏற்றுள்ள தலைமை பொறுப்புகளால் அவரது சொத்து மதிப்பு இன்னும் உயரம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது முப்பது வயதாகும் இஷா அம்பானி 2018 ஆம் ஆண்டிலேயே போஃர்ப்ஸ் பத்திரிக்கையில் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. வரும் ஆண்டுகளில் சகோதரர்களை போல அவரும் வர்த்த உலகில் ஜொலிப்பாரா இஷா அம்பானி என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+