"எலியும் வடாவும்".. சாக்கடையில் தகதகவென மின்னிய தங்கம்.. வெலவெலத்து போன சுந்தரி.. அப்பறம் என்னாச்சு?
குப்பை தொட்டியில் இருந்து காணாமல் போன நகைகளை போலீசார் மீட்டுள்ளனர்
மும்பை: ஆச்சரிய சம்பவம் மும்பையில் நடந்துள்ளது.. இதையடுத்து மும்பை போலீசாரை, பொதுமக்கள் பாராட்டி கொண்டிருக்கிறார்கள்.
மகாராஷ்டிராவின் மும்பை நகர் அருகே கோகுல்தம் என்ற காலனி பகுதி உள்ளது.. இங்கு வசித்து வருபவர் சுந்தரி.. இவரது மகளுக்கு விரைவில் திருமணம் நடக்க போகிறது.
திருமண செலவுக்காக, சுந்தரி தன்னிடம் இருந்த தங்க நகைகளை, அங்குள்ள ஒரு வங்கியில் அடகு வைக்க சென்றுள்ளார்..

குப்பை தொட்டி
அப்போது சாலையில், குழந்தைகளை வைத்து கொண்டு, பெண் ஒருவர் பிச்சை எடுத்து கொண்டு இருந்துள்ளார்.. அந்த பெண்ணை பார்த்ததும் பரிதாபப்பட்ட சுந்தரி, பிரெட் (வடா பாவ்) என்று நினைத்து, கையில் இருந்த தங்க நகைகள் உள்ள கவரை, அந்த பெண்ணிடம் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்.. அந்த பெண்ணும், சுந்தரி கொடுத்த கவரை பிரித்து பார்க்காமல், பக்கத்தில் இருந்த குப்பை தொட்டியில் போட்டு விட்டு சென்று விட்டார்... வழக்கம்போல் அந்த குப்பை தொட்டியை தேடி வரும் சில எலிகள் வந்துள்ளன..

பிரெட் பாக்கெட்
சாப்பிட ஏதும் கிடைக்குமா? என்று ஆராய்ந்துள்ளன.. அப்போது பிரெட் இருந்த தங்க நகை பொட்டலம் கிடைத்துள்ளது.. அதை தூக்கி கொண்டு, எதிர்புறமிருந்த சாலையோர கால்வாய் பகுதிக்கு சென்றுள்ளன.. இதனிடையே வீட்டிற்கு போன சுந்தரி, நகைகளை காணவில்லை என்று பதறினார்.. சாலையில் நகைகள் விழுந்திருக்குமா என்று வழியெல்லாம் தேடினார்.. பிறகுதான், பிச்சை எடுத்த பெண்ணிடம் வடா பாவ் பாக்கெட் தந்த ஞாபகம் வந்தது.. உடனே அந்த பெண்ணை சந்தித்த இடத்துக்கு சென்று பார்த்தார். ஆனால், அவரை காணோம்.

பிரெட் துண்டுகள்
எங்கு போய் தேடுவது என்று தெரியாத சுந்தரி, போலீசாரிடம் சென்று புகார் தந்தார்.. மும்பை போலீசாரும் இது தொடர்பான விசாரணையில் இறங்கினர்.. இதற்கான தனிப்படை அமைத்து, அந்த பெண்ணை தேட ஆரம்பித்தனர்.. பிறகு, அந்த பகுதியில் சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்தனர்.. இறுதியில் அந்த பெண்னை கண்டுபிடித்தனர்.. அவரிடம் விசாரித்தபோது, "அந்த கவரை பிரித்து பார்த்தேன்.. அவர் தந்த (பிரெட்) வடா பாவ் காய்ந்து போய் இருந்தது.. அதனால் சாப்பிடாமல், கவரோடு குப்பை தொட்டியில் வீசி விட்டேன்" என்று சொல்லி உள்ளார்.

குப்பை தொட்டிகள்
இதைக் கேட்டு அதிர்ந்து போன போலீசார், சம்பந்தப்பட்ட குப்பை தொட்டியில் தேட ஆரம்பித்தனர்.. ஆனால், குப்பை தொட்டியில் அந்த கவர் கிடைக்கவே இல்லை.. இதனால் மறுபடியும் குழம்பி போன போலீசார், எதிர்புறமிருந்த சிசிடிவி கேமராக்களில் அலசி ஆராய்ந்து உள்ளனர்... அப்போதுதான், சில எலிகள் நடமாட்டம் அதில் பதிவாகி இருந்தது.. உடனே, அங்கிருக்கும் கால்வாய் பகுதிகளில் தேட ஆரம்பித்தனர்.. அந்த எலிகள், தங்க நகைகளை அந்த கால்வாயிலேயே போட்டுவிட்டு, பிரெட்டை மட்டும் சாப்பிடுவதற்காக எடுத்து சென்றிருந்தது தெரியவந்தது.

தேங்க்ஸ் டூ எலிகள்
இதையடுத்து, தங்க நகைகளை மீட்ட போலீசார், அதை சுந்தரியிடம் தந்துள்ளனர்.. இதனால் மும்பை போலீசாரை அந்த பகுதி மக்கள் மனம் திறந்து பாராட்டி கொண்டிருக்கிறார்கள்.. மொத்தம் 100 கிராம் தங்க நகைகளாம்.. அதாவது கிட்டத்தட் 12 பவுனுக்கு மேலே வரும்.. நல்லவேளை எலிகள், அந்த பகுதியிலேயே தங்க நகைகளை போட்டுவிட்டு போகவேதான், மீட்க முடிந்துள்ளது.. வேறு எங்காவது கவரை இழுத்துக் கொண்டு போட்டுவிட்டு இருந்தால், சுந்தரி நிலைமை பரிதாபம்தான்.. எலிகளுக்கு தான் நன்றி சொல்லணும் போல..!












Click it and Unblock the Notifications