எல்லாம் ஸ்கிரிப்ட்.. ஆபாச நடிகை பூனம் பாண்டேவை முத்தமிட முயன்ற ரசிகர்.. கொந்தளிக்கும் மக்கள்!
மும்பை: ஆபாச பட நடிகை பூனம் பாண்டேவுடன் செல்ஃபி எடுத்த போது, ரசிகர் ஒருவர் முத்தம் கொடுக்க முயன்ற சம்பவம் ரசிகர்களிடையே விவாதமாகி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தில் வேண்டுமென்றே சர்ச்சையை உருவாக்கி விளம்பரம் தேடி கொள்வதாக ரசிகர்கள் பூனம் பாண்டேவை விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.
2013ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான நாஷா படத்தின் மூலம் அறிமுகமானவர் பூனம் பாண்டே. இவர் பாலிவுட்டில் கால் பதிப்பதற்கு முன்பாக மாடலிங்கில் ஈடுபட்டு வந்தார். சன்னி லியோனை போல் பூனம் பாண்டேவையும் ஒரு பாடலில் ஆட வைக்கவும், கவர்ச்சி படங்களில் நடிக்க வைக்கவும் வைத்தனர். ஆனால் பூனம் பாண்டேவுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை.

இதன்பின் மாடலிங்கில் ஈடுபட்ட பூனம் பாண்டே, கடந்த சில ஆண்டுகளாக ஆபாச வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இதனால் பூனம் பாண்டேவை ரசிகர்களும் ஆபாச நடிகை என்றே அடையாளப்படுத்தி வருகின்றனர். இதனிடையே கடந்த ஆண்டு பிப்ரவரி மாததில் திடீரென பூனம் பாண்டே உயிரிழந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியது.
ஆனால் அடுத்த நாளே கர்ப்பப்பை புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வுக்காகவே உயிரிழந்ததை போல் செய்தி வெளியிட்டதாக பூனம் பாண்டே தெரிவித்தார். இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் கடுமையான விமர்சனத்தை பெற்றது. இறப்பில் இப்படி விளம்பரம் தேடலாமா என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இதனைத் தொடர்ந்து பூனம் பாண்டே வழக்கமாக தனது மாடலிங்கில் கவனம் செலுத்தி வந்தார்.
இந்த நிலையில் நேற்று மும்பையில் நிகழ்ச்சி ஒன்றுக்காக வந்த பூனம் பாண்டே, அங்கிருந்த ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று செல்ஃபி எடுக்க ஒப்புதல் அளித்தார். அப்போது முதல் நபராக செல்ஃபி எடுக்க வந்த நபர் ஒருவர், மொபைலை கையில் எடுத்து கொண்டு உடனடியாக பூனம் பாண்டேவுக்கு முத்தம் கொடுக்க முயன்றார். இதையடுத்து அங்கிருந்து சில அடிகள் பூனம் பாண்டே விலகி சென்றார்.
இதன்பின் அவரின் உதவியாளர்கள் அந்த நபரை தடுத்து நிறுத்தினர். இந்த வீடியோ தேசிய அளவில் ட்ரெண்டான நிலையில், ரசிகர்கள் பலரும் இதுவும் பூனம் பாண்டேவின் விளம்பர மோகம்தான் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதமும் பூனம் பாண்டே இதுபோன்ற சர்ச்சையை கிளப்பி விளம்பரம் தேடிக் கொள்வதாகவும் கருத்து கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications