"ஆணுறை".. அதுவும் பயன்படுத்தப்பட்ட ஆணுறை.. எங்கே கிடக்குதுன்னு பார்த்தீங்களா.. அதிர்ந்த அதிகாரிகள்
பயன்படுத்தப்பட்ட ஆணுறை ஒன்று, ஓடும் ரயிலில் காலை வரை அப்படியே கிடந்ததாம்
மும்பை: மும்பையின் உள்ளூர் ரயில்களில் சுகாதாரமற்ற நிலை நிலவுவதாக பயணிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்த நிலையில், இப்போது ஒரு அருவருக்கத்தக்க சம்பவம் ஒன்று முதல்முறையாக நடந்துள்ளது அதிர்ச்சியை உண்டுபண்ணி வருகிறது.
உத்தரப் பிரதேச மாநிலத்திலிருந்து டெல்லி செல்லும் சத்பாவனா எக்ஸ்பிரஸ் ரயிலில் 27 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் ரயில்வே ஊழியர் ஒருவர்.. இதையடுத்து, அந்த ஊழியர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்...
ஆனால், அடுத்த சில நாட்களிலேயே, இன்னொரு ரயிலில், இன்னொரு பாலியல் குற்றச்சம்பவம், அதே உத்தரபிரதேசத்தில் நடைபெற்று அதிர்ச்சியை ஏற்படுத்திவருகிறது.

செக்கிங் ஆபீசர்
சம்பல் ரயில்வே ஸ்டேஷனுக்கு 30 வயது பெண், தன்னுடைய 2 வயது மகனுடன் சென்றுள்ளார்.. டிடிஇ என்று சொல்லப்படும் அந்த டிக்கெட் பரிசோதகரை, அப்பெண்ணுக்கு 4 வருடமாக தெரியுமாம்.. அதனால், அவர் அழைத்ததும், ஏசி பெட்டிக்கு அவருடனேயே சென்றார். இரவு 10 மணி போல, அந்த ஆபீசரும், அவரது நண்பரும், அந்த பெண் அமர்ந்திருக்கும் இடத்துக்கு வந்து, தங்களிடமிருந்த தண்ணீரை தந்து குடிக்க சொன்னார்கள்.. அந்த தண்ணீரில் மயக்க மருந்து கலக்கப்பட்டிருந்த நிலையில் அது தெரியாத அந்த பெண், தண்ணீரை வாங்கி குடித்தார். ஆனால், குடித்த அடுத்த சில நிமிடங்களில் அப்பெண்ணுக்கு லேசான மயக்கம் வந்துவிட்டது..

அரைமயக்கம்
உடனே, அந்த பெண்ணுடன் தூங்கி கொண்டிருந்த 2 வயது குழந்தையை, பக்கத்து படுக்கைக்கு மாற்றிவிட்டு, 2 பேரும் சேர்ந்து அந்த பெண்ணைக் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள்.. அந்தப்பெண் அரை மயக்கத்தில் கத்த முயன்றார்.. ஆனால், அவரால் முடியவில்லை... 2 பேருமே வன்கொடுமை செய்துவிட்டு தப்பி சென்றுவிட்டனர்... மறுநாள் காலையில், தான் செல்லவேண்டிய இடத்துக்கு அந்த பெண் சென்றதுடன், போலீசாருக்கும், ரயில்வே துறைக்கும் புகாரை தெரிவித்தார்.. இது தொடர்பான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது என்றாலும், ரயில்வேக்களில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவது பயணிகளை அதிர செய்து வருகிறது.

தள்ளுமுள்ளு
ரயில் பயணங்கள், சொகுசாக இருக்க வேண்டும் என்பது இல்லாவிட்டாலும், குறைந்த செலவில் கண்ணியமான முறையில், அதைவிட முக்கியமாக பாதுகாப்பான முறையில் பயணம் இருக்க வேண்டும் என்பதே பெரும்பாலானோரின் எண்ணமாக உள்ளது.. இதோ இன்னொரு சம்பவம் மும்பையில் நடந்துள்ளது.. மும்பை புறநகர் ரெயிலில் பயணிகள் கூட்டம் எப்பவுமே அதிகமாக இருக்கும். இந்த ரெயிலில் இடம் பிடிப்பது என்பது மிகப்பெரிய பிரச்சனை.. கூட்ட நெரிசலால் தள்ளுவது, இடிப்பது, மோதிக் கொள்வது என பல சம்பவங்கள் ரயிலுக்குள் நடப்பது இயல்பான விஷயம்..

ஆணுறையா
எனவேதான், இப்படியான சம்பவங்கள் நடக்காமல் இருக்கவும், பாதுகாப்பிற்காகவும் சில புறநகர் ரெயிலில் சிசிடிவி கேமிராக்கள் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த ரெயில்களில் சுகாதார குறைபாடு உள்ளது என்றும் விமர்சனங்கள் அடிக்கடி எழுந்தபடியே உள்ளன.. இந்நிலையில்தான், பயணி ஒருவர் ஆடிப்போய்விட்டார்.. ஆம்பர்நாத் உள்ளூர் ரெயிலில் நேற்று இரவு 9.30 மணிக்கு அந்த நபர் ஏறியிருக்கிறார்.. அந்த ரெயிலில் சீட் ஒன்றில் ஒரு ஆணுறை கிடந்ததாம்.. அதுவும் பயன்படுத்தப்பட்ட ஆணுறையாம்.. கர்ரே சாலை பகுதியில் இருந்து, அந்த ரெயில் தோம்பிவலி வந்து சேரும்வரை, பெட்டியில் அப்படியே கிடந்ததாம் அந்த ஆணுறை..

ஆணுறை போட்டோ
இதுபற்றிய புகார், மத்திய ரெயில்வேயின் மண்டல மேலாளருக்கு பறந்தது. இதைக்கேட்டு அதிர்ந்து போன அவரும், ரெயில்வே பாதுகாப்பு படைக்கு தகவல் தெரிவித்து விசாரிக்கும்படி உத்தரவிட்டார்.. இதுகுறித்த போட்டோ ஒன்றும் இணையத்தில் வெளியாகி உள்ளது.. " என்ன ஒரு காட்சி.. பயன்படுத்தப்பட்ட ஒரு ஆணுறை எனது இருக்கைக்கு எதிரே உள்ளது. இப்போது காலை 9.40 மணி ஆகிறது" என்று பதிவிட்டு, ரெயிலின் சீட்டில் பயன்படுத்தப்பட்ட ஆணுறை கிடக்கும் போட்டோவையும் டுவிட்டரில் ஒருவர் வெளியிட்டு உள்ளார்.

டேக் ஃபோட்டோ
அதில், மத்திய ரெயில்வே அமைச்சர் மற்றும் மத்திய ரெயில்வே ஆகியோரையும் டேக் செய்துள்ளார்.. ஆனாலும், அந்த சிசிடிவி காட்சிகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை என்கிறார்கள்.. தொடர்ந்து இது சம்பந்தமான விசாரணையும் நடந்து வருகிறது. இந்த போட்டோவை பார்த்த ட்விட்டர்வாசிகள், பொதுமக்கள் பயணிக்கக் கூடிய ரயிலில் இப்படி செய்தது யார்? என்று கேள்விகேட்டு, உரிய நடவடிக்கை எடுக்க ரயில்வே நிர்வாகத்திற்கு புகார் அளிக்குமாறும் அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications