Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வினோத் காம்ப்ளியின் மருத்துவ கட்டணம்! நெருங்கிய நண்பர் பகிர்ந்த மேஜர் தகவல்! உடல்நிலை எப்படி இருக்கு

Subscribe to Oneindia Tamil

மும்பை: முன்னாள் கிரிக்கெட் வீரரும் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினின் சிறு வயது நண்பருமான வினோத் காம்ப்ளி இப்போது உடல்நிலை பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே அவரது உடல்நிலை தொடர்பாகவும் மருத்துவச் சிகிச்சை தொடர்பாகவும் இப்போது சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சிறு வயது நண்பர் வினோத் காம்ப்ளி. பல சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள வினோத் காம்ப்ளி, கடந்த சில காலமாகவே பல்வேறு உடல்நிலை பிரச்சினை காரணமாக அவதிப்பட்டு வருகிறார்.

cricket vinod kambli

52 வயதான வினோத் காம்ப்ளியின் உடல்நிலை கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென மோசமான நிலையில், அவர் தானேவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வினோத் காம்ப்ளி உடல்நிலை:

இதற்கிடையே வினோத் காம்ப்ளி உடல்நிலை தொடர்பாகவும் அவரது மருத்து சிகிச்சை தொடர்பாக சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. வினோத் காம்ப்ளி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்து மீண்டு வந்துவிட்டாலும், அவரது உடல்நிலை இன்னும் டிஸ்சார்ஜ் செய்யப்படும் அளவுக்குச் சீராகவில்லை என்றே கூறப்படுகிறது..

இதற்கிடையே அவரது நண்பர் மார்கஸ் கோட்டோ சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார். காம்ப்ளி உடல்நிலை சீராக இருந்தாலும், முழுமையாகக் குணமடையும் வரை ஒரு மாத காலம் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்குமாறு சொல்லி இருக்கிறேன். வேறு ஒருவர் மருத்துவச் சிகிச்சைக்கான கட்டணத்தைச் செலுத்தத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். அதேநேரம் சிகிச்சை கட்டணத்தைச் செலுத்த யார் முன்வந்துள்ளார் என்பது குறித்த தகவல்களை அவர் பகிர்ந்துள்ளார்.

சிகிச்சை கட்டணம்:

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "காம்ப்ளி இப்போது நன்றாக இருக்கிறார். சிறுநீர் தொற்று நோயால் அவருக்கு சில காலமாகவே பிரச்சினை இருந்தது. கடந்த சனிக்கிழமை அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் மருத்துமவனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நான் அவரை நேரில் சந்தித்தேன்.

அவருக்குச் சிறுநீர் தொற்று தவிர பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் இருப்பதால் ஒரு மாதம் மருத்துவமனையிலேயே இருந்து சிகிச்சை அளிக்கச் சொல்லி இருக்கிறேன். அவரது சிகிச்சைக்கு நிதியுதவி அளிக்க வேறு சிலர் தயாராக இருக்கிறார்கள். அப்போது ஏன் சிகிச்சை பெறக்கூடாது" என்றார்.

மருத்துவர்கள் தகவல்:

வினோத் காம்ப்ளி கடந்த சில நாட்களுக்கு முன்பு தானேவில் உள்ள மருத்துவமனையில் அனுமதியானார். அவரது ரசிகரும் பிரபல மருத்துவமனை உரிமையாளருமான ஒருவரே காம்ப்ளியை மருத்துவமனைக்கு அழைத்து வந்ததாகக் கூறப்படுகிறது. வினோத் காம்ப்ளி எதற்காக மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார் என்பது குறித்த துல்லியமான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

இது தொடர்பாக அவர் இப்போது சிகிச்சை பெற்று வரும் ஆக்ருதி மருத்துவமனை மருத்துவர் ஒருவர் கூறுகையில், "எங்கள் மனதில் எப்போதும் வினோத் காம்ப்ளி கிரிக்கெட் நினைவில் இருக்கும். அவர் எங்களுக்கு உத்வேகம் அளித்தவர். இதனால் நாங்கள் அனைவரும் அவருக்கு எதாவது செய்யக் கடமைப்பட்டு இருக்கிறோம். அவர் எங்களுடன் நன்றாகப் பேசுவார். சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு நன்றி சொல்வார். அவர் நிஜமாகவே ஒரு நல்ல மனிதர்" என்றார்.

1990களில் மிகவும் நம்பிக்கைக்குரிய கிரிக்கெட் வீரராக வினோத் காம்ப்ளி இருந்தார். 1993-2000க்கு நடுவே அவர் இந்தியாவுக்காக 17 டெஸ்ட் மற்றும் 104 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அவர் கடந்த காலங்களில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+