ரூ 30,000 ஓய்வூதியம்.. குடும்பம் நடத்தவே கஷ்டமா இருக்கு.. நாதழுதழுத்த வினோத் காம்ப்ளிக்கு புதிய பணி
மும்பை: முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளிக்கு மாதம் ரூ 1 லட்சம் ஊதியத்தில் மகாராஷ்டிரா தொழிலதிபர் ஒருவர் பணி வழங்கியுள்ளார்.
1990 களில் கிரிக்கெட் விளையாட்டில் அறிமுகமானவர் வினோத் காம்ப்ளி. சச்சின் டெண்டுல்கரும் வினோத்தும் இணைந்து விளையாடுவதற்கு ரசிகர்கள் அதிகம். மேலும் காம்ப்ளியும் சச்சினும் சிறு வயது முதலே நண்பர்கள்.
இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என கடுமையாக போராடுவார். அதே சமயம் இந்திய அணி தோல்வி அடைந்தால் அந்த தோல்வியை தாங்க மனமில்லாமல் சிறு பிள்ளை போல் அழுத காட்சிகளையும் நாம் பார்த்துள்ளோம்.

கிரிக்கெட்
இதனால் இவர் கிரிக்கெட்டில் மிகப் பெரிய ஸ்டாராக வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒரு சில பிரச்சினைகளால் அவரது கிரிக்கெட் விளையாட்டு முடிவுக்கு வந்தது. 2000 ஆவது ஆண்டுக்கு பிறகு இந்திய அணியில் காம்ப்ளி விளையாடவில்லை. அவருக்கு பிசிசிஐ ரூ 30 ஆயிரத்தை ஓய்வூதியமாக வழங்கி வருகிறது.

ஊடகம்
இந்த நிலையில் அண்மையில் மிட்டே எனும் ஊடகத்திற்கு காம்ப்ளி பேட்டி அளித்திருந்தார். அந்த பேட்டியில் பிசிசிஐ கொடுக்கும் பென்ஷன் தொகையை மட்டும் வைத்தே குடும்பம் நடத்தி வருகிறேன். அதற்காக நான் பிசிசிஐக்கு கடமைப்பட்டிருக்கிறேன். சச்சினுக்கு என் நிலைமை தெரியும். ஆனால் நான் அவரிடமிரு்து எந்த உதவியையும் எதிர்பார்க்கவில்லை. மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் என்னை பயிற்சியாளர் பொறுப்பில் பயன்படுத்திக் கொள்ளலாம் என காம்ப்ளி வாய்ப்பு கேட்டார்.

வாய்ப்பு
எனினும் அவருக்கு வாய்ப்பளிக்க கிரிக்கெட் சங்கம் முன் வரவில்லை. இந்த நிலையில் மகாராஷ்டிரா தொழிலதிபர் ஒருவர் வினோத் காம்ப்ளிக்கு உதவ முன் வந்துள்ளார். மகாராஷ்டிரா தொழிலதிபர் சந்தீப் தோரட் வினோத் காம்ப்ளிக்கு மாதம் ரூ 1 லட்சம் ஊதியத்தில் வேலை தருவதாக உறுதியளித்துள்ளார்.

என்ன வேலை
இதுகுறித்து மராத்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் மும்பையில் உள்ள சாயாத்ரி இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில்தான் காம்ப்ளிக்கு வேலை கிடைத்துள்ளது. இது கிரிக்கெட் தொடர்பான பணி அல்ல. அந்த நிறுவனத்தின் நிதிப் பிரிவில் ஒரு உயர்பதவி வேலை. மும்பை தொழிலதிபர் அளித்த வாய்ப்பு காம்ப்ளியின் பொருளாதார பிரச்சினையை தீர்க்கும். ஆனால் அவரது கிரிக்கெட் மீதான தாக்கத்தை தீர்க்காது. எனவே இந்த பணியை காம்ப்ளி ஏற்றுக் கொள்கிறாரா இல்லை கிரிக்கெட் லைனிலேயே செல்ல விரும்புகிறாரா என்பதை அவர்தான் சொல்ல வேண்டும் என ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications