வந்துட்டேன்னு சொல்லு.. வோடபோன் கம்பெனியில் இப்போ மத்திய அரசின் பங்கு 48.99%! அதிர்ந்த பங்குச் சந்தை
மும்பை: மத்திய அரசு நிலுவையில் உள்ள ஸ்பெக்ட்ரம் கட்டணத்தை ஈக்விட்டி பங்குகளாக மாற்ற ஒப்புதல் அளித்ததை அடுத்து, செவ்வாய்க்கிழமை காலை வர்த்தகத்தில் வோடஃபோன் ஐடியா லிமிடெட் (VI) பங்குகள், 10 சதவீதம் வரை உயர்ந்து முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
ஒரு பங்கின் விலை ரூ. 10 என்ற அடிப்படையில் 3,695 கோடி ஈக்விட்டி பங்குகளை வெளியிட திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் ரூ. 36,950 கோடி மதிப்புள்ள நிலுவைத் தொகைகள் பங்கு முதலீடாக மாற்றப்படும். இருப்பினும், வோடஃபோன் ஐடியா பங்குகளின் கடைசி முடிவு விலை ரூ. 6.8 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த மாற்றத்திற்குப் பிறகு, வோடஃபோன் ஐடியாவில் இந்திய அரசின் பங்கு 22.6% லிருந்து 48.99% ஆக உயரும். இருப்பினும், நிறுவனத்தின் செயல்பாட்டு கட்டுப்பாட்டை தாங்கள்தான், தொடர்ந்து கவனிப்போம் என்று வோடஃபோன் ஐடியா தெளிவுபடுத்தியுள்ளது.
2013 ஆம் ஆண்டு நிறுவனங்கள் சட்டத்தின்படி, கடந்த 90 வர்த்தக நாட்களின் அல்லது பிப்ரவரி 26, 2025 வரை முந்தைய 10 நாட்களின் அடிப்படையில் வெளியீட்டு விலை நிர்ணயிக்கப்பட்டது. தொலைத்தொடர்பு அமைச்சகம், செப்டம்பர் 2021 தொலைத்தொடர்பு சீர்திருத்த தொகுப்புக்கு ஏற்ப, மார்ச் 29 அன்று இந்த மாற்றத்திற்கு ஒப்புதல் அளித்தது. வோடஃபோன் ஐடியா நிறுவனம், அதிகாரப்பூர்வமாக மார்ச் 30 அன்று இந்த உத்தரவைப் பெற்றது.
இரண்டாவது முறையாக அரசு வோடஃபோன் ஐடியாவின் கடனை பங்குகளாக மாற்றுகிறது. முன்னதாக, 2023 இல், ரூ. 16,133 கோடி கடன் அதே ரூ. 10 பங்கு விலையில் மாற்றப்பட்டது.
இந்த மாற்றம் வோடஃபோன் ஐடியாவின் உடனடி நிதி அழுத்தத்தை குறைத்தாலும், 4G மற்றும் 5G நெட்வொர்க்குகளை விரிவுபடுத்துவதற்கு புதிய நிதியை திரட்டுவதில் நிறுவனம் இன்னும் சவால்களை எதிர்கொள்கிறது என்று சிட்டி ரிசர்ச் என்ற தரகு நிறுவனம் எச்சரித்துள்ளது.
கடந்த ஆண்டில் வோடஃபோன் ஐடியா பங்குகளின் மதிப்பு 50% க்கும் அதிகமாக குறைந்துள்ளது. இது நிறுவனத்தின் நிச்சயமற்ற எதிர்கால வளர்ச்சி வாய்ப்புகள் குறித்து முதலீட்டாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications