புதிய ஐடி விதிகளை அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் என்ன?- மத்திய அரசுக்கு மும்பை ஹைகோர்ட் கேள்வி
மும்பை: 2009 இல் நடைமுறைக்கு வந்த தற்போதைய தகவல் தொழில்நுட்ப விதிகள் உள்ள நிலையில், சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021 ஐ அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் என்ன என்று மும்பை உயர் நீதிமன்றம் மத்திய அரசிடம் கேள்வி எழுப்பி உள்ளது.
புதிய தகவல் தொழில்நுட்ப வதிகளை அமல்படுத்துவதற்கு இடைக்கால தடை கோரிய வழக்கை மும்பை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபங்கர் தத்தா மற்றும் நீதிபதி ஜிஎஸ் குல்கர்னி ஆகியோர் அடங்கிய அமர்வு சனிக்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளது.
டிஜிட்டல் சட்ட செய்தி போர்டல் லீஃப்லெட் ( Leaflet) மற்றும் பத்திரிகையாளர் நிகில் வாக்லே ஆகியோர் மும்பை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்களில், புதிய விதிகளில் பல விதிகள் ஆட்சேபனைகளுக்கு உரியது. அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட இந்திய குடிமகனின் சுதந்திரமான பேச்சுரிமைக்கு இந்த புதிய விதிகள் பாதமான விளைவை ஏற்படுத்தும் என்று கூறியிருந்தனர்.

எழுத்து சுதந்திரம்
மேலும் இந்த விதிகள் பழைய ஐடி சட்டத்தின் எல்லைக்கு அப்பாற்பட்டவை என்றும், அரசியலமைப்பின் பிரிவு 19 (2) ஆல் பேச்சு மற்றும் எழுத்து சுதந்திரத்திற்கு எதிரான கட்டுப்பாடுகள் உள்ளதாகவும் மனுவில் கூறியிருந்தனர்.

மத்திய அரசு வாதம்
இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அனில் சிங், பத்திரிகையாளர்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா (பிசிஐ) கூட பரிந்துரைத்துள்ளது.அதுபோல் தான் இதுவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றார்.

நீதிபதி கேள்வி
அப்போது கூறுக்கிட்ட நீதிபதிகள்அமர்வு , பிசிஐ வழிகாட்டுதல்கள் நடத்தை பற்றிய ஆலோசனை நெறிமுறைகள் மற்றும் அவற்றின் மீறலுக்கு எந்த கடுமையான தண்டனையும் இல்லை. ஆனால் "பிசிஐ வழிகாட்டுதல்களில் எப்படி உன்னதமான நிலையை வைக்க முடியும்? அந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றாதது தண்டனைக்கு வழிவகுக்கும்? உங்களுக்கு சிந்தனை சுதந்திரம் இல்லாவிட்டால், நீங்கள் எப்படி எதையும் வெளிப்படுத்த முடியும்? ஒருவருடைய சிந்தனை சுதந்திரத்தை நீங்கள் எப்படி கட்டுப்படுத்தலாம்?" என்று நீதிபதிகள் அமர்வு கேள்வி எழுப்பியது,.

உயர்நீதிமன்றம்
மேலும் உயர்நீதிமன்றம், புதிய விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அதிகாரம் அளிக்கப்படும் விசேஷமாக நியமிக்கப்பட்ட குழு, குறிப்பாக விதிமுறை எண் 14 மற்றும் 16 மற்றும 9 ஆகியவற்றுக்கு மனுதாரர்கள் ஆட்சேபனை தெரிவிக்கின்றனர்.
புதிய விதிமுறைகளின் வரிசை எண்கள் 14 மற்றும் 16 ஆகிய இடைநிலைக் குழுவின் அதிகாரங்கள் மற்றும் அவசரகால சூழ்நிலைகளில் தகவல்களைத் தடுப்பது ஆகியவற்றுடன் தொடர்புடையது. இங்கே பிரச்சனைகள் இல்லை என்று சொல்லலாம் ஆனால் அவர்களின் தலைக்கு மேல் கத்தி தொங்குகிறது" என்று உயர்நீதிமன்றம் கூறியது.
மேலும் உயர்நீதிமன்றம், புதிய விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அதிகாரம் அளிக்கப்படும் விசேஷமாக நியமிக்கப்பட்ட குழு, குறிப்பாக விதிமுறை எண் 14 மற்றும் 16 மற்றும 9 ஆகியவற்றுக்கு மனுதாரர்கள் ஆட்சேபனை தெரிவிக்கின்றனர்.
புதிய விதிமுறைகளின் வரிசை எண்கள் 14 மற்றும் 16 ஆகிய இடைநிலைக் குழுவின் அதிகாரங்கள் மற்றும் அவசரகால சூழ்நிலைகளில் தகவல்களைத் தடுப்பது ஆகியவற்றுடன் தொடர்புடையது. இங்கே பிரச்சனைகள் இல்லை என்று சொல்லலாம் ஆனால் அவர்களின் தலைக்கு மேல் கத்தி தொங்குகிறது" என்று உயர்நீதிமன்றம் கூறியது.

செய்தி நிறுவனங்கள்
மனுதார்கள் தரப்பில் ஆஜரான வக்கீல் கம்பதா மற்றும் வழக்கறிஞர் அபய் நெவாகி ஆகியோர் வாதிடும் போது, மத்திய அரசு புதிய விதிகளை கொண்டு வந்து ஆன்லைனில் உள்ளடக்கத்தை வெளியிடுவதில் கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டு வந்திருக்கிறது என்றார்கள்.

தீவிரமானது
அப்போது இது "மிகவும் தீவிரமானது" என்று கூறிய மும்பை உயர்நீதிமன்றம், சட்டத்தால் வழங்கப்பட்ட பாதுகாப்பை விதிகள் எப்படி எடுத்துக்கொள்ளும் என்று கேட்டது. "ஐடி சட்டத்தின் 69 ஏ (1) (ii) இன் கீழ், 2009 விதிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. முந்தைய விதிகளை மீறாமல், புதிய விதிகளின் மூலம் கணிசமான சட்டத்தை உருவாக்காமல், அடுத்தடுத்த விதிகளை மத்திய அரசு கொண்டுவர வேண்டிய அவசியம் என்ன?" உயர்நீதிமன்றம் மேலும் கேட்டது.

இடைக்கால உத்தரவு
அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறும் போது, போலி செய்திகள், சட்டவிரோத உள்ளடக்கம் போன்றவற்றின் பரவலைத் தடுப்பதற்காக புதிய விதிகளைக் கொண்டுவர வேண்டிய அவசியத்தை மத்திய அரசு உணர்ந்ததாகக் கூறினார். வாதங்கள் முடிவில் மும்பை உயர்நீதிமன்றம் வழக்கை சனிக்கிழமை ஒத்திவைத்தது. இந்த வழக்கில் இடைக்கால நிவாரணம் தொடர்பான உத்தரவு நாளை பிறப்பிக்கப்படும் என்று அறிவித்தது.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications