மகாராஷ்டிராவில் அமைச்சரவை விரிவாக்கம்.. ''ஓரிரு நாளில் நடக்குமா?''.. துணை முதல்வர் பட்னாவிஸ் பதில்!
மும்பை: மகாராஷ்டிராவில் ஏக்னாத் ஷிண்டே தலைமையில் ஆட்சி அமைந்து ஒரு மாதம் ஆகியும் இன்னுன் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படாத நிலையில், நீங்கள் நினைப்பதற்குள் நடந்து விடும் என துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் மண்ணின் மைந்தன் என்றழைக்கப்படும் சிவசேனா கட்சியின் மீது யார் கண்பட்டதோ தெரியவில்லை.. இன்று அந்த கட்சி பல்வேறு சரிவுகளை சந்தித்துள்ளது.
சிவசேனாவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஏக்நாத் ஷிண்டேவே உத்தவ் தாக்கரேக்கு எதிராக திரும்பி, தனது தலைமையிலான ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 40 பேருடன் சேர்ந்து பாஜனதாவுடன் கூட்டணி அமைத்துக்கொண்டார்.

ஏக்னாத் ஷிண்டே முதல்வர் பதவி
இதனால் இரண்டரை ஆண்டுகள் ஆட்சிபுரிந்த உத்தவ் தாக்கரே தலைமையில் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ்-சிவசேனாவின் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. தொடர்ந்து தனது ஆதரவு எம் எல் ஏக்களுடன் ஏக்னாத் ஷிண்டே பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியையும் கைப்பற்றினர். முதல்வராக பொறுப்பேற்பார் என பலராலும் எதிர்பார்க்கப்பட்ட தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராக பதவியேற்றார். மராட்டியத்தின் முதல்வராக ஏக்னாத் ஷிண்டே பதவியேற்றுக்கொண்டார். அவர்கள் 2 பேரும் தான் தற்போது புதிய ஆட்சியில் அமைச்சர் பதவி ஏற்றுள்ளனர்.

எப்போது அமைச்சரவை விரிவாக்கம்?
ஆனால் இவர்கள் ஆட்சி அமைந்து ஒரு மாதம் ஆகிவிட்டதால் எப்போது அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைச்சரவை விரிவாக்கம் எப்போதும் நடக்கும் என்பது தொடர்ந்து கேள்விக்குறியாகவே உள்ளது. அமைச்சரவை விரிவாக்கம் தொடர்ந்து தாமதம் ஆகி வருவதை கேலிக்குள்ளாக்கி விமர்சிக்க தொடங்கியுள்ளன எதிர்க்கட்சிகள். ஏக்நாத் ஷிண்டே கடந்த ஜூலை 27 ஆம் தேதி, அமைச்சரவையை இன்னும் மூன்று தினங்களுக்குள் விரிவாக்கம் செய்துவிடுவேன் என கூறியிருந்தார். தேவேந்திர பட்னாவிசும் இதை ஆமோதிக்கும் விதமாக விரைவில் அமைச்சரவை விரிவாக்கம் இருக்கும் என்றார். ஆனால், இரு தலைவர்களும் சொன்னதற்கு மாறாக காலதாமதம் ஏற்பட்டுள்ளதுள்ளதால் எதிர்க்கட்சிகள் கேலி செய்து வந்தனர்.

போட்டா போட்டி
எதிர்க்கட்சிகளும் கூட்டணிக்குள் இப்போதே குளறுபடி ஏற்பட்டுவிட்டதாக விமர்சிக்கத் தொடங்கியிருக்கின்றன. அமைச்சரவை விரிவாக்கத்தின் போது நீர்வளத்துறையை கைப்பற்றுவதில் பாஜக பிடிவாதமாக உள்ளதாக அங்குள்ள பாஜக தலைவர்கள் மத்தியில் பேசும் போது சொல்கிறார்கள். அதேவேளையில், நிதித்துறை தங்கள் வசமே இருக்க வேண்டும் என்பது ஏக்நாத் ஷிண்டே அணியினரின் எண்ணமாக உள்ளது. இப்படி இரு தரப்பினருக்கும் இடையே எந்தெந்த துறைகளை யார் வசம் ஒப்படைப்பது என்பது தொடர்பாகவும் தீவிர ஆலோசனைகள் ஒருபக்கம் சென்று கொண்டிருக்கிறது.

டெல்லியில் தேவேந்திர பட்னாவிஸ்
இதற்கு மத்தியில் மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கடந்த சில நாளுக்கு முன் டெல்லி சென்றார். மேலும் புதிய அமைச்சரவை பட்டியலுக்கு ஒப்புதல் வாங்க தேவேந்திர பட்னாவிஸ் மட்டும் வருகை தந்து உள்ளதாக மராட்டிய அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. தொடர்ந்து இந்த வாரத்துக்குள் மகாராஷ்டிராவில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்று கூறப்பட நிலையில், நீங்கள் கற்பனை செய்ய முடியாத நேரத்தில் கூட அமைச்சரவை விரிவாக்கம் நடக்கும் என துணை துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில், ''மகாராஷ்டிர அமைச்சரவை விரிவாக்கம் நீங்கள் கற்பனை செய்து பார்க்க முடியாத நேரத்தில் கூட நடந்துவிடும்" என்று கூறினார்.

யாருக்கு என்னென்ன துறைகள்?
இந்த அமைச்சரவை விரிவாக்கத்தில் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிசுக்கு உள்துறை அமைச்சகமும் ஒதுக்கப்படும் என பரவலாக பேசப்படுகிறது. எப்படி இருந்தாலும் மத்தியில், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி வைத்திருந்த துறைகளை பாஜகவுக்கு ஒதுக்கலாம் என்றும் சிவசேனா தன்வசம் வைத்திருந்த துறைகளை ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு கொடுத்துவிடலாம் என்றும் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு இரு தரப்பும் ஒப்புக்கொண்டதாகவும் ஒரு பேச்சு உள்ளது. ஏக்நாத் ஷிண்டே அணியில் உள்ள 30 எம்.எல்.ஏக்களும் தங்களுக்கு அமைச்சரவையில் இடம் வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்து வருவதால் யாருக்கு எந்தெந்தெந்த துறைகள் கிடைக்கும் என்பது பெரும் எதிர்பார்ப்பாகவே உள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications