"நில்லுங்க!" ஷாருக்கானை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்! மும்பை ஏர்போர்டில் பரபர!லட்ச கணக்கில் அபராதம்
மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மும்பை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் நேற்று ஷார்ஜாவில் இருந்து தனி விமானம் மூலம் நேற்றிரவு மும்பை வந்தடைந்தார். அவரது உடைமைகளை மும்பை ஏர்போர்ட் அதிகாரிகள் வழக்கம் போலச் சோதனை செய்தனர்.
அப்போத மும்பை விமான நிலைய அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தியதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், லட்சக் கணக்கில் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஷாருக் கான்
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கான் ஷார்ஜாவில் நடைபெற்ற சர்வதேச புத்தகக் கண்காட்சியில் நேற்று கலந்து கொண்டார். சர்வதேச சினிமா மற்றும் கலாச்சாரத்திற்கு அவரது பங்களிப்பைப் பாராட்டி அவருக்கு குளோபல் ஐகான் ஆஃப் சினிமா மற்றும் கலாச்சார விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு அவர் மும்பை திரும்பி உள்ளார்.

தனி விமானம்
ஷார்ஜாவில் இருந்து அவர் தனி விமானம் மூலம் மும்பை ஏர்போர்ட் வந்துள்ளார். விமான நிலையத்தின் மூன்றாவது டெர்மினல் மூலம் அவர் வெளியே வந்துள்ளார். விமான நிலைய அதிகாரிகள் அவரது உடைமைகளைச் சோதனை செய்துள்ளனர். அப்போது ஷாருக் கான் மற்றும் அவருடன் வந்தவர்களின் பேக்களில் சில சில விலையுயர்ந்த சொகுசு வாட்ச்களை அதிகாரிகள் கண்டுபிடித்து உள்ளனர்.

ஆடம்பர வாட்சுகள்
இதன் காரணமாக அவர் சுங்கத் துறையினரால் நிறுத்தப்பட்டார். அந்த சொகுசு வாட்சுகளுக்கு சுங்க வரி செலுத்தாததன் காரணமாகவே ஷாருக் கானை அதிகாரிகள் நிறுத்தி வைத்து உள்ளனர். இப்படியே சில மணி நேரம் வரை அவர் விமான நிலையத்திலேயே காக்க வைக்கப்பட்டு உள்ளார். அவர்களின் உடைமைகளில் 18 லட்ச ரூபாய் மதிப்பில் மொத்தம் 6 ஆடம்பர வாட்சுகள் கண்டறியப்பட்டு உள்ளன.

தடுத்து நிறுத்தம்
இதற்காக சுமார் ₹ 6.83 லட்சம் சுங்க வரி செலுத்த வேண்டும் எனக் கூறியுள்ளனர். ஷாருக் கானும் அவரது மேனேஜரும் விமான நிலையத்தில் இருந்து வெளியேற அதிகாரிகள் அனுமதித்து உள்ளனர். இருப்பினும், அவருடன் வந்தவர்களும் அவரது பாதுகாவலர்களையும் சுங்கத் துறையினர் காலை வரை வெளியேற அனுமதிக்கவில்லை. அனைத்து நடைமுறைகளும் முடிந்த பின்னர், காலையில் தான் அவர்கள் வெளியேற அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

ரூ 6.83 லட்சம் வரி
இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், "மொத்தம் ஆறு வாட்ச் கேஸ்கள் இருந்தன. அதேபோல ரூ.74,900 மதிப்புள்ள ஆப்பிள் ஐவாட்சும் அதில் இருந்தது. இதை இந்தியா எடுத்து வரும்போது சுங்க வரி செலுத்த வேண்டும் என்பதை விளக்கினோம். மொத்த மதிப்பில் 38.5 சதவீதத்தைச் செலுத்துமாறு அவர்களிடம் கேட்டோம். அவர்களும் இதற்குச் சம்மதித்து வரி செலுத்தினர்" என்றார்.

ஷாருக் கான்
ஷாருக் கான் கடைசியாக நடித்த படங்களில் எதுவுமே ஓடவில்லை. பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே 2018இல் வெளியான ஜீரோ தோல்வி அடைந்தது. அதன் பின்னர் சினிமாவில் இருந்து கொஞ்சம் பிரேக் எடுத்த ஷாருக் கான் இப்போது ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடித்து வருகிறார். சித்தார்த் ஆனந்தின் 'பதான்', அட்லீயின் 'ஜவான்' மற்றும் ராஜ்குமார் ஹிரானியின் 'டன்கி' ஆகிய படங்கள் அடுத்தடுத்து ஷாருக் நடிப்பில் ரிலீஸாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications