பெண்ணை நிர்வாணமாக்கி.. சாம்பல் பூஜை.. சாமியார் உட்பட 3 பேருக்கு வலை.. என்ன நடந்தது?
பெண்ணை நிர்வாணமாக்கி சாம்பல் பூஜை நடத்தி உள்ளனர்
மும்பை: குழந்தை பாக்கியம் இல்லாததால், பெண் ஒருவரை சாமியாரிடம் அழைத்து சென்று, நிர்வாணமாக்கி கொடுமைப்படுத்திய சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
மூட நம்பிக்கைகளின் உச்சமாக வடமாநிலம் தறிகெட்டு சென்று கொண்டிருக்கிறது.. இந்த மூட நம்பிக்கையானது நரபலி போன்ற அசம்பாவிதங்கள் வரை சென்று அப்பாவிகளின் உயிரையே காவு வாங்கும் நிலைமைக்கும் சென்று கொண்டிருக்கிறது.
அந்த வகையில் மற்றொரு சம்பவமும் தற்போது நடந்துள்ளது.. மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் பிம்பிரி சின்வாட் என்ற கிராமம் உள்ளது..

நிர்வாண பூஜை
இங்கு வசித்து வந்த பெண்ணுக்கு 31 வயதாகிறது.. இவர் சக்கன் போலீஸ் ஸ்டேஷனில் திடீரென ஒரு புகாரை கொண்டு வந்தார்.. அதில், தன்னுடைய கணவரும், மாமியாரும், சாமியார் ஒருவருடன் சேர்ந்து தன்னை சித்ரவதை செய்ததாக கூறியிருந்தார்.. அந்த பெண்ணுக்கு திருமணம் நடந்து சில ஆண்டுகள் ஆகிறதாம்.. ஒரு பெண் குழந்தையும் உள்ள நிலையில், ஆண் குழந்தை வேண்டும் என்று கணவர் குடும்பத்தில் எதிர்பார்த்துள்ளனர்..

சித்ரவதை
ஆண் குழந்தை பிறக்காததால், அந்த பெண்ணை பல காலமாகவே கணவரும், மாமியாரும் தொடர்ந்து சித்ரவதை செய்து வந்தார்களாம். 4 வருடங்களுக்கு மேலாகியும் ஆண் குழந்தை பிறக்காததால், ஒரு சாமியாரிடம் இந்த பெண்ணை அவரது கணவரும் மாமியாரும் அழைத்து சென்றுள்ளனர்.. அந்த சாமியார் கொஞ்சம் சாம்பலை எடுத்து தந்து அப்பெண்ணை சாப்பிட சொன்னாராம்..

பூஜை
மேலும் கொஞ்சம் சாம்பலை பொட்டலம் கட்டி தந்து, வீட்டுக்கு எடுத்து சென்று பூஜை செய்துவிட்டு பிறகு சாப்பிட சொல்லி உள்ளார்.. ஆனால், நிர்வாண நிலையில் சாம்பல் பூஜை நடத்தினால்தான், ஆண் குழந்தை பிறக்கும் என்றும் அந்த பெண்ணிடம் சாமியார் சொல்லி உள்ளதாக தெரிகிறது.

மாமியார்
இதையடுத்து, வீட்டுக்கு வந்த பிறகு, அந்த பெண்ணை, கணவரும், மாமியாரும் நிர்வாணமாக நிற்க வைத்து, சாம்பலையும், குங்குமத்தையும் உடம்பெல்லாம் பூசி விட்டு பூஜை செய்துள்ளனர்.. பிறகு வரதட்சணை பிரச்சனையை கிளப்பி, சில மாதங்கள் அந்த பெண்ணை வீட்டைவிட்டு துரத்தி அடித்துள்ளனர்.. இப்போது, ஆண் குழந்தை இல்லை என்ற காரணத்துக்காக, வேறு ஒரு பெண்ணையும் பார்த்து, அந்த கணவருக்கு மாமியார் ரகசியமாக ஒரு கல்யாணமும் செய்து வைத்துவிட்டாராம்.

நடவடிக்கை
இதையெல்லாம் புகாராக அந்த மனுவில் தெரிவித்த அந்த பெண், கணவர், மாமியார், அந்த சாமியார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.. இந்த புகாரின்பேரில் போலீசாரும் வழக்குப் பதிவு செய்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்... இளம்பெண்ணை சாம்பல் திண்ண வைத்து கொடுமைப்படுத்தியதுடன், நிர்வாணமாக்கி அவருக்கு சாம்பல் பூஜையும் செய்த அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications