தமிழகத்தில் பிறக்க வேண்டும் என்கிற கனவு, நீதிபதி பதவியேற்றதால் நிறைவேறியது
தமிழகத்தில் பிறந்திருக்க வேண்டும் என தாம் முன்பு கண்ட கனவு தற்போது சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டதன் மூலம் நனவாகியுள்ளதாக பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி தெரிவித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஸ்வர் நாத் பண்டாரிக்கு தமிழக ஆர்.என் ரவி இன்று பதவி பிரமாணம் செய்து வைத்தார். முதல்வர் ஸ்டாலின் இவ்விழாவில் கலந்துக்கொண்டார்.

தலைமை நீதிபதி மாற்றம் புதிய பொறுப்பு தலைமை நீதிபதி
தமிழக தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். அவரது மாற்றத்தை கொலிஜிய முடிவை வழக்கறிஞர்கள் எதிர்த்து கடிதம் எழுதினர் போராட்டம் நடத்தினர். ஆனாலும் அவர் மாற்றப்பட்டார். அலகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபது தமிழக பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அலகாபாத்தில் பல முக்கியமான வழக்குகளில் அதிரடியாக தீர்ப்புச் சொன்னவர் நீதிபதி பண்டாரி. இன்று அவர் பதவி ஏற்றுக்கொண்டார்.

ஆளுநர் மாளிகையில் முதல்வர் முன் பதவி ஏற்பு
சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதியாக நியமிக்கப்பட்ட முனீஸ்வர்நாத் பண்டாரிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ராஜ்பவனில் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். இந்த விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். பின்னர் ஸ்டாலின் அவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். நீதிபதி அவருக்கு நன்றியை தெரிவித்தார்.

நீதிமன்றத்தில் வரவேற்பு நிகழ்ச்சி
தொடர்ந்து அவருக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சார்பில் வரவேற்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் சென்னை நீதிமன்ற நீதிபதிகள், ஆன்லைன் வாயிலாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் நிர்வாகிகள், பல்வேறு வழக்கறிஞர் சங்கங்களின் பிரதிநிதிகள்,மத்திய மாநில அரசு வழக்கறிஞர்கள் உள்ளிட்ட வழக்கறிஞர்கள், கலந்துக் கொண்டனர்.

நீதிபதிகள், பார்கவுன்சில், வழக்கறிஞர் சங்கத்தலைவர்கள் வரவேற்பு
தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ் அமல்ராஜ், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் மோகனகிருஷ்ணன் உள்ளிட்டோர் பொறுப்பு தலைமை நீதிபதியை வரவேற்று பேசினர்.
தமிழ் கற்க தொடங்கியதாக தெரிவித்த நீதிபதி தொடர்ந்து ஏற்புரை நிகழ்த்திய நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நேற்று முதல் தமிழ் கற்க தொடங்கிவிட்டேன், தற்போதைக்கு "வணக்கம்" "நன்றி" என்ற இரண்டு வார்த்தையை தெரிந்து கொண்டுள்ளேன். என்று பலத்த கரவொலிக்கிடையே தெரிவித்தார்

தமிழ்நாட்டில் பிறக்க வேண்டும் என்கிற கனவு நீதியாக ஆனதன் மூலம் நிறைவேறியுள்ளது
தொடர்ந்து பேசிய அவர், "அலகாபாத் உயர்நீதிமன்றத்தை தொடர்ந்து பாரம்பரியமிக்க சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது, ஆன்மீகத்திற்கும் கோயில்களுக்கும் பெயர் பெற்றது தமிழ்நாடு. கலாச்சார ரீதியாகவும் வரலாறு ரீதியாகவும் தமிழ்நாடு மேன்மையானது. தமிழ்நாடு மீது தீராத காதல் எனக்கு, தமிழகத்தில் பிறந்திருக்க வேண்டும் என முன்பு கனவு கண்டேன் அந்தக் கனவு தற்போது சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டதன் மூலம் நனவாகியுள்ளது.

நீதியின் 2 சக்கரங்கள் நீதிபதிகளும், வழக்கறிஞர்களும், பேச்சைவிட செயலில் காண்பிப்பேன்
வழக்கறிஞர்களும் நீதிபதிகளும் ரதத்தின் இரு சக்கரங்கள், நீதி பரிபாலனத்திற்கு இரண்டு சக்கரங்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். என் பணியில் பயமோ பாரபட்சமோ இருக்காது என உறுதிபட தெரிவிக்கிறேன். பேச்சை விட செயலில் காட்ட விரும்புகிறேன், அனைவரின் ஒத்துழைப்பும் எனக்குத் தேவை" எனக் கூறி நன்றி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications