48 ஆண்டுகளில் இல்லாத அளவு..கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு அதிக உபரி நீர் திறப்பு
மைசூரு: காவிரி ஆறு கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாகவே பொங்கி பிரவாகம் எடுத்து ஓடுகிறது. நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் கர்நாடக அணைகள் நிரம்பி வழிகின்றன. அணைகளில் இருந்து பல மாதங்களாகவே உபரி நீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணை நிரம்பிய நிலையிலேயே உள்ளது. கடந்த 48 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. மாநிலங்களின் மறுசீரமைப்பிற்குப் பிறகு கர்நாடகாவில் இருந்து வெளியேற்றப்பட்ட அதிகபட்ச உபரி நீராக இது கருதப்படுகிறது.
காவிரி நதிநீருக்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்புவரை மிகப்பெரிய போராட்டங்கள் தமிழகத்திலும் கர்நாடகாவிலும் நடைபெற்றுள்ள நிலையில் வருண பகவானின் ஆசியால் பெருமழை பெய்து காவிரி பொங்கி பிரவாகம் எடுத்து ஓடுகிறது. அணைகள் நிரம்பி வழிவதால் வேறு வழியே இன்றி பல லட்சம் கனஅடி உபரி நீரை திறந்து விடுகிறது கர்நாடகா.
காவிரி நடுவர்மன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு 101 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும். இந்த ஆண்டு ஜூன் முதல் செப்டம்பர் வரை 452.5 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா வெளியேற்றியுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

எத்தனை டிஎம்சி தண்ணீர்
காவிரி நதி நீர் பங்கீட்டு வழக்கின் இறுதித் தீர்ப்பில் ஜூன் மாதத்தில் 9.19 டிஎம்சி நீரை தமிழகத்துக்கு கர்நாடகா வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜூலை மாதத்தில் 31.24 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா திறந்து விட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு டிஎம்சி என்பது 100 கோடி கனஅடி நீராகும். ஒரு கனஅடி நீர் என்பது 28.3 லிட்டர் ஆகும். ஒரு டிஎம்சி என்பது 2830 கோடி லிட்டர் தண்ணீராகும். இந்த ஆண்டு பல லட்சம் கோடி லிட்டர் தண்ணீர் கடலில் வீணாக கலந்துள்ளது.

காவிரியின் பயணம்
கர்நாடக மாநிலத்தில் தலைக்காவிரியில் உருவாகும் காவிரி ஆறு தமிழகத்தில் பாய்ந்தோடி மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பூம்புகாரில்தான் கடலில் சங்கமம் ஆகிறது. கர்நாடகம் மற்றும் தமிழகத்தின் ஒட்டுமொத்த உணவுத் தேவையையும் பூர்த்தி செய்யும் காவிரி ஆறு, இந்த இரண்டு மாநிலங்களைத் தவிர இந்தியாவின் பிற மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதில் முதன்மை இடத்தைப் பெற்றிருக்கிறது.

கர்நாடகா அணைகள்
மைசூர் சாம்ராஜ்யமாக இருந்த காலத்தில் தொடங்கி கிருஷ்ணராஜசாகர், கபினி உள்ளிட்ட அணைகளைக் கட்டி காவிரியைத் தேக்கி வைக்க ஆரம்பித்தது கர்நாடகம். மேகேதாட்டுவில் மேலும் ஒரு அணையைக் கட்ட திட்டங்களைத் தொடங்கியிருக்கிறது கர்நாடக அரசு. எத்தனையோ எதிர்ப்புகளை பதிவு செய்தாலும் மேகேதாட்டு அணையை கட்டியே தீருவோம் என்று அடம்பிடிக்கிறது கர்நாடகா.

நிரம்பி வழியும் மேட்டூர் அணை
தண்ணீர் தரவே மாட்டோம் என்று கர்நாடக மாநிலம் வீம்பு பிடிக்கும் போதெல்லாம் பெருமழை பெய்து கர்நாடகத்தின் அணைகள் நிரம்பி உபரி நீர் தமிழகத்திற்கு ஓடோடி வருகிறது. மேட்டூர் அணை மட்டுமே நமக்கு உள்ளதால் 120 அடி நிரம்பிய பின்னர் ஒவ்வொரு ஆண்டும் உபரி நீர் வீணாக கடலில் கலக்கிறது. இந்த வருடமும் அந்தக் கதை தொடர்கிறது.

பருவமழை தீவிரம்
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த தென்மேற்குப் பருவமழையின் தீவிரத்தால் கடந்த மே மாதமே மேட்டூர் அணை 100 அடியை தாண்டியது. இதனால் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த ஜூலை மாதத்தில் முதன் முறையாக 120 அடியை எட்டியது மேட்டூர் அணை. அதன் பிறகு காவிரியில் வரும் ஒட்டுமொத்த நீரும் அப்படியே மேட்டூரில் இருந்து காவிரியில் திறந்துவிடப்படுகிறது. அந்த நீர் முழுவதும் கொள்ளிடம் ஆறு வழியாகக் கடலுக்கு அனுப்பப்படுகிறது.

ஆண்டுக்கு எத்தனை டிஎம்சி தண்ணீர்
காவிரி நடுவர்மன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு 101 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும். காவிரி நதி நீர் பங்கீட்டு வழக்கின் இறுதித் தீர்ப்பில் ஜூன் மாதத்தில் 9.19 டிஎம்சி நீரை தமிழகத்துக்கு கர்நாடகா வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜூலை மாதத்தில் 31.24 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா திறந்து விட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு டிஎம்சி என்பது 100 கோடி கனஅடி நீராகும். ஒரு கனஅடி நீர் என்பது 28.3 லிட்டர் ஆகும். ஒரு டிஎம்சி என்பது 2830 கோடி லிட்டர் தண்ணீராகும்.

452.5 டிஎம்சி தண்ணீர் வெளியேற்றம்
இந்த ஆண்டு ஜூன் முதல் செப்டம்பர் வரை 452.5 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா வெளியேற்றியுள்ளது. பிலிகுண்டலு அளவீட்டு நிலையத்தில் ஜூன் மாதத்தில் 16.46 டிஎம்சி தண்ணீரும், ஜூலையில் 106.93 டிஎம்சி, ஆகஸ்டில் 223.57 டிஎம்சி, செப்டம்பரில் 105.52 டிஎம்சி நீர் வெளியேற்றம் பதிவாகியுள்ளது.

கூடுதல் தண்ணீர்
கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட அளவை விட கூடுதலாக தண்ணீர் கிடைத்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடகா மாநில அணைகளில் இருந்து 2018-2019 ஆம் ஆண்டில் 228 டிஎம்சி நீரும், 2019-2020 இல் 97 டிஎம்சி தண்ணீரும் வெளியேற்றப்பட்டுள்ளது. 2020-2021 இல் 34 டிஎம்சி தண்ணீரும், 2021 - 2022ஆம் ஆண்டு 103 டிஎம்சி தண்ணீரும், 2021-2022 செப்டம்பர் வரை 275 அடி உபரி நீரையும் திறந்துவிட்டுள்ளது. மேகேதாட்டுவில் 67 டிஎம்சி நீரைத் தேக்கி வைக்கும் வகையில் சமநிலை நீர்த்தேக்கத்தை அமைக்க கர்நாடகா திட்டமிட்டுள்ளது. அதே நேரம் நமது தமிழக மேட்டூரில் 93.47 டிஎம்சி தண்ணீர் சேமிக்கும் திறன் உள்ளது.

நீடிக்கும் கனமழை
கர்நாடகாவில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. வருணபகவான் கருணையால் தமிழகம் கர்நாடகா இடையே நதிநீர் பிரச்சினை வராமல் இருக்கிறது. மேட்டூர் நீர்த்தேக்கம் தற்போது நிரம்பியிருப்பதால் அணையில் இருந்து விநாடிக்கு 1லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. தமிழகத்தில் காவிரியிலும் கொள்ளிடத்திலும் திறந்து விடப்படும் பல ஆயிரம் கனஅடி தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது என்பது விவசாயிகளின் கவலையாக உள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications