இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை எவ்வளவு? பிரதமர் மோடி சொன்ன முக்கிய தகவல்.. ஏன் முக்கியம்!
மைசூரு: கர்நாடக மாநிலம் மைசூரில் நடைபெறும் புலிகள் பாதுகாப்பு திட்டத்தின் பொன்விழாவில் பங்கேற்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, நாடு முழுவதும் மொத்தம் 3,167 புலிகள் உள்ளது என்கிற புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளார்.
வந்தே பாரத் ரயில் உட்பட பல்வேறு திட்டங்களை தொடக்கி வைப்பதற்காக பிரதமர் மோடி நேற்று தமிழ்நாடு வந்திருந்தார். திட்டங்களை தொடக்கி வைத்த பின்னர் அவர் நேற்றிரவு சென்னையிலிருந்து புறப்பட்டு கர்நாடகாவின் மண்டஹள்ளி விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தார். கர்நாடக மாநிலத்தில் வரும் மே 10ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து தற்போது வரை 9 முறை பிரதமர் மோடி கர்நாடகாவுக்கு வருகை தந்திருக்கிறார். இது அவருடைய 10வது பயணமாகும்.
அந்த வகையில் இன்று காலை 7 மணியளவில் மைசூரிலிருந்து சாம்ராஜ் நகர் மாவட்டத்தின் குண்டுலுபேட் மேலுகாமனஹள்ளி வந்து பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக பந்திப்பூர் புலிகள் காப்பகத்துக்கு சென்ற அவர் அங்கு புலிகள் பாதுகாப்பு திட்டத்தின் 50ம் ஆண்டை கொண்டாடும் விதமாக வனப்பகுதியில் சுமார் 20 கி.மீ வரை ஜீப்பில் சபாரி பயணம் செய்தார். பிரதமரின் வருகையையொட்டி இந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மைசூரிலிருந்து காலை 7 மணியளவில் சாம்ராஜ் நகர் மாவட்டத்தின் குண்டுலுபேட் மேலுகாமனஹள்ளி வந்து பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக பந்திப்பூர் புலிகள் காப்பகத்துக்கு செல்கிறார். அங்கு புலிகள் பாதுகாப்பு திட்டத்தின் 50ம் ஆண்டை கொண்டாடும் விதமாக வனப்பகுதியில் சுமார் 22 கி.மீ வரை சபாரி செல்கிறார். பிரதமரின் வருகையையொட்டி இந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பந்திப்பூர் முதல் தெப்பக்காடு வரை எஸ்.பி.ஜி பாதுகாப்பு படையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்த சபாரி பயணத்திற்கு பின்னர் தமிழ்நாட்டின் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு சென்று, ஆஸ்கர் விருது பெற்ற தி எலிபேன்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தின் யானை பாகன் பொம்மன், பெள்ளி தம்பதியை சந்தித்து வாழ்த்து கூறினார். அங்கு வளர்க்கப்பட்டு வந்த யானைகளுக்கு கரும்புகளை கொடுத்து கொஞ்சினார்.
பின்னர் மீண்டும் மைசூரு வந்து புலிகள் பாதுகாப்பு திட்டத்தின் 50ம் ஆண்டு பொன் விழாவில் பங்கேற்ற அவர் புலிகள் காப்பகத்தில் முக்கிய பங்கு வகித்த வன ஊழியர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தார். இதனையடுத்து தேசிய அளவில் உள்ள புலிகளின் எண்ணிக்கையை வெளியிட்டார். அதாவது நாடு முழுவதும் மொத்தம் 3,167 புலிகள் உள்ளது என்றும், கடந்த 2018ம் ஆண்டில் சுமார் 2,967 புலிகள் இருந்த நிலையில் தற்போது இந்த எண்ணிக்கையானது 3,167 ஆக அதிகரித்துள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
வனவிலங்குகளை தவிர்த்து காடுகளின் பாதுகாப்பை நாம் உறுதி செய்துவிட முடியாது. குறிப்பாக புலிகள். புலிகள் இல்லாத காடு இயற்கை சுழற்சியில் இருந்து மாறுபட்டுவிடும். இதனால் காடுகள் மெல்ல மெல்ல அழியும். இதனால் தான் புலிகளை பாதுகாப்பது அவசியமாகும். இத்தகைய சூழலில் தான் இன்று பிரதமர் மோடி புலிகளின் எண்ணிக்கையை வெளியிட உள்ளார். இதன்மூலம் இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை எவ்வளவு உள்ளது. அதிகரித்துள்ளதா? குறைந்துள்ளதா? என்பதை அறிந்து மேற்கொண்டு புலிகளை பாதுகாக்க திட்டங்கள் வகுக்க உதவியாக இருக்கும்.












Click it and Unblock the Notifications