நாகையில் அக்கிரமம்.. ஓடும் பைக்கில் ‛பாட்டியை சீண்டிய’ இளைஞர்.. அடுத்து நடந்த கொடுமையை பாருங்க

Subscribe to Oneindia Tamil

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் அருகே, ‛பையன் மாதிரி நினைச்சிட்டு வா மா'' எனக்கூறி லிப்ட் கொடுத்த இளைஞரை நம்பி ஏறிய மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும், பாலியல் தொல்லையால் அந்த மூதாட்டி ஓடும் பைக்கில் இருந்து கீழே குதித்த நிலையில் அவர் மீது பைக்கை ஏற்றிவிட்டு இளைஞர் சென்றது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம் வடக்காலத்தூர் பகுதியை சேர்ந்தவர் 60 வயது மூதாட்டி. இவர் தனது கணவருடன் வசித்து வருகிறார். இந்த மூதாட்டி பாப்பா கோவில் அருகே உள்ள தர்காவுக்கு அடிக்கடி சென்று வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார். மேலும் சில நேரத்தில் இரவில் தர்காவில் தங்கிவிட்டு மறுநாள் காலையில் வீடு திரும்புவார்.

nagapattinam sexual harassment

இந்நிலையில் தான் மூதாட்டி வழக்கம்போல் பாப்பா கோவில் அருகே உள்ள தர்காவுக்கு சென்று தங்கிவிட்டு கடந்த மாதம் 20ம் தேதி அதிகாலையில் வீடு திரும்ப பாப்பா கோவில் அருகே நின்றார். ஆட்டோவில் வீடு திரும்ப அவர் காத்திருந்தார். இந்த சமயத்தில் இளைஞர் ஒருவர் பைக்கில் அங்கு சென்றார்.

மூதாட்டியை பார்த்த இளைஞர், ‛‛எங்கு செல்கிறீர்கள்’’ என கேட்டார். அதற்கு மூதாட்டி வடக்காலத்தூர் என பதிலளித்துள்ளார். இதை கேட்ட அந்த இளைஞர், ‛‛நானும் வடக்காலத்தூர் தான் செல்கிறேன். என்னோடு பைக்கில் வாருங்கள். லிப்ட் தந்து கிராமத்தில் இறக்கிவிடுகிறேன்’’ என தெரிவித்துள்ளார். ஆனால் மூதாட்டி மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனால் விடாத இளைஞர் அவரை பைக்கில் ஏற்றி கொண்டார்.

‛கணவருக்கு 3வது திருமணம்’.. பெண் தேடி பேனரடித்து நடத்திய 2 மனைவிகள்! காரணத்தை கேட்டா அசந்துபோவீங்க


பைக்கின் பின்புறம் மூதாட்டி அமர்ந்து இருக்க, இளைஞர் அவருக்கு பாலியல் தொல்லை கொடுக்க தொடங்கி உள்ளார். இதனை அந்த மூதாட்டி கண்டித்துள்ளார். ஆனால் இளைஞர் கேட்கவில்லை. மாறாக தொடர்ந்து அவர் மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் பயந்துபோன மூதாட்டி பைக்கை நிறுத்தும்படி கூறியுள்ளார். ஆனால் இளைஞர் பைக்கை நிறுத்தாமல் சென்றதோடு, பாலியல் தொல்லையும் கொடுப்பதையும் தொடர்ந்துள்ளார்.

இதனால் பயந்துபோன மூதாட்டி வேறு வழியின்றி பைக்கில் இருந்து கீழே குதித்துள்ளார். கீழே குதித்ததில் அவர் லேசான காயமடைந்தார். இதனால் அவரால் உடனடியாக எழுந்திருக்க முடியாவில்லை. இந்த வேளையில் கடும் கோபமடைந்த அந்த இளைஞர் பைக்கை கொண்டு மூதாட்டியின் காலில் ஏற்றி அவரை தாக்கிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். இதனால் காலில் காயமடைந்த மூதாட்டி அலறி துடித்துள்ளார்.

இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் மூதாட்டியை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்கிடையே காவல் நிலையத்தில் மூதாட்டியின் குடும்பத்தினர் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் போலீசார் புகாரை ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் மூதாட்டியின் குடும்பத்தினர் அதிருப்தியடைந்தனர். அதன்பிறகு அவர்கள் எஸ்பியை சந்தித்து புகாரளித்தனர். இந்த புகாரை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். முதற்கட்டமாக போலீசார் சம்பவம் நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது மூதாட்டியை இளைஞர் பைக்கில் அழைத்து செல்வது தெரியவந்தது.

ஒருபக்கம் கணவர்.. இன்னொருபுறம் மாமனார்.. இடையே மாமியார் வேற.. இயற்கைக்கு மாறான உறவால் கதறிய தானே பெண்


மேலும் கண்காணிப்பு கேமராவில் பதிவான இளைஞரின் முகத்தை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின்போது அந்த நபரின் பெயர் குமரவேல் என்பதும், அவர் பெரியநரியங்குடியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும் சலூன் கடை வைத்துள்ள குமரவேல் போலீசார் தேடுவதை அறிந்து தலைமறைவாகி உள்ளதும் தெரியவந்துள்ளது. இதற்கிடையே தான் அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க பாதிக்கப்பட்ட பெண் சம்பவம் குறித்து கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛நான் அடிக்கடி பாப்பாகோவில் செல்வேன். புதன் கிழமைகளில் செல்வதை வழக்கமாக வைத்துள்ளேன். அன்றும் பாப்பா கோவில் சென்றுவிட்டு வீடு திரும்ப ஆட்டோவில் ஏறி அமர்ந்தேன். அப்போது அந்த நபர் தான் கொண்டு விடுவதாக கூறி என்னை கட்டாயப்படுத்தினார். நான் வரவில்லை என்று கூறினேன்.

ஆனால் அதையும் மீறி, ‛‛நீ பெத்த பிள்ளை போல் தான்மா நான்’’ எனக்கூறி என்னை கூட்டிட்டு போனான். பிறகு வைக்ககூடாத இடத்தில் எல்லாம் கை வைத்து என்னை அசிங்கப்படுத்திவிட்டான். என்னை கேவலமாக நடத்திட்டான். இது தாங்க முடியாமல் வண்டியில் இருந்து கீழே குதித்தேன். அப்போது என் மீது வண்டியை விட்டு ஏற்றிவிட்டான். அங்கிருந்து வயதானவர் வந்தார். காப்பாத்துங்க.. காப்பத்துங்க என கத்தினேன். அவர் தான் என்னை காப்பாற்றினார். அதன்பிறகு ஊருக்கு எல்லாம் தகவல் சொல்லி எங்கள் ஊர் தலைவர், பையனுக்கு தகவல் சொல்லி ஆம்புலன்ஸில் ஆஸ்பத்திரியில் சேர்த்தாங்க. போலீசில் புகாரளித்தும் இன்று வரை ஆளை பிடிக்கவில்லை’’ என கண்ணீர் சிந்தினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+