அக்கானு நினைச்சு பழக விட்டோம்! சிறுவனிடம் அத்துமீறி சேட்டை! 5 மாத கர்ப்பிணியை கைது செய்த போலீஸ்!

Subscribe to Oneindia Tamil

நாகை : நாகை அருகே சிறுவனை மிரட்டி பாலியல் உறவு கொண்ட புகாரில் ஐந்து மாத கர்ப்பிணியை காவல்துறையினர் கைது செய்திருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

தொழில்நுட்பங்கள் நாகரீகம் வளர்ந்து விட்ட இந்தக் காலத்தில் சமூகங்களை பாதிக்கும் குற்றச் செயல்களும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பாலியல் குற்றங்கள் கவலை கொள்ளத்தக்க வகையில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

பெண்களுக்கு குறிப்பாக 18 வயது உட்பட்ட சிறுமிகள் பாலியல் வன்கொடுமை சம்பவங்களை பாதிக்கப்பட்டு அவர்களின் பலர் வாழ்க்கையே சீரழிக்கும் கொடூரர்களின் குற்றங்களை ஒடுக்க முடியாமல் காவல்துறை திணறி வருகிறது.

அதிர்ச்சி சம்பவம்

அதிர்ச்சி சம்பவம்

பெண் குழந்தைகளுக்கு மட்டுமல்ல ஆண்களும் பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டு தான் வருகிறார்கள். சிறுவர்கள் தொடங்கி இளம் வயது வாலிபர்கள் வரை பலர் பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் சிக்கி சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நாகை மாவட்டத்தில் நடைபெற்றிருக்கும் ஒரு சம்பவம் தான் தற்போது அந்த மாவட்ட மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. அப்படி என்ன நடந்தது என காவல்துறை வட்டாரத்தில் விசாரித்த போது தான் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

கர்ப்பிணி பெண் கைது

கர்ப்பிணி பெண் கைது

இந்த புகாரில் ஐந்து மாத கர்ப்பிணி பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பதுதான் அதிர்ச்சியிலும் அதிர்ச்சி. தமிழகத்தின் கடலோர மாவட்டமான நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே ஆலமலை கிராமத்தில் தான் இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது. அந்த கிராமத்தைச் சேர்ந்த 19 வயது பெண் ஒருவர் பகீர் குற்றச்சாட்டில் சிக்கி இருக்கிறார். பன்னிரண்டாம் வகுப்பு படித்து விட்டு மேற்படிப்புக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்த அந்த பெண் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனுடன் பேசி வந்திருக்கிறார்.

 பாலியல் அத்துமீறல்

பாலியல் அத்துமீறல்

சகோதரி என்ற முறையுடன் அந்தச் சிறுவன் இளம் பெண்ணிடம் பழகி வந்ததாக கூறப்படுகிறது. சிறுவனின் பெற்றோர் வேலைக்குச் சென்ற நிலையில் பள்ளி செல்லும் நேரம் போக அந்த சிறுவன் அந்த இளம் பெண்ணுடன் பழகி வந்திருக்கிறார். இருவருக்கும் இரு வயது வித்தியாசம் இருந்ததால் இருவரது பெற்றோரும் அவர்களைக் கண்டு கொள்ளாமல் விட்டிருக்கின்றனர் நாட்கள் செல்லச் செல்ல இளம் பெண்ணின் நடத்தையில் மாற்றம் ஏற்பட தொடங்கி இருக்கிறது. சகோதரி என்ற முறையில் இருந்து எல்லை மீறி அந்த சிறுவனை தான் காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி இருக்கிறார்.

பெண் கர்ப்பம்

பெண் கர்ப்பம்

முதலில் அந்த சிறுவன் மறந்தபோதிலும் அந்த இளம் பெண்ணின் பாலியல் இச்சைகளுக்கு இடம் கொடுத்து இருக்கிறார் கிட்டத்தட்ட ஒரு வருடமாக இந்த முறையற்ற உறவு தொடர்ந்து இருக்கிறது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி பழகிய நிலையில் ஒரு கட்டத்தில் அந்த பெண் கர்ப்பம் அடைந்திருக்கிறார். இது குறித்து இளம் பெண்ணின் பெற்றோர் கேட்டபோது வயிற்றில் கட்டி வந்திருப்பதாக கூறி சமாளித்திருக்கிறார் அந்த இளம் பெண் இந்த நிலையில் தனது மகனின் நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்ட பெற்றோர் அவனிடம் விசாரித்த போது அதிர்ச்சி தகவல் ஒன்றை கூறி இருக்கிறார்.

அதிரடி கைது

அதிரடி கைது

அதில் பெற்றோர் வீட்டில் இல்லாதபோது தன்னிடம் அந்த இளம் பெண் பாலியல் ரீதியாக அத்து மீறியதாக கூறி இருக்கிறான். மேலும் அந்த இளம் பெண் ஐந்து மாத கர்ப்பமாக இருப்பதும் தெரிய வந்திருக்கிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த இளம் பெண்ணை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சகோதர சகோதரிகளாக இருந்தாலும் அண்டை வீட்டாருடன் பழகும் தங்கள் குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டும் எனவும் இல்லையேல் இதுபோன்ற விபரீத செயல்களில் சிக்கி வாழ்க்கையை தொலைக்கும் நிகழ்வுகள் அரங்கேறத்தான் செய்யும் எனக் கூறுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+