நாகப்பட்டினம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குமட்டும் "ஆபாசம்".. 31 பெண்கள்.. சார் பேர் அசோகன்.. பட்டிமன்ற பேச்சாளராம்.. இப்ப மாமியார் வீட்டில்

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் போக்சோவில் கைதாகி உள்ளார்

Google Oneindia Tamil News

நாகப்பட்டினம்: 31 மாணவிகளுக்கும் பாலியல் டார்ச்சர் தந்துள்ளார் இந்த ஆசிரியர்... விடுவார்களா நம்ம போலீஸ்காரர்கள்.. இந்த சாரை அள்ளிக் கொண்டு போய்விட்டார்கள்..!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேதாரண்யம் அடுத்துள்ளது கத்திரிப்புலம் என்ற ஊர்.. இந்த ஊரில் அரசினர் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது.. இங்கு அந்த பகுதியில் உள்ள ஏராளமான மாணவ - மாணவிகள் படித்து வருகிறார்கள்.

இந்த ஸ்கூலில் பி.டி. ஆசிரியராக அதாவது உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருபவர் அசோகன்.. மருதூரைச் சேர்ந்த இவர், பட்டிமன்ற பேச்சாளராகவும் இருக்கிறாராம்..!

விமான பணிப்பெண் வீட்டுக்கு சென்ற அரசியல்வாதி.. மதுபோதையில் பாலியல் சீண்டலால் கைது.. பரபரப்பு விமான பணிப்பெண் வீட்டுக்கு சென்ற அரசியல்வாதி.. மதுபோதையில் பாலியல் சீண்டலால் கைது.. பரபரப்பு

 பிளஸ் 1 + பிளஸ் 2

பிளஸ் 1 + பிளஸ் 2

பள்ளிக்கு அருகிலேயே தனியாக டியூஷன் சென்டர் ஒன்றையும் நடத்தி வருகிறார்.. அசோகனிடம் அந்த பள்ளியை சேர்ந்த பிளஸ் ஒன், பிளஸ் டூ மாணவிகள் பலர் டியூசன் படித்து வருகிறார்கள்... பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வில் மதிப்பெண்கள் மிக முக்கியம் என்பதாலும், அந்த பள்ளியின் ஆசிரியரே டியூசன் எடுப்பதாலும், பெரிதும் நம்பிக்கையுடன் பெற்றோர்கள், தங்கள் பெண்பிள்ளைகளை படிக்க அனுப்பி வைத்துள்ளனர்... ஆனால், இந்த வாத்தியார் அசோகன், அந்த பெண் பிள்ளைகளிடம் சேட்டையை காட்டி வந்துள்ளார்..

 குமட்டும் ஆபாசம்

குமட்டும் ஆபாசம்

வாட்ஸ் அப் மூலம் நிறைய ஆபாச மெசேஜ்களை அனுப்பி, பாலியல் தொந்தரவும் கொடுத்து வந்திருக்கிறார். இதில் 18 மாணவிகள் அசோகனால் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.. இதனால், ஒரு கட்டத்துக்கு அந்த 18 மாணவிகளும், கடந்த 21ம் தேதி அன்று பள்ளி தலைமை ஆசிரியர் குமாரிடம் நேரடியாகவே அசோகன் குறித்து புகார் அளித்து விட்டனர்.. இந்த புகாரை கண்டு அதிர்ச்சி அடைந்த தலைமை ஆசிரியர், உடனடியாக மாவட்ட கலெக்டர் முதன்மை கல்வி அலுவலர், கல்வி அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் ஆகியோருக்கு அந்த புகாரை அனுப்பி இருக்கிறார்...

டியூஷன்

டியூஷன்

இதையடுத்து, குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் பள்ளிக்கு வந்துவிட்டார்கள். பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் ரகசிய விசாரணையும் நடத்தினார்கள்.. அப்போதுதான், அசோகன் குறித்த எல்லா விஷயங்களையும் மாணவிகள் புட்டுபுட்டு வைத்தனர்.. புகார் கொடுத்தது 18 பேர் என்றாலும், அசோகன் தொல்லை கொடுத்தது டியூஷன் படித்த 31 மாணவிகளுக்காம்.. பாதிக்கப்பட்ட மாணவிகளில் 12 பேர் கரியாப்பட்டினம் போலீசிலும் புகார் அளித்துள்ளனர்...

 நைட் நேரம் மெசேஜ்

நைட் நேரம் மெசேஜ்

இதையடுத்து, கரியாப் பட்டினம் போலீசார் அசோகனை போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்தனர்.. ஆனால், அதற்குள் அசோகன் எஸ்கேப் ஆகிவிட்டார்.. எனவே அவரை வலைவீசி தேடி வந்த நிலையில், தலைமறைவானவரை ஒருவழியாக சுற்றிவளைத்து பிடித்து கைது செய்துவிட்டனர்.. விசாரணையும் அவரிடம் நடந்து கொண்டிருக்கிறது.. இந்த அசோகனுக்கு 38 வயதாகிறது. நைட் நேரத்தில்தான் மாணவிகளுக்கு, மெசேஜ்களை அனுப்புவாராம்.. அதிலும் அசிங்க அசிங்கமான போட்டோக்களையும் விடாமல் அனுப்பி வைப்பாராம்..

டியூஷன்

டியூஷன்

இதனிடையே, தன் மீது மாணவிகள் தலைமை ஆசிரியரிடம் புகார் சொன்னதுமே, மெடிக்கல் லீவு போட்டுள்ளார் அசோகன்.. அதாவது கடந்த 19-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை மருத்துவ விடுப்பில் சென்றுவிட்டார்.. போனும் ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டார்.. இதனால், புகார் குறித்து அவரிடம் விளக்க கடிதம் கேட்டு அவரது வீட்டு அட்ரசுக்கு கொரியர் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது... ஆனால், அதற்குள் அசோகனை போலீசாரே கைது செய்துவிட்டனர்.. இப்போது இந்த சாருக்கு போலீசார் "டியூஷன்" நடத்தி கொண்டிருக்கிறார்கள்..!

English summary
How did police arrest the Govt school PT Master and what happened in Nagapattinam
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X