நாகை ஐஸ்வர்யாவின் போன் எப்பவுமே என்கேஜூடு.. வருங்கால மனைவிக்கு இப்படியொரு பழக்கமா? பரபர காஞ்சிபுரம்
நாகப்பட்டினம்: நாகப்பட்டினத்தை சேர்ந்த ஐஸ்வர்யாவும், தினேஷூம், கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.. இருவரின் காதலுக்கும் பெற்றோர் சம்மதித்திருக்கிறார்கள்.. அத்துடன், கடந்த ஏப்ரல் மாதம் சவுந்தர்யா- தினேஷூக்கு நிச்சயதார்த்தமும் நடந்துள்ளது. அதற்குள் என்ன நடந்தது என்று தெரியவில்லை.. சவுந்தர்யாவின் மரணம் குறித்து காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
நாகப்பட்டினத்தை சேர்ந்தவர்கள் பாலு - வசந்தா.. இவர்கள் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கிறிஸ்துவகண்டிகையில் வசித்து வருகிறார்கள்.. இவர்களது மகள் சவுந்தர்யா, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். அதே கம்பெனியில் பணியாற்றும் நாகப்பட்டினத்தை சேர்ந்த தினேஷ் என்பவரை கடந்த 8 வருடமாக காதலித்து வந்திருக்கிறார்.

ஒருகட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பி அவரவர் வீட்டில் சொல்லி சம்மதம் பெற்றனர்.. கடந்த ஏப்ரல் மாதம் நிச்சயதார்த்தமும் நடந்தது.. ஆனால், சமீப நாட்களாகவே சவுந்தர்யாவின் செல்போன் பிசியாகவே இருந்துள்ளது..
முறைப்படி நிச்சயதார்த்தம்
தினேஷ் எப்போது போன் செய்தாலும், என்கேஜிடாகவே இருந்துள்ளது.. இதனிடையே, வேறொரு இளைஞருடன் சவுந்தர்யா தொடர்பில் இருப்பதாகவும், தினேஷுக்கு அரசல்புரசலாக தகவல் கிடைத்துள்ளது.. போனில் லைன் கிடைக்காதது குறித்து தினேஷ் கேட்டதற்கு, தோழிகளுடன் பேசுவதாக கூறி சவுந்தர்யா சமாளித்திருக்கிறார். ஆனால், ஆண் நண்பர் ஒருவருடன் அவர் பேசியதை தினேஷ் கண்டுபிடித்துவிட்டார்.. இதனால் கோபமடைந்து, சவுந்தர்யாவை கண்டித்துள்ளார்..
இது சவுந்தர்யாவுக்கு பிடிக்காமல், தினேஷின் போன் நம்பரையே மொத்தமாக பிளாக் செய்துவிட்டு, அந்த ஆண் நண்பருடன் தொடர்ந்து பேசி வந்ததாக தெரிகிறது.. இதனால், ஆத்திரமடைந்த தினேஷ், கடந்த வெள்ளிக்கிழமை சவுந்தர்யாவிடம் தந்திரமாக பேசி தான் தங்கியிருந்த அறைக்கு வரவழைத்துள்ளார்..
ரத்த வெள்ளத்தில் சவுந்தர்யா
அப்போது விக்னேஷூடனான உறவை முறித்து கொள்ளும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.. அப்போதும் தினேஷை சவுந்தர்யா அலட்சியமாக பேசியதால், அங்கிருந்த இரும்பு கம்பியாலும், உளி போன்ற கூர்மையான ஆயுதத்தாலும், சவுந்தர்யாவின் முகம், கை, கால்களில் தாக்கிவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டார்.. இதில் ரத்த வெள்ளத்திலேயே சவுந்தர்யா இறந்துவிட்டார்..
தினேஷின் அறைக்கதவு திறந்தபடியே இருந்ததால், அக்கம்பக்கத்தினர் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்துள்ளனர்.. அப்போதுதான் சவுந்தர்யாவின் சடலம் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து, உடனடியாக ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு தகவல் தந்துள்ளன்ர..
போலீசார் விரைந்து வந்து, சவுந்தர்யாவின் சடலத்தை கைப்பற்றி, போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.. ஆனால் அதற்குள் நாகப்பட்டினம் ஸ்டேஷனில் தினேஷ் சரணடைந்தார்..
வேறொரு ஆண் நண்பருடன் சவுந்தர்யா பழகியதில், அந்த ஆத்திரத்தில் தினேஷ் இந்த கொலையை செய்தது தெரியவந்துள்ளது..
நடவடிக்கை பிடிக்கவில்லை
நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்தவர் சவுந்தர்யாவுக்கு 25 வயதாகிறது.. கடந்த சில காலமாகவே, தினேஷின் நடவடிக்கைகள் சவுந்தர்யாவுக்கு பிடிக்காமல் இருந்துள்ளது.. இதனால், அவரிடம் சவுந்தர்யா பேசாமலும் இருந்து வந்திருக்கிறார்.. இதற்கு பிறகுதான், தான் பணியாற்றும் கம்பெனியில் வேலை செய்து வந்த, கடலுார் மாவட்டத்தை சேர்ந்த விக்னேஷ் என்பருடன், சவுந்தர்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
தினேஷூடன் நிச்சயம் முடிந்தும்கூட, விக்னேஷை காதலித்து வந்தாராம் சவுந்தர்யா... அத்துடன் விக்னேஷூடன் பைக்கல் வெளியே சென்று, உல்லாசம் அனுபவித்ததாகவும் தெரிகிறது. இதெல்லாம் தெரிந்துதான், சவுந்தர்யாவை கொலை அளவுக்கு தினேஷ் சென்றதாக அங்கிருந்தவர்கள் கூறுகிறார்கள். எனினும், இது தொடர்பான விசாரணை இன்னும் நடந்து வருகிறது...!!












Click it and Unblock the Notifications