குடிபோதையில் மதுபாட்டிலை ஆசனவாயிலில் சொருகிய குடிகாரர்.. ஆப்ரேஷன் சக்சஸ்.. மருத்துவமனையில் கதறல்
நாகப்பட்டினம்: நோயாளி ஒருவரின் ஆசனவாயிலில் மதுபாட்டில்கள் இருப்பது ஸ்கேன் செய்து பார்த்தபோது தெரியவந்தது. அதை கண்டு அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் ஆப்ரேசன் செய்து வெற்றிகரமாக அகற்றினர்.
எனது முழு வாழ்க்கையிலும் இதுபோன்ற ஒன்றை நான் பார்த்ததில்லை என்று அறுவை சிகிச்சை செய்த நாகப்பட்டினம் அரசு மருத்துவமனை அறுவை சிகிச்சை நிபுணர் பாண்டியராஜ், கூறினார்.
நாகூரைச் சேர்ந்த 29 வயது நபர் ஒருவர், நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு மே 27ம் தேதி ஆசனவாயில் கடுமையான வலி இருப்பதாக கூறியபடி மருத்துவர்களை சந்தித்தார்.

மருத்துவர் அதிர்ச்சி
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்தனர். எக்ஸ்ரேவை பார்த்த அடுத்த சில நிமிடங்களில் பேரதிர்ச்சிக்கு உள்ளாகினர். காரணம் நாகூரைச் சேர்ந்த அந்த நோயாளியின் பின்பக்க வலிக்கான காரணம் தெரிந்தது. அவரது சிக்மாய்டு பெருங்குடலில் 250 மில்லி கண்ணாடி பாட்டில் உள்ளே இருந்தது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்ததாக கூறிய மருத்துவமனையின் பொது அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ்.பாண்டியராஜ், என் வாழ்நாளில் இதுபோன்ற ஒன்றை இதுவரை பார்த்ததில்லை என்றார்.

பாட்டில் வரவில்லை
நாகூர் நோயாளி (பாதுகாப்பு காரணங்களுக்காக அவரது பெயர் கூறப்படவில்லை) மதுபோதையில் அவரது ஆசன வாயிலில் பாட்டிலை செருகியதாக கூறியிருக்கிறார். அதைத் தொடர்ந்து அது மலக்குடலில் நுழைந்துள்ளது.. அதை அகற்றுவதற்காக அவர் முயற்சிகள் செய்திருக்கிறார். ஆனால் அவை அனைத்தும் தோல்வியடைந்தன. அவர் தனது குடும்பத்தினரிடம் இந்த விஷயத்தை வெளிப்படுத்தவில்லை. மருத்துவமனைக்கு செல்லாமல் இரண்டு நாட்கள் வலியுடன் இருந்திருக்கிறார். அப்படியும் பலமுறை வெளியே தள்ள முயற்சி செய்திருக்கிறார். ஆனால் பாட்டில் வெளியே வரவில்லை.

மதுபாட்டில் அகற்றம்
ஒருகட்டத்தில் வலியால் துடித்த நபர், கடந்த 27ம் தேதி நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு சென்று மருத்துவரை சந்தித்திருக்கிறார் அங்கு அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் தான் மதுபாட்டில் ஆசான வாயிலில் இருப்பது தெரிந்தது. இது பற்றி மருத்துவர் பாண்டியராஜ் கூறும் போது. பொதுவாக கொரோனா வைரஸுக்கு சோதனை நடத்தாமல் அறுவை சிகிச்சை செய்ய நாங்கள் விரும்ப மாட்டோம், ஆனால் இது ஒரு கண்ணாடி பாட்டில் மற்றும் அதை உடைத்திருந்தால் அது கடுமையான உள் சேதத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் நாங்கள் ஆபத்தை பொருட்படுத்தாமல் உடனடியாக அறுவை சிகிச்சையை மேற்கொண்டோம். நோயாளிக்கு அவரை மயக்கமடையச் செய்ய முதுகெலும்பு மயக்க மருந்து கொடுத்தோம், இரண்டு மணி நேர அறுவை சிகிச்சையில் பாட்டிலை அகற்றினோம்.

மருத்துவ கண்காணிப்பு
நோயாளி இரண்டு நாட்கள் கண்காணிப்புக்காக மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.அவர் பாட்டிலை உள்ளே சொருகியதற்காக கண்ணீர் விட்டு அழுது கொண்டிக்கிறார். அது அவருக்கு வலியை ஏற்பபடுத்தி உள்ளது. எனவே அவரது நிலையை நாங்கள் கவனித்து வருகிறோம்" என்று மருத்துவர் பாண்டியராஜ் கூறினார்.

மே 16 முதல் திறப்பு
மே 7ம் தேதி தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. ஆனால் சமூக இடைவெளியை பின்பற்ற வில்லை என்று கூறி மதுபான விற்பனை கடைகளை மூட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியிருந்தது. உச்ச நீதிமன்றம் கடைகளை திறக்க அனுமதித்தது. அதன்பின்னர் தமிழக அரசு மீண்டும் டாஸ்மாக் கடைகளை 16ம் தேதி திறந்தது. மதுக்கடைகளில் கூட்டத்தை கட்டுப்படுத்தவும் சமூக இடைவெளியை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுத்தது.
-
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications