அன்று மாணவர் சங்கம்.. இன்று நாடாளுமன்ற எம்பி.. நாகையில் சிபிஐ வை.செல்வராஜ் மெகா வெற்றி.. யார் இவர்?

Subscribe to Oneindia Tamil

நாகப்பட்டினம்: நாகை லோக்சபா தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட சிபிஐ வேட்பாளர் வை.செல்வராஜ் வெற்றி பெற்றுள்ளார்.. அரசியலில் படிப்படியாக முன்னேறி இப்போது இடதுசாரிகள் சார்பில் லோக்சபா தேர்தலில் வென்றுள்ள இந்த வை.செல்வராஜ் யார்.. இவரது பின்னணி என்ன என்பது குறித்துப் பார்க்கலாம்.

நமது நாட்டில் லோக்சபா தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் தேசியளவில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.

மறுபுறம் தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணியே அட்டகாசமான ஒரு வெற்றியைப் பதிவு செய்தது. நேற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கிய போது சில தொகுதிகளில் பின்னடைவைச் சந்தித்தாலும் இறுதியில் அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வென்றது.

நாகப்பட்டினம் தொகுதி:
அதில் நாகப்பட்டினம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வை செல்வராஜ் வெற்றி பெற்றார். அவர் 4,65,044 வாக்குகளைப் பெற்று சுமார் 2,08,957 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். சிபிஐ கட்சி நாட்டிலேயே இரண்டு தொகுதிகளில் மட்டுமே வென்றுள்ளது. அவை இரண்டுமே தமிழ்நாட்டில் இருந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நாகப்பட்டினம் தொகுதியில் வென்ற செல்வராஜ் யார் என்பது குறித்துப் பார்க்கலாம். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்துள்ள சவளக்காரன் பகுதியில் உள்ள கீழநாலாநல்லூர் என்ற கிராமத்தில் உள்ள விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர் வை. செல்வராஜ்.. 62 வயதான இவர், மன்னார்குடி அரசு க்கலைக் கல்லூரியில் பி.ஏ, பூண்டி புஷ்பம் கல்லூரியில் முதுகலை கல்வி ஆராய்ச்சி பட்டம் பெற்றுள்ளார்.

மாணவர் இயக்க தலைவர்: கல்லூரியில் படிக்கும் போதே அனைத்திந்திய மாணவர் பெருமன்ற மாணவர் இயக்க தலைவராக பணியாற்றி உள்ள அவர், 1980இல் இடதுசாரிகள் கட்சியில் இணைந்தார். அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் செயலாளர், மன்னார்குடி ஒன்றிய செயலாளர், திருவாரூர் மாவட்ட ஊராட்சி உறுப்பினர், திருவாரூர் மாவட்ட ஊராட்சி தலைவர் என்று படிப்படியாகவே முன்னேறி இருக்கிறார்.

அப்போது மூணாறு தலைப்பு வெண்ணாறு பிரிவிலிருந்து பொன்னீரை வரை சுமார் 50 கீ.மீட்டர் தூரத்திற்குத் தூர்வாரும் பணியையும் மேற்கொண்டார். இது அவருக்கு மிகப் பெரிய அரசியல் அங்கீகாரத்தை வாங்கி தந்தது. மக்களிடையே இவரது செல்வாக்கும் உயர்ந்தது. அப்போது டெல்லியில் நடந்த பஞ்சாயத்து ராஜ் மாநாட்டில் குடியரசுத் தலைவர் இந்தியப் பிரதமர் முன்னிலையில் உள்ளாட்சி அமைப்புகளில் அதிகார பகிர்வு குறித்தும் உரையாற்றும் வாய்ப்பையும் இது பெற்றுத் தந்தது.

மீண்டும் வெற்றி:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்டச் செயலாளராகவும் இவர் இருக்கிறார். இவரது மனைவி ஜீவரேகா நீதித்துறையில் பணியாற்றி வருகிறார். இவருக்கு இரண்டு குழந்தைகள்.. எளிய குடும்பத்தில் பிறந்த இவர் உழைப்பின் மூலமாகவே இந்தளவுக்கு உயர்ந்துள்ளார். நாகப்பட்டினம் மக்களும் அவரை இப்போது எம்பியாக தேர்வு செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+