"கல்யாணம் ஆன அன்னைக்கு நைட்டே" ஷாக் மனைவி.. உதைத்த கணவர்.. சிக்கலில் அதிமுக பிரமுகர்!
நாகர்கோயில்: "கல்யாணம் ஆன அன்னைக்கு நைட்டே... என் கணவருக்கு ஒரு பெண்ணிடம் இருந்து மெசேஜ் வந்தது.. அதை பற்றி கேட்டதற்கு என்னை அடித்து துன்புறுத்துகிறார்... வேறு ஒரு பெண்ணை திருமணமும் செய்துள்ளார்.. நடவடிக்கை தேவை" என்று அதிமுக பிரமுகர் மீது இளம்பெண் ஒருவர் நாகை எஸ்பி ஆபீஸில் புகார் அளித்துள்ளார்.
கேரள மாநிலம் பால்ராமபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நளினகுமாரி.. 36 வயதாகிறது.. இவரது கணவர் ஷாஜின் காந்தி... காதலித்து கல்யாணம் செய்துகொண்டனர்.

ஷாஜின், சுசீந்திரம் அக்கரை பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகர் என்று கூறப்படுகிறது... இந்நிலையில் தன் கணவன் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், இன்னொரு பெண்ணுடன் வாழ்ந்து வருவதாகவும் நளினகுமாரி நாகர்கோயில் எஸ்பி ஆபீசில் புகார் ஒன்றினை தந்துள்ளார்.
மேலும் இதுகுறித்து அவர் சொல்லும்போது, "2012-ல் ஷாஜினை சந்தித்தேன்.. அப்போதுதான் பழக்கம் ஏற்பட்டது. காதலாக மாறியது.. எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி, டைவர்ஸ் ஆன விஷயத்தை அவரிடம் சொன்னேன்.. அதற்கு பரவாயில்லை என்று சொல்லி, முறைப்படி வந்து பெண் கேட்டார்.. இந்துவான நான் கிறிஸ்டியன் மதம் மாற வேண்டும் என சொன்னார்கள்.. அதன்படி கிறிஸ்தவ மதம் மாறினேன்.. ஒரு சர்ச்சில் ஞானஸ்தானம் எடுத்து ஆனி லதா என மாற்றிக்கொண்டேன். இரு வீட்டிலும் 16.9.2013-ல் எங்களுக்கு கல்யாணம் செய்து வைத்தனர்.
கல்யாணம் ஆன அன்றைய தினம் இரவு அவரது செல்போனுக்கு ஒரு மெசேஜ் வந்தது.. ஒரு பெண் அனுப்பியிருந்தார்.. அதனால் வேறு ஒரு பெண்ணுடன் ஷாஜிக்கு உறவு இருப்பதை அறிந்து கொண்டேன். மறுநாள் இதை பற்றி கேட்டதற்கு என்னை அடித்தார்.. 2017-ல் நடந்த சண்டையின்போதுகூட என்னை இரும்புக் கம்பியால் அடித்து என் கை எலும்பு உடைந்துவிட்டது.
கேரளா சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டேன். இந்த சமயத்தில், சென்ற வருடம் ஜனவரியில் வேறு ஒரு பெண்ணை கல்யாணம் செய்து கொண்டுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுதான் புகார் தந்துள்ளேன்" என்றார். ஆனால் இந்த குற்றச்சாட்டு அனைத்தையும் ஷாஜின் மறுத்துள்ளாராம்.. தன் மீது வேண்டுமென்றே பழி போடுகிறார் என்றும் சட்டப்படி அதை சந்திக்க தான் தயாராக இருப்பதாகவும் கூறுகிறாராம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications