Amrit Bharat Train: 17 மணி நேர பயணம்! ஆமை வேகத்தில் அம்ரித் பாரத்! நாகர்கோவில் பயணிகள் அதிருப்தி
நாகர்கோவில்: புதியதாகத் தொடங்கப்பட்டுள்ள நாகர்கோவில் ஜங்ஷன் - மங்களூரு ஜங்ஷன் 'அம்ரித் பாரத்' (Amrit Bharat Train) ரயில் சேவையை வரவேற்கும் அதே வேளையில், அதன் பயண நேரம் மிக அதிகமாக இருப்பதாகப் பயணிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

ஆமை வேகப் பயணம்
இதுகுறித்து தமிழ் ரயில் தகவல் எனும் சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: நீண்ட நேரம்: சுமார் 700 கி.மீ தூரத்தைக் கடக்க இந்த ரயில் 17.2 மணி நேரம் எடுத்துக்கொள்கிறது. இது சராசரியாக மணிக்கு 40 கி.மீ வேகம் மட்டுமே.
ஒப்பீடு: 54 நிறுத்தங்களைக் கொண்ட 'பரசுராம் எக்ஸ்பிரஸ்' ரயிலை விட, வெறும் 21 நிறுத்தங்களைக் கொண்ட இந்த 'அம்ரித் பாரத்' ரயில் மெதுவாகச் செல்வது வேடிக்கையாக உள்ளதாகப் பயணிகள் சுட்டிக் காட்டுகின்றனர்.
காத்திருப்பு: குறிப்பாக, காசர்கோடு முதல் மங்களூரு ஜங்ஷன் வரையிலான பயணத்திற்கு மட்டும் சுமார் 3 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது (வழக்கமாக 40 நிமிடங்கள் போதும்). இதனால் பயணிகள் தேவையில்லாமல் ரயிலில் காத்திருக்க வேண்டியுள்ளது.
நேர அட்டவணைச் சிக்கல்
கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயனாளர்கள் சங்கத்தின் செயலாளர் பி. எட்வர்ட் ஜெனி கூறுகையில், "இந்த ரயிலின் நேர அட்டவணை இரவுப் பயணத்திற்கு ஏற்றதாக இல்லை. பகல் நேரத்தில் ஸ்லீப்பர் வசதியுடன் இயக்குவது பயணிகளுக்குப் பயனளிக்காது," என்றார்.
நாகர்கோவிலில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை 11:40 மணிக்குப் புறப்படும் ரயில், மறுநாள் அதிகாலை 5:00 மணிக்கு மங்களூரு சென்றடைகிறது. இது மிகவும் நீண்ட பயணமாகும்.
நீட்டிப்பு கோரிக்கை (Extension Demand): இந்த ரயில் சேவையை மேலும் பயனுள்ளதாக மாற்ற, பயணிகள் இரு முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்:
தெற்கே: நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி (Kanniyakumari) வரை நீட்டிக்க வேண்டும்.
வடக்கே: மங்களூருவில் இருந்து கோவா (Vasco-da-Gama) அல்லது சுப்ரமணியா ரோடு (Subrahmanya Road - குக்கே சுப்ரமணியா கோயில்) வரை நீட்டிக்க வேண்டும்.
இவ்வாறு நீட்டிப்பதன் மூலம், கன்னியாகுமரி முதல் கோவா வரையிலான ஒரு நேரடி இணைப்பாகவும், அல்லது புகழ்பெற்ற குக்கே சுப்ரமணியா கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கு ஒரு சிறந்த வசதியாகவும் இது அமையும் எனப் பயணிகள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு தற்போது 3 அம்ரித் ரயில்கள் கிடைத்துள்ளன. திருச்சியில் இருந்து நியூ ஜல்பாய்குரிக்கு (20610) அம்ரித் பாரத் ரயில், நாகர்கோவிலில் இருந்து நியூ ஜல்பாய்குரிக்கு (20604) அம்ரித் பாரத் ரயில், தாம்பரம் - சந்திரகாச்சி வாராந்திர அம்ரித் பாரத் ரயில் (16107) ஆகிய ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
அம்ரித் பாரத் என்றால் என்ன?
அம்ரித் பாரத் என்பது குளிர்சாதன வசதி இல்லாத பெட்டிகள் கொண்ட விரைவு ரயில்களாகும். இவை 800 கி.மீ. தொலைவில் உள்ள நகரங்களுக்கிடையே இயக்கப்படுகிறது.இவை கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் இயக்கப்பட்டு வருகின்றன. மொத்தம் 22 பெட்டிகளை கொண்டது. 10 படுக்கை பெட்டிகளும் 10 பொது பெட்டிகளும் இருக்கும். பார்சல்களை கொண்டு செல்ல இரு பெட்டிகளும் இருக்கும். இது மணிக்கு 110 முதல் 130 கி.மீ. வேகத்தில் செல்லும்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications