ரீல்ஸ் மோகம்.. கன்னியாகுமரி இளம்பெண் செஞ்சதை பாருங்க! இப்போ தலைமறைவாம்!
நாகர்கோவில்: ஓடும் ரயிலில், படிக்கட்டில் நின்றவாறு நடனமாடி இன்ஸ்டா ரீல்ஸ் செய்த இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். விசாரணையில் அப்பெண் கன்னியாகுமரியை சேர்ந்தவர் என்றும், தற்போது போலீசுக்கு பயந்து தலைமறைவாகி இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் ரயில் விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகள் கவலையளிப்பதாக இருக்கிறது. குறிப்பாக கடந்த 5 ஆண்டுகளில் 351 பேர் ரயில் விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். ஆனால் ரயில் தண்டவாளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தவர்கள், ஓடும் ரயிலில் ஏற முயன்று விழுந்து உயிரிழந்தவர்கள், ரீல்ஸ் மோகத்தில் ஓடும் ரயிலுக்கு அருகே வீடியோ எடுக்க முயன்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். எனவே ரயில்வே காவல்துறை இது குறித்து தொடர்ந்து அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது.

இப்படி இருக்கையில்தான் இளம்பெண் ஒருவர், ஓடும் ரயிலின் படிக்கட்டில் நின்று கொண்டு வீடியோ எடுத்து, அதை ரீல்ஸாக வெளியிட்டிருக்கிறார். இந்த ரீல்ஸ் பரவலாக ஷேராகியிருந்த நிலையில், சம்பந்தப்பட்ட இளம்பெண் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்த தொடங்கியுள்ளனர்.
இதனையடுத்து ரயில்வே போலீசார் வீடியோவை வைத்து வழக்குப்பதிவு செய்து முதல்கட்ட விசாரணையை தொடங்கினர். விசாரணையில் வீடியோ எடுக்கப்பட்டிருப்பது நாமக்கல் டூ நாகர்கோவில் செல்லும் ரயிலில் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து நாமக்கல் மற்றும் நாகர்கோவிலை சேர்ந்த பிரபலமான இன்ஸ்டாகிராம் ஐடிகளை போலீசார் சோதனை செய்தனர். அதில், நடனமாடிய இளம்பெண், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் என்பது தெரிய வந்திருக்கிறது.
நாகர்கோவில் தளவாய்புரம் பகுதியில் வசித்து வந்த இவர், போலீஸ் தன்னை தேடுகிறது என்பதை தெரிந்துகொண்டு தலைமறைவாகிவிட்டார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ரயில்வே போலீசார் தலைமறைவான இளம்பெண்ணை தேடி வருகின்றனர். இதுபோன்ற பொறுப்பற்ற, உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
ரீல்ஸ் மோகம் - ஓடும் ரயிலில் படிக்கட்டில் நின்று ஆபத்தான ஆட்டம் போட்டு இன்ஸ்டாவில் பதிவிட்ட கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த இளம்பெண்.!
— Kᴀʙᴇᴇʀ - தக்கலை கபீர் (@Autokabeer) June 1, 2025
இப்பெண் மீது ரயில்வே துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைதளவாசிகள் கருத்து.#Kanyakumari #Kanniyakumari#Train #Reels… pic.twitter.com/YLdW5EBZMc
ரயில் பயணங்களில் கவனம் மிக முக்கியமானதாகும். ஓடும் ரயிலின் படிக்கட்டில் அமர்ந்து பயணிப்பது, மேற்கூரையில் ஏறுவது போன்றவை உயிருக்கு ஆபத்தானவையாகும். இது குறித்து தொடர்ந்து ரயில்வே போலீஸ் எச்சரித்து வந்தாலும் சிலர் இதனை மதிக்காமல் அத்துமீறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications