நாகர்கோவில் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"நாகர்கோவில் எம்எல்ஏவின் கிராண்ட் சன்னு" முடிவு கட்டிய எம்.ஆர்.காந்தி! பரபரப்பு விளக்கம்!

Google Oneindia Tamil News

நாகர்கோவில்: செருப்புக் கூட போடாத நாகர்கோவில் எம்எல்ஏ எம்.ஆர்.காந்தியின் பேரன் என சொல்லிக் கொண்டு இளைஞர் ஒருவர் விலையுயர்ந்த பைக்கில் நம்பர் பிளேட்டுக்கு பதிலாக Grand son of Nagercoil MLA என எழுதப்பட்டிருந்தது குறித்து எம்எல்ஏ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு 4 இடங்களில் எம்எல்ஏக்கள் தேர்வாகினர். அதில் ஒருவர் நாகர்கோவில் எம்எல்ஏவாக இருக்கும் எம்.ஆர்.காந்தி.

"Grandson of MLA.." செருப்பே போடாத எம்எல்ஏ காந்தி பெயரை கெடுக்கும் அம்ரிஷ்.. அதிர்ந்த நாகர்கோவில்

இவர் ஆடம்பரத்தை விரும்பாதவர். இவர் கட்சி பணிகளுக்காக திருமணமே செய்து கொள்ளவில்லை. காலில் செருப்பு கூட போடாமல் கதர் வேட்டி, ஜிப்பா அணிந்து எளிமையாக வாழ்கிறார். இப்படியிருக்கும் நிலையில் Grand son of Nagercoil MLA Shri M.R.Gandhi என ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த ஒரு விலையுயர்ந்த பைக்கில் இளைஞர் அம்பரீஷ் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு எடுத்த புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது.

 தர்பார் பாடல்

தர்பார் பாடல்

அது போல் தமிழக சட்டசபை கூட்டத் தொடர் நடைபெறும் அரங்கில் தர்பார் படத்தில் இடம்பெற்ற "நெருப்பு பேரோட நீ குடுத்த ஸ்டாரோட" என்ற பாடல் பேக்கிரவுண்டில் ஓட இரு போலீஸாருடன் அம்பரீஷ் நடந்து வரும் வீடியோவும் வைரலாகி வருகிறது. திருமணமே செய்து கொள்ளாத எம்.ஆர். காந்திக்கு பேரனா என அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.

எம்.ஆர். காந்தி

எம்.ஆர். காந்தி

எம்.ஆர். காந்தி குறித்து விவாதங்கள் நடைபெற்றன. இந்த நிலையில் எம்.ஆர். காந்தியே தற்போது அதுகுறித்து அறிக்கை வாயிலாக விளக்கமளித்துள்ளார். அவர் கூறுகையில் நாகர்கோவிலில் என் பேரன் என்று சொல்லி வாகனத்தில் 'ஸ்டிக்கர்' ஒட்டிக் கொண்ட பையன் என் 25 ஆண்டு கால உதவியாளர் கண்ணன் என்பவரின் மகன். அவரது தவறுகளை சரி செய்து கொள்ள அறிவுறுத்தி உள்ளேன்.

குமரி மாவட்டம்

குமரி மாவட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் தமிழகம் முழுதும் என் மீது அன்பும் பற்றுதலும் கொண்ட ஒவ்வொருவரும் என் சகோதர சகோதரியர் மகள் மகன் பேரன் பேத்தி ஸ்தானத்தில் உள்ளவர்களே. எனக்கு இயக்கம்தான் குடும்பம். இயக்கத்தை சார்ந்த அனைவரும் என் உறவினர்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 யார் இந்த அம்பரீஷ்?

யார் இந்த அம்பரீஷ்?

எம்.ஆர். காந்தியின் டிரைவராக இருந்தவர் கண்ணன். அவர் எம்எல்ஏ ஆனதும் கண்ணனுக்கு உதவியாளராக பதவியுயர்வு கிடைத்தது. கண்ணனுக்கு இரு மகன்களாம். அதில் ஒருவர்தான் அம்பரீஷ். இவர் தனது முகநூல் பக்கத்திலும் அம்பரீஷ் பிஜேபி என பதிவிட்ட போட்டோவும் தற்போது வைரலாகி வருகிறது.

English summary
MLA M.R. Gandhi explains that the youth who had name plate that depicts he is the grandson of Gandhi MLA is the MLA's Personal Assistant's son.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X