2004 சுனாமியில் ஒரு உயிர் கூட போகாத அதிசய கிராமம் தெற்குபொய்கைநல்லூர்.. என்னதான் "மர்மம்"?

Subscribe to Oneindia Tamil

நாகை: 2004 ஆம் ஆண்டு சுனாமி பாதிப்பில் நாகை கடற்கரை கிராமங்களில் பெரும்பாலான இடங்களில் மக்கள் சுனாமிக்கு இரையாகினர். ஆனால் அங்குள்ள தெற்கு பொய்கைநல்லூர் கிராமத்தில் ஒருவர் கூட சுனாமியால் உயிரிழக்கவே இல்லை. இதற்கு காரணம் இங்கிருக்கும் ஒரு உலக அதிசயம்தான்!

நாகை மாவட்டத்தில் கடற்கரை கிராமங்களில் ஒன்று தெற்குபொய்கைநல்லூர். இங்குள்ள கடற்கரையிலிருந்து 50 மீட்டர் தொலைவில் அந்த காலத்தில் பனை ஓலைகளை வெட்டி அரண் போல் வைத்திருந்தனர். அப்போது கடல் அலைகளால் அடித்து வரப்படும் கடல் மணல் பனை ஓலைகளில் அடித்து அடித்து அது ஒரு பெரிய 60 அடி மணல் குன்றாக மாறிவிட்டது.

 தாவரங்கள்

தாவரங்கள்

இந்த மணல் சரியாமல் இருப்பதற்கு Sand binders எனும் தாவரங்கள் இந்த மணல் குறையாத வண்ணம் பார்த்துக் கொள்கிறது. இவை மணலை இறுகப்பிடித்து எஃகு கோட்டையாக மாற்றிவிடுகின்றன. தமிழகத்தில் ஏராளமான மணல் குன்றுகள் இருப்பது பெரும் வரமாகும்.

 புயல் காலம்

புயல் காலம்

இவை புயல் காலத்தில் மக்களை பாதுகாக்கிறது. நிலத்தடி நீரில் கடல் நீர் கலக்காமல் பார்த்துக் கொள்கிறது. இவ்வளவு ஏன் கடந்த 2004 ஆம் ஆண்டு ஜாவா தீவுகளில் ஏற்பட்ட சுனாமியால் பெரும்பாலானோர் உயிரிழந்தனர். நாகை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கடற்கரை கிராமங்களில் உள்ளவர்கள் அலைகளில் அடித்துச் செல்லப்பட்டனர்.

 தெற்கு பொய்கைநல்லூர்

தெற்கு பொய்கைநல்லூர்

ஆனால் தெற்குபொய்கைநல்லூரை மட்டும் சுனாமி அலை தீண்டவே முடியவில்லை. இந்த ஊரில் சுனாமியால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. இதற்கு காரணம் அங்கு நெஞ்சை நிமிர்த்துக் கொண்டு நிற்கும் மணல் குன்றுகள்தான். எங்கு பார்த்தாலும் மணல் குன்றுகளாக காட்சியளிக்கிறது.

 மனிதர்கள் உருவாக்கியது

மனிதர்கள் உருவாக்கியது

கால போக்கில் மனிதர்களே மணல் மேடுகளை உருவாக்கி இயற்கை பேரிடர்களில் இருந்து பாதுகாத்து கொண்டனர். தெற்கு பொய்கை நல்லூரில் இருக்கும் மணல் மேடு 60 அடி உயரத்தில் 6 கி.மீ, நீளத்திற்கு நீண்டிருக்கிறது. இந்த மணல் மேட்டால் இந்த ஊரில் மட்டும் கடல் நீர் உட்புகவே இல்லை. இது போன்ற மணல் மேடுகள்தான் இயற்கை பேரிடர் காலத்தில் மக்களை பாதுகாக்கும் ஆயுதங்கள் மாறுகின்றன. தமிழகத்தில் சிவப்பு மணல் மேடுகள் தூத்துக்குடி தேரிக்காடு பகுதியில் காணப்படுகிறது. உலகிலேயே சில இடங்களில் மட்டும் இது போன்ற பெரிய பெரிய மணல் குன்றுகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இயற்கை பேரிடரை தடுக்க ஒரு மணல் குன்று, அந்த குன்று உடையாமல் இருக்க அதற்கென தாவரங்கள்- எத்தனை அழகான விஷயங்கள்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+