'டபுள் மீனிங்' சேட்டிங்.. ஆபாச வீடியோக்கள்.. நாகர்கோவில் காசிக்கே டஃப் கொடுக்கும் பாதிரியார்.. ஷாக்
கன்னியாகுமரி பாதிரியாரின் ஆபசப்பட விவகாரம் நாகர்கோவில் காசி விஷயத்தை விட பெரியதாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் இளம் பாதிரியார் ஒருவர் பல பெண்களிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டு அதை வீடியோவாக எடுத்து மிரட்டியுள்ள சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் நாகர்கோவில் காசியின் லீலைகளையே மிஞ்சிவிடும் அளவுக்கு இருப்பதாக சொல்லப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் பெனடிக் ஆன்றோ(29). இவர் குழித்துறை அருகே உள்ள சீரோ மலங்கரை கத்தோலிக்க திருச்சபையில் பாதிரியாராக ஊழியம் செய்து வருகிறார். ஆனால் இவர் பாதிரியாராக பொறுப்பேற்றதிலிருந்து ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வந்துள்ளார். இதற்கு முன்னர் குளித்தலையில் உள்ள ஒரு தேவாலயத்தில் இதேபோன்று பாதிரியாராக பணியாற்றி வந்தபோது இவர் மீது ஏராளமான விமர்சனங்கள் எழுந்திருக்கிறது.
இப்படி இருக்கையில்தான் இவர் குழித்துறை தேவாலயத்திற்கு மாற்றப்பட்டார். இந்த தேவாலயத்திற்கு வந்ததிலிருந்து இங்கு வேலை செய்யும் ஊழியர்கள் பலர் இவர் குறித்து தொடர்ந்து விமர்சித்து வந்திருக்கின்றனர். பலருக்கு இதற்கான காரணம் என்னவென்று தெரிந்திருக்கவில்லை. இந்நிலையில் ஒருசில நாட்களுக்கு முன்னர் இவருடைய லேப்டாப் ஒன்று காணாமல் போயுள்ளது. தனது லேப்டாப் திருடப்பட்டதாக அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

ஆபாச படம்
புகார் அளித்த இரண்டு நாட்களுக்கெல்லாம் இவருடைய அந்தரங்க புகைப்படங்கள் சோஷியல் மீடியாக்களில் பரவியது. முதலில் போட்டோக்கள் மட்டும் பரவிய நிலையில், தற்போது வீடியோக்களும் பரவி வருகிறது. சாதாரணமாக ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக பழகுவது அவர்களுடைய தனிப்பட்ட விருப்பம். ஆனால் அதே ஆண் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களுடன் பழகுவது பெண்களை ஏமாற்றுவதாகும். எனவே இது தொடர்பாக பாதிரியார் ஆன்றோ மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் பலர் வலியுறுத்தியிருந்தனர். புகாரின் அடிப்படையில்தான் காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என்பதால் நேற்றுவரை காவல்துறையும் மவுனம் காத்து வந்தது.

புகார்
இப்படி இருக்கையில் 18 வயது மாணவி ஒருவர் ஆன்றோவுக்கு எதிராக புகார் அளித்துள்ளார் புகாரில், தான் ஆன்றோவை முதலில் சந்தித்தபோது சகஜமாக பேசியதாகவும், ஆனால் நாட்கள் செல்ல செல்ல இரட்டை அர்த்தத்தில் தன்னை தொட்டு தொட்டு பேசியதாகவும் கூறியுள்ளார். மேலும, "இந்த விஷயத்தால் நான் அந்த தேவாலயத்திற்கு செல்வதை தவிர்த்தேன். ஆனால் என்னுடைய பெற்றோர் அதே தேவாலயத்திற்குதான் சென்று வந்தனர். இதனை பயன்படுத்தி எனது தாயிடமிருந்து என்னுடைய செல்போன் எண்ணை பெற்று அதில் ஆபாசமாக குறுஞ்செய்திகளை அனுப்பி தொந்தரவு செய்ய தொடங்கினார். என்னிடம் மட்டுமல்லாது பல பெண்களுடன் அவருக்கு தொடர்பு இருக்கிறது" என்று கூறியுள்ளார்.

வழக்குப்பதிவு
இந்த புகாரின் அடிப்படையில் 5 வழக்குகளை காவல்துறையினர் பெனடிக் ஆன்றோவுக்கு எதிராக பதிவு செய்துள்ளனர். தற்போது ஆன்றோ தலைமறைவாகியுள்ளார். அவரை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இது இவ்வாறு இருக்க மறுபுறம் இந்த சம்பவத்தையும் நாகர்கோவில் காசி சம்பவத்தையும் சிலர் ஒப்பிட்டு பேசி வருகின்றனர். ஆன்றோவை போலவே காசியும் பல பெண்களை காதலிப்பதாக கூறி, அவர்களுடன் உல்லாசமாக இருந்து அது தொடர்பான வீடியோக்களை அவர்களுக்கே தெரியாமல் எடுத்து வைத்து பணத்திற்காக அப்பெண்களை மிரட்டியுள்ளார். இதில் பள்ளி மாணவிகள் முதல் மருத்துவர் வரை அடங்கும்.

நாகர்கோவில் காசி
இது தொடர்பாக ஒரு இளம்பெண் அளித்த புகாரில் மொத்த உண்மையும் வெளியே கசிந்திருக்கிறது. இதனையடுத்து அவரை கைது செய்த காவல்துறை அவருடைய அறையில் சோதனையிட்டது. இதில் லேப்டாப்கள், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த லேப்டாப்பில் சுமார் 400 ஆபாச வீடியோக்கள் இருந்துள்ளன. அதேபோல 1900 படங்களும் இருந்துள்ளன. இவை அனைத்தும் 120 பெண்களுடன் காசி செய்த லீலைகளின் தொகுப்புதான். இதனையடுத்து இவர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. 2020ம் ஆண்டு கைதான காசிக்கு தற்போது வரை ஜாமீன் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications