மாடு மேய்க்க போன தீபா.. நிர்வாண நிலையில் சடலம்.. வாயில் துணி.. 2 குழந்தைகளின் தாய்க்கு நேர்ந்த கதி!
25 வயது பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்
நாமக்கல்: மாடு மேய்க்க போன தீபா, நிர்வாண நிலையில்.. சடலமாக கிடந்தது எப்படி என தெரியவில்லை.. வாயில் துணியை அடைத்து வைத்துள்ளனர்.. காட்டுக்குள் இருந்து தீபாவின் சடலத்தை மீட்டு நாமக்கல் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், இது சம்பந்தமாக ஒருவரை கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள குண்டலிநாடு ஊராட்சி கீரைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் நடேசன்.. இவரது மனைவி தீபா.. 25 வயதாகிறது.. 7 மற்றும் 2 வயதில் 2 குழந்தைகள் இருக்கிறார்கள்.

இவர்களுக்கு பிரதானமே விவசாயம்தான்.. நடேசன் விவசாயம் பார்த்து வருகையில், அவருக்கு உதவியாக தீபா ஆடு மாடுகளை மேய்க்க செல்வார்.
அப்படித்தான் சம்பவத்தன்றும், ஆடு, மாடுகளை மேய்த்துவிட்டு வருவதாக சொன்னார்.. அப்படியே துணிகளையும் துவைத்து விட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு, கீரைக்காடு காட்டுப்பகுதிக்கு சென்றிருக்கிறார்.. ஆனால் ரொம்ப நேரமாகியும் தீபா வீட்டுக்கு திரும்பவே இல்லை.
அதனால் பதறி போன நடேசன், உறவினர்கள் வீடுகளுக்கு சென்று தேடினார்.. அங்கேயும் இல்லை.., அதனால் உறவினர்களும் சேர்ந்து தீபாவை தேடினர்.. இரவெல்லாம் தேடியும் கிடைக்காமல், விடிந்த பிறகுதான், கீரைக்காடு காட்டுப்பகுதியில் நிர்வாண நிலையில் தீபாவின் சடலம் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது..
உடம்பெல்லாம் ரத்த காயங்கள் இருந்தன.. வாயில் துணி வைத்து அடைக்கப்பட்டிருந்தது.. மனைவியின் சடலத்தை கண்டு கதறி அழுதார் நடேசன்.. போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.. விரைந்து வந்த அவர்கள் சடலத்தை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.
தீபாவை யாராவது பலாத்காரம் செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.. அவர் சத்தம் போடாமல் இருப்பதற்காக வாயில் துணி வைத்து திணித்து, அதன்பிறகு பலாத்காரம் செய்திருக்கலாம் என்றும், அதன்பிறகு அடித்து கொன்றிருக்கலாம் என்றும் முதல்கட்டமாக கூறப்பட்டது.. ஆனால் எதுவாக இருந்தாலும் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தால்தான் தெரியும் என்று தெரிவித்த போலீசார் இது சம்பந்தமான விசாரணையையும் அதிரடியாக துவங்கினர்.
அப்போது, தீபாவின் உடம்பெல்லாம் கற்களால் தாக்கியதற்கான அடையாளங்கள் இருந்தன.. எப்படியும் காட்டு பகுதியில்தான் அவரை கொலை செய்திருக்க முடியும் என்ற கோணத்தில் விசாரணை நடந்தது.. சந்தேகத்தின் பேரில் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போதுதான் அருண் என்பவர் சிக்கினார்.. 17 வயசுதானாம் இவருக்கு.. தீபாவை பலாத்காரம் செய்து, கல்லாலேயே அடித்து கொன்றுள்ளார்.. இவரை போலீசார் கைது செய்துள்ளனர்.. அருண் மைனர் என்பதால், சிறுவர் சீர்திருத்த காப்பகத்தில் அடைக்க வாழாவந்திநாடு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications