நாமக்கல்லில் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி மரணம்.. அம்மா, தம்பி உள்பட 3 பேருக்கு தீவிர சிகிச்சை
நாமக்கல்: நாமக்கல்லில் தனியார் ஹோட்டலில் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த ஹோட்டலில் தாய் அவரது மாமா, அத்தை அனைவரும் நாமக்கல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
நாமக்கல் ஏ.எஸ்.பேட்டையை சேர்ந்த தவக்குமார் என்பவரது மனைவி சுஜாதா (38).இவர தனது மகள் கலையரசி (14) மகன் பூபதி (12) ஆகியோருடன் கடந்த 16ஆம் தேதி நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலுக்கு சாப்பிட சென்றுள்ளார். அப்போது சுஜாதாவின் அண்ணன் சினோஜ் (56), அண்ணி கவிதா (50) ஆகியோரும் அவர்களுடன் சென்றுள்ளனர். அங்கு சவர்மா உள்ளிட்ட இறைச்சி உணவு வகைகளை பார்சல் வாங்கிக்கொண்டு வீடு திரும்பியுள்ளனர்.

ஹோட்டலில் வாங்கி வந்த உணவுகளை வீட்டில் சாப்பிட்ட நிலையில், கொஞ்ச நேரத்தில் கலையரசி உடல் நலம் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவரை நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.. அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை கலையரசி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
மாணவியுடன் உணவு சாப்பிட்ட தாய் அவரது மாமா, அத்தை அனைவரும் நாமக்கல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளனர். அதே நாள் இரவு இந்த ஹோட்டலில் உணவு சாப்பிட்ட 11 மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவியருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டிருக்கிறது. அவர்களும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவத்தை அடுத்து குறிப்பிட்ட ஹோட்டலுக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் சீல் வைத்து உத்தரவிட்டுள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications