அங்கேயுமா? திண்டுக்கல்லில் வெடிசப்தம் கேட்ட அதேநேரத்தில் அதிர்வுகளால் அதிர்ந்த நாமக்கல்!
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் திடீரென நில அதிர்வுகள் உணரப்பட்டதால் பொதுமக்கள் அச்சம அடைந்தனர். அதேநேரத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் பயங்கர வெடிசப்தமும் கேட்டதால் இரண்டுக்கும் ஏதேனும் தொடர்பிருக்கலாமோ என்கிற சந்தேகமும் எழுப்பப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று மீண்டும் பயங்கர வெடிசப்தம் கேட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் பல முறை இதேபோல பயங்கர வெடிசப்தங்கள் கேட்பதும் மாவட்ட நிர்வாகம் மழுப்பலான பதிலைத் தருவதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாடு சட்டசபையில் வேடசந்தூர் எம்.எல்.ஏ. காந்திராஜன் இது தொடர்பாக கேள்வி எழுப்பி இருந்தார்.

ஆனாலும் திண்டுக்கல் மாவட்டத்தில் அடிக்கடி கேட்கப்படும், பீதியில் உறைய வைக்கும் இந்த மர்ம சப்தங்களின் காரணம் அல்லது பின்னணி தெரியவில்லை. இன்று திண்டுக்கல்லில் வெடிசப்தம் கேட்ட அதேநேரத்தில் நாமக்கல் மாவட்டத்திலும் கடும் நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன. நாமக்கல் மாவட்டத்தின் மோகனூர் உள்ளிட்ட பகுதிகளில் இந்த நில அதிர்வுகள் உணரப்பட்டிருக்கின்றன. இது நில அதிர்வா? அல்லது வேறு ஏதேனும் ஒன்றா? என்பது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டம் கரூர் எல்லையில் ரெங்கமலை, கருமலைப் பகுதிகளில் மத்திய அரசு நடத்துகிற ஆய்வுகள் மீதுதான் பொதுமக்கள் சந்தேகம் எழுப்புகின்றனர். ரெங்கமலை, கருமலை பகுதிகளில் பூமிக்கு அடியில் ஏதேனும் ரகசிய ஆய்வுகளை மத்திய புவியியல் துறையினர் மேற்கொள்கின்றனரா? என்பதும் பொதுமக்களின் கேள்வி.
திண்டுக்கல் புறநகரில் முகாமிட்டிருக்கும் மத்திய புவியியல் துறை அதிகாரிகள் நீண்டகாலம் வேடசந்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனிமவளம் தொடர்பாக ஆய்வுகள் நடத்தி அறிக்கைகளை மத்திய அரசுக்கு அனுப்பி வருகின்றனர். இந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஏதேனும் ஆய்வு நடத்தப்பட்டதா? என்கிற சந்தேகமும் முன்வைக்கப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications