திமுகவினர் நிறைய லட்டு சாப்பிட்டுள்ளனர்.. எங்களுக்கு லட்டே வேண்டாம்.. அமைச்சர் விஜயலட்சுமி
நாமக்கல்: தவெக ஆட்சியமைத்து 4 மாதங்கள் கடந்துவிட்டன. அரசியல் மாற்றம் ஏற்பட்டாலும், நிர்வாகத்தில் குளறுபடி இருப்பதாக எதிர்க்கட்சிகள் புகார் கூறி வருகிறார்கள். சட்டசபையிலும், வெளியிலும் தவெக, திமுக இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் திமுகவினர் லட்டு சாப்பிட்டு சாப்பிட்டு சுகர் வந்து வீட்டில் உள்ளனர். எங்களுக்கு லட்டு வேண்டாம் என்று அமைச்சர் விஜயலட்சுமி கூறியுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் குமராபாளையத்தில் தவெக அரசின் 100 நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், "பள்ளிப்பாளையத்தில் செயல்படும் சட்டவிரோத சாய ஆலைகள் மீது கடும் நடவடிக்கை தொடரும். யாராக இருந்தாலும் மூடுவோம். எங்களுக்கு மக்கள் நலன் தான் முக்கியம். அவர்கள் மட்டும் நன்றாக இருந்தால் போதுமென நினைத்தனர். எங்களுக்கு மக்கள் தான் சொந்தம்.

கஜானாவே காலி
கஜானாவையே காலி செய்துள்ளனர். தவெக 100 நாட்களிலேயே நிறைய சாதனை செய்துள்ளனர். தளபதியை மனதில் வைத்து தூய்மை பணியாளர்கள் அமைதியாக போரடினர். அனைவரின் கோரிக்கையும் நிறைவேற்றப்படும். ஒவ்வொரு பெண்களுக்கும் அண்ணாக இருந்த 3 சிலிண்டர்கள், கூட்டுறவு கடன் தள்ளுபடி, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைக்கு தாய்மாமன் தங்க மோதிரம், சிங்க பெண் படை, போதை தடுப்பு படை அமைக்கப்பட்டுள்ளது.
நிறைய தொழில் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. 717 டாஸ்மாக் கடைகளை மூடியுள்ளோம். அதையும் மீறி செயல்படுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இன்னும் நிறைய சாதனைகளை செய்வோம். தளபதி ஒருவருக்காக மட்டும் தான் எங்களுக்கு மக்கள் ஓட்டு போட்டனர். அவரின் உழைப்பு வீணாவது போல நாங்கள் நடந்து கொள்ள மாட்டோம். மக்களும் அவரை விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.
லட்டு நியாபகத்திலேயே
தவெக ஆட்சி நேர்மையாக உள்ளது. எதிர்க்கட்சியை சேர்ந்த பழைய மூத்த அரசியல் வாதிகள் லட்டு லட்டு என்று சொல்லி கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு லட்டு சாப்பிட்டு சாப்பிட்டு லட்டு நியாபகத்திலேயே இருக்கிறார்கள். அதையவே எங்களிடம் சொல்கிறார்கள். எங்களுக்கு அந்த லட்டு எல்லாம் வேண்டாம். அவர்களே லட்டு சாப்பிட்டு சுகர் வந்து வீட்டில் அமர்ந்துள்ளனர். எங்களுக்கு லட்டும் வேண்டாம், சுகரும் வர வேண்டாம். நல்ல உடல் ஆரோக்கியத்துடன் மக்கள் சேவை செய்தால் போதும். நேர்மையாக செயல்படுவோம் " என்றார்.


Click it and Unblock the Notifications
