நாமக்கல் சிலிர்த்துடுச்சே.. மாரியம்மன் கோயிலுக்கு இஸ்லாமியர்கள் தந்த அன்பளிப்பு! இது தான் இந்தியா
நாமக்கல்: இந்து - முஸ்லிம் மக்களின் ஒற்றுமை காலகாலத்துக்கும் இணக்கமாகவே பயணித்து வருகிறது என்பதற்கு மற்றொரு உதாரணமாக நாமக்கல்லில் இந்த சம்பவம் அரங்கேறியிருக்கிறது. பிரிவினை, மோதல்கள் ஆங்காங்கே வெடித்து வந்தபோதிலும், இஸ்லாமியர்களும், இந்துக்களும் எப்போதும்போல் சகோதர ஒற்றுமையுடன் தொடர்ந்து பயணித்து வருகிறார்கள் என்பதையே இந்த நிகழ்வு காட்டுகிறது. நாமக்கல்லில் அந்த சிலிர்ப்பூட்டிய சம்பவம் என்ன தெரியுமா?
இந்து கோயில்களில் முஸ்லிம் மதத்தவர்கள் பங்கேற்பது, இந்தியாவின் பாரம்பரியமான மத நல்லிணக்கத்தின் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கி கொண்டிருக்கிறது..
மதம் வேறானாலும் மனித நேயம் ஒன்றே என்பதைக் காட்டும் விதமாக, தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் முஸ்லிம் சகோதரர்கள் திருவிழாக்களில் தண்ணீர் வழங்குதல், பந்தல் அமைத்தல் போன்ற பணிகளில் ஈடுபடுகின்றனர்.

சகோதர பாசம்சில அம்மன் திருவிழாக்களில் முஸ்லிம் நண்பர்கள் மோர், பழச்சாறு, தண்ணீர் பாட்டில் வழங்குதல் போன்ற போன்ற பணிகளில் ஈடுபடுகிறார்கள். சில இடங்களில் இஸ்லாமிய சகோதரர்கள், கோயிலுக்கு நிலம் அல்லது நிதி வழங்கியும் வருகிறார்கள்.
மொஹரம் பண்டிகை என்றாலே, திருப்புவம் முதுவந்திடல் கிராமம் முதல் தஞ்சாவூர் காசவளநாடு புதூர் கிராமம் வரை களைகட்டிவிடுவதற்கு காரணம், இங்குள்ள இந்துக்களும் மிக சிறப்பாக மொகரம் பண்டிகையை வெகு சிறப்பாக கொண்டாடி மகிழ்வதுதான்.
இந்து முஸ்லிம் ஒற்றுமை
இன்னமும்கூட பல்வேறு ஊர்களில் ரம்ஜான், மொகரம், தீபாவளி என 2 மத பண்டிகைகளையும் முஸ்லிம்களும், இந்துக்களும் பல்லாண்டு காலமாகவே சேர்ந்து கொண்டாடி வருகிறார்கள்.. தை மாதம் அறுவடையாகட்டும், திருமணங்கள், தொழில் துவங்குவது என எந்த நிகழ்வாகட்டும் பள்ளிவாசலில் வந்து அனுமதியை பெற்ற பிறகே இந்துக்கள் அவைகளை அங்கு ஆரம்பிக்கும் நடைமுறை இன்றும் தமிழகத்தில் உள்ளது.
சமூகத்தில் ஒற்றுமை வளர்க்க வேண்டும் என்பதற்காகவும், மத வெறுப்பை வேறோடு தடுப்பதற்காகவும், சகோதரத்துவ உணர்வை வலுப்படுத்தும் முயற்சியாகவும் இப்படியான நிகழ்வுகள் நடந்து வருகின்றன..
9 வகையான சீர்வரிசை - முளைப்பாரி
இதோ இப்போதுகூட நாமக்கல் மாவட்டத்தில் மீண்டும் ஒரு நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.. திருச்செங்கோட்டை அடுத்துள்ளது கொக்கராயன்பேட்டை.. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்ரீசுயம்பு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடைபெற உள்ளது. இதனால் மாரியம்மன் கோவிலே விழாக்கோலம் பூண்டுள்ளது.
இந்த கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, ஊர் பொதுமக்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர்... பிறகு கோவில் விழாக்குழுவினர், மேளதாளங்கள் முழங்க கோவில் அருகிலுள்ள அல் முகமதியா ஜாமியா மஸ்ஜித் பள்ளிவாசலுக்குச் சென்று, அங்கிருந்த ஜமான் பெரியவர்களிடம் கும்பாபிஷேக விழாவிற்கு அழைப்பு விடுத்தனர்.
இதையடுத்து பள்ளிவாசல் முத்தவல்லி ஜலீல் தலைமையில் சுமார் 50க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள், அன்னதானத்திற்கான ரொக்கப்பணம் ரூ.1 லட்சம், சந்தனம், மாலை, பழங்கள் உள்ளிட்ட 9 வகையான சீர்வரிசைப் பொருட்களை ஊர்வலமாக எடுத்து வந்தனர்..
இஸ்லாமியர்களை இன்முகத்துடன் கோவிலுக்குள் வரவேற்ற கோவில் நிர்வாகிகள், அவர்களுக்கு மாலை, சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்..
நெகிழ்ச்சி சம்பவம்
பிறகு தாங்கள் கொண்டுவந்த சீர்வரிசை பொருட்களை கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கவும், அவைகளை கோவில் நிர்வாகத்தினர் பெற்றுக் கொண்டு, அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்தார்கள்.. காலங்காலமாக தொன்று தொட்டு நடைபெற்று வரும் இந்த பாரம்பரிய முறையானது பலருக்கும் சிலிர்ப்பை தந்து வருகிறது.. மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழும் இந்த நிகழ்வு காண்போரை நெகிழ்ச்சியடையவும் செய்துள்ளது.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications