ராசிபுரத்தில் 4-ஆவதாக பிறந்த குழந்தை.. பெண் என்பதால் விற்றுவிடுமாறு கணவர், மாமனார் தொல்லை
ராசிபுரம்: ராசிபுரத்தில் 4-ஆவதும் பெண்ணாக பிறந்துவிட்டதால் அதை யாருக்காவது விற்று விடுமாறு கணவரும், மாமனாரும் தொல்லை கொடுப்பதாக பெண் ஒருவர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ராசிபுரம் மெட்டாலாவை சேர்ந்தவர் பரிமளா. இவரது கணவர் மாரிமுத்து. இவர்களுக்கு ஏற்கெனவே 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் ஆண் குழந்தை வேண்டும் என்பதால் பரிமளா மீண்டும் கர்ப்பம் அடைந்தார்.

இந்த நிலையில் அவருக்கு அண்மையில் 4-ஆவது பெண் குழந்தை பிறந்தது. அந்த பெண் குழந்தையை விற்று விடுமாறு கணவர் மாரிமுத்துவும், மாமனார் கண்ணுசாமியும் பரிமளாவை வற்புறுத்தி வருகின்றனர்.
இதற்கு பரிமளா மறுப்பு தெரிவித்தும் அவரை தொடர்ந்து வற்புறுத்தி வந்ததால் அவர் மகளிர் காவல் நிலையத்தில் கணவர் மற்றும் மாமனார் மீது புகார் கொடுத்துள்ளார்.
ராசிபுரத்தில் பிஞ்சு குழந்தைகளை ஓய்வு பெற்ற செவிலியர் அமுதா கடத்தி விற்பனை செய்த ஆடியோ அண்மையில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து குழந்தை விற்பனை தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications