ஆளுநரால் வெயிட்டிங் லிஸ்ட்! ஆன்லைன் ரம்மி தடை சட்டம் எப்போது? அமைச்சர் ரகுபதி சொன்ன பதில்!
நாமக்கல் : ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும் அவசர சட்ட மசோதாவை ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில் அதுகுறித்து ஆளுநர் விளக்கத்திற்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் இது சட்டமாக்கப்படும் என தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
கடந்த திமுக ஆட்சியில் 2020-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது; 2021 பிப்ரவரியில் பேரவையில் சட்டம் இயற்றப்பட்டது.
அச்சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அச்சட்டம் செல்லாது என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி தீர்ப்பளித்தது.

ஆன்லைன் ரம்மி
ரத்து செய்யப்பட்ட சட்டத்திற்கு எதிராக புதிய சட்டம் இயற்ற வேண்டும் என தமிழகத்தில் தொடர்ந்து கோரிக்கை குரல்கள் ஒருபுறம் எழுப்பப்பட்டு வரும் நிலையில், ஆன்லைன் ரம்மியால் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து கடந்த ஜூன் 10-ஆம் தேதி ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டம் பிறப்பிக்கப்படும் எனவும், அது குறித்து அரசுக்கு பரிந்துரைக்க வல்லுனர் குழு அமைத்து தமிழக அரசு அறிவித்தது.

ஆளுநருக்கு விளக்கம்
ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும் சட்ட மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது .நீண்ட காலமாக அந்த மசோதா கிடப்பில் இருந்த நிலையில், அது தொடர்பான கோரிக்கைகளால் ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டது. இதனையடுத்து தமிழக அரசு சார்பில் ஆளுநருக்கு விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த மசோதா சட்டமாக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அமைச்சர் ரகுபதி
ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும் அவசர சட்ட மசோதாவை ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில் அதுகுறித்து ஆளுநர் விளக்கத்திற்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் இது சட்டமாக்கப்படும் என தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். நாமக்கல் ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் ரூ.92.31 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட உள்ள சட்டக்கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர்.

இந்திய அரசியலமைப்பு தினம்
நிகழ்ச்சியில் பேசிய அவர்," இந்திய அரசியலமைப்பு தினத்தில் நாமக்கல் அரசு சட்ட கல்லூரியை துவக்குவது சிறப்பு என்றும், மாவட்டத்திற்கு ஒரு சட்ட கல்லூரி அமைக்கப்படும், சைபர் குற்றம், இணையவழி குற்றம், பொருளாதார குற்றம், வணிக குற்றம் நடைபெறும் நிலையில் அதற்கேற்ப சட்ட கல்லூரியில் பாடங்களை அமைத்து அக்குற்றங்களை தடுக்க இந்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் இன்று யார் வேண்டுமானலும் சட்டம் படிக்கலாம் என்கிற அளவிற்கு சட்ட கல்லூரிகள் உள்ளது

விரைவில் சட்டம்
இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஆன்லைன் ரம்மி விளையாட்டை இந்திய அளவில் தடை செய்ய மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து விரைவில் பரிசீலனை செய்வதாக மத்திய சட்ட அமைச்சர் உறுதி அளித்துள்ளார். தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும் அவசர சட்ட மசோதாவை ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில் அதுகுறித்து ஆளுநர் விளக்கத்திற்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் இது சட்டமாக்கப்படும். விரைவில் இந்த சட்டத்திற்கு அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது எனவும் ஆளுநரை சந்திக்க அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் கூறினார்.












Click it and Unblock the Notifications