அண்ணாமலையாரே முதலில் நோட்டாவை ஜெயித்து காட்டுங்க.. மத்த கதை அப்பறம் பேசலாம்.. திமுக நாசர் தாக்கு
நாமக்கல்: ஒருபோதும் பாஜக திராவிட ஆட்சி மாடல் நடக்கிற இந்த காலகட்டத்தில் தமிழகத்தில் காலூன்ற முடியாது பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்துள்ளார்.
நாமக்கல்லில் அக்கியம்பட்டி மற்றும் முதலைபட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில்
மாண்புமிகு பால்வளத் துறை அமைச்சர் .சா.மு.நாசர் சுற்றுலாத் துறை அமைச்சர் மா.மதிவேந்தன், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் .கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் ஆகியோர் முன்னணியில் பால் கொள்முதல் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
இதனை அடுத்து நாமக்கல் லத்துவாடி பால் குளிரூட்டும் நிலையம் மற்றும் புதிய பால் பண்ணை அமைய உள்ள
இடத்தை ஆய்வு செய்தல், கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் கூட்ட அரங்கில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் ஆவின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

ஆயிரம் காலி பணியிடங்கள்
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பால்வளத்துறை அமைச்சர் நாசர் , பால்வளத் துறையில் உள்ள ஆயிரம் காலி பணியிடங்களை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். பால் பொருட்கள் விற்பனை தொடர்பாக அண்ணாமலை பேசியதற்கு செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், அண்ணாமலையார் அவர் என்ன சொன்னார் ஒப்பந்தப் புள்ளியில் சேர்க்காத ஒரு பொருளை சேர்த்ததாக கூறி பொய்யான தகவலை மக்களிடம் பரப்பி வருகிறார்.

அண்ணாமலை
அண்ணாமலை தன்னை முன்னிலைப்படுத்துவதற்கு பொய்யான தகவலை, படித்த ஒரு ஐ பி எஸ் ஆபிஸர் கூறுவது கேவலமான விஷயம். போலீஸ் என்றால் ஒவ்வொரு எழுத்துக்கும் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கக் கூடிய வார்த்தைகள் இருக்கிறது. தமிழக அரசு தயாரித்த பொருளை 77 கோடி போட்டு வாங்கியதாக கூறுவது அப்பட்டமான பொய்.

பொய்
குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க துடிக்கிறார் அண்ணாமலை. இந்த விஷயத்தில் அவர்பேசியது கடைந்தெடுத்த முட்டாள்தனமான பேச்சு. இதை ஏற்க கூடியது. ஐபிஎஸ் ஆபீஸ் பேசக்கூடிய பேச்சா இது. சாதாரண போலீஸ்காரர் கூட இப்படி பேசமாட்டார்.
நோட்டா ஓட்டுகளை விட அண்ணாமலை குறைவான வாக்குகளை வாங்குவார்.

திராவிட மாடல்
ஒருபோதும் திராவிட ஆட்சி மாடல் நடக்கிற இந்த காலகட்டத்தில் பாஜக காலூன்ற முடியாது எப்படியாவது ஓட்டு வாங்க வேண்டும் என்பதற்காக பொய் சொல்லி வருகின்றனர் என அமைச்சர் நாசர் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
-
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
“நீ நல்லா சாப்பிட்டிருக்க.. நான் சாப்பிடல”.. பயணியிடம் சம்பந்தமே இல்லாமல் பேசிய அமைச்சர் பார்த்திபன் -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா?












Click it and Unblock the Notifications