சத்து மாத்திரை சாப்பிட்டவுடன் அலறிய நாமக்கல் மாணவர்கள்! 30 பேருக்கு தீவிர பாதிப்பு! திடீர் பரபரப்பு
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் மாணவர்களுக்கு வரிசையாக திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த இரண்டு மாதங்களாக வாட்டி வதைத்து வந்த வெயில் இப்போது தான் கட்டுக்குள் வந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்தாண்டு கோடை வெப்பம் உச்சத்தில் இருந்தது.
இதனால் பொதுமக்கள் வெளியே செல்லக் கூடா முடியாத சூழலே இருந்தது. இப்போது தான் வெயில் குறைந்து மழை ஆரம்பித்துள்ளது. தமிழ்நாட்டில் பரவலாகப் பல இடங்களில் பருவமழை ஆரம்பித்துவிட்டது.

மாநிலத்தில் பல இடங்களில் பருவமழை காரணமாக நல்ல மழை பெய்து வருகிறது. பொதுவாகவே பருவமழை காலத்தில் பல நோய்ப் பாதிப்புகள் ஏற்படும். மழை நீர் முறையாக வடிந்து செல்லாமல் இருக்கும் என்பதால், அவை கொசுக்களின் புகலிடமாக மாறிவிடுகின்றன. இந்த கொசுக்களால் பல வித நோய்கள் பரவுகிறது. இதன் காரணமாகவே பருவமழை காலத்தில் நாம் ரொம்பவே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
குறிப்பாக மாணவர்களுக்குப் பருவமழை காலத்தில் பல வித பாதிப்புகள் ஏற்படும். இதைக் கருத்தில் கொண்டு பொதுவாகப் பள்ளிகளில் மாணவர்களின் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தச் சத்து மாத்திரைகள் வழங்கப்படும். அப்படி நாமக்கல் மாவட்டத்தில் மாணவர்களுக்குச் சத்து மாத்திரை வழங்கப்பட்ட நிலையில், அதுவே மாணவர்கள் நோய்வாய்ப்படக் காரணமாக அமைந்துவிட்டது.

நாமக்கல் மாவட்டம் குருசாமிபாளையம் என்ற ஊரில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் இன்று மாணவ- மாணவியருக்குச் சத்து மாத்திரையைக் கொடுத்துள்ளனர். இருப்பினும், சத்து மாத்திரையைச் சாப்பிட்டவுடன் மாணவ- மாணவிகள் பலருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு வயிற்றுப்போக்கு, வயிற்று வலி பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இப்படி அடுத்தடுத்து சுமார் 30-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வயிற்று வலியும் வயிற்றுப் போக்கும் ஏற்பட்டு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாணவர்கள் உடனடியாக அருகில் இருந்த பிள்ளாநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கே அவர்களுக்குத் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சத்து மாத்திரியைச் சாப்பிட்டவுடன் மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட சம்பவம் அங்கே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்!












Click it and Unblock the Notifications