காதல் டார்ச்சர்.. தற்கொலை செய்த அனிதா.. துக்கம் விசாரிக்க வந்த வல்லரசு.. தூக்கிபோட்டு ஒரே 'மிதி'
நாமக்கல்: நாமக்கல் அருகே இளைஞர் ஒருவர் காதலிக்குமாறு டார்ச்சர் செய்ததால், கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம் நாமகிரி பேட்டையில் உள்ள குச்சிக்காடு பகுதியில் வசித்து வந்தவர் அனிதா வயது 19. இவர் அங்குள்ள இராமலிங்கம் அரசு கலைக் கல்லூரியில் பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
பட்டணம் பகுதியைச் சேர்ந்த வல்லரசு என்பவர் அனிதாவை ஒரு தலைபட்சமாக காலித்து வந்துள்ளார். ஆனால் அனிதா, வல்லரசுவின் காதலை ஏற்க மறுத்துவிட்டார். ஆனால் வல்லரசு தொடர்ந்து அனிதாவிடம் காதலிக்குமாறு தொடர்ந்து டார்ச்சர் செய்து வந்ததாக அந்த பகுதி உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

வழியில் தொல்லை
குடும்ப வறுமை காரணமாக ஆடுகளை மேய்த்து படியே படித்து வந்துள்ளார் அனிதா. கடந்த செவ்வாய்கிழமை அன்று அனிதா ஆடு மேய்க்க சென்ற போது வழிமறித்து வல்லரசு காதல் தொல்லை கொடுத்திருக்கிறார்.

உறவினர்கள் கொதிப்பு
வல்லரசு கொடுத்து வந்த தொடர் காதல் தொல்லையால் மனம் உடைந்த அனிதா வீட்டிற்குச் சென்று தற்கொலை செய்து கொண்டார். அனிதாவின் தற்கொலையால் உறவினர்கள் கொந்தளித்து போனார்கள். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தங்கை ஆத்திரம்
அனிதாவின் தற்கொலை குறித்து தகவல் அறிந்து வல்லரசு அவரது நண்பர்களை அழைத்துக் கண்டு அனிதாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு வல்லரசை கண்டு ஆத்திரம் அடைந்த அனிதாவின் தங்கை, தன் அக்காவின் சாவுக்கு வல்லரசு தான் காரணம் என அங்கிருந்த உறவினர்களிடம் கூறினார்.

வல்லரசுக்கு அடி
இதனால் ஆத்திரம் அடைந்த அனிதாவின் உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள் வல்லரசுவையும் அவரது நண்பர்களையும் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த நாமகிரிபேட்டை காவல்துறையினர் மீட்டனர். ஆனால் அனிதாவின் உறவினர்கள் வல்லரசுவையும் அவரது நண்பரையும் ஒப்படைக்குமாறு காவல்துறை வாகனத்தை சிறைபிடித்தனர். இதனால் பதற்றம் ஏற்பட்டது.

நடவடிக்கை எடுப்பதாக உறுதி
இதையடுத்து ராசிபுரம் வட்டாட்சியர் மற்றும் துணை கண்காணிப்பாளர் ஆகியோர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அனிதாவின் சாவுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். நீண்ட நேரத்திற்கு பிறகு உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அனிதாவின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அனிதாவின் மரணத்தால் சாதி மோதல் ஏற்படாமல் தடுக்க போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications