400 கிகி யுரேனியத்தை காணோம்.. 10 குண்டுகளை செய்யலாம்! டிரம்ப்பை ஏமாற்றிய ஈரான்.. ஸ்டன் ஆன இஸ்ரேல்
நியூயார்க்: அமெரிக்க வான்வழித் தாக்குதலில் ஈரானின் யுரேனியம் இருப்பு அழிக்கப்பட்டதாக அதிபர் டிரம்ப் கூறி வருகிறார். ஆனால் ஈரானின் யுரேனியம் இருப்பு எங்கே உள்ளது என்பது தெரியவில்லை என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதாவது யுரேனியம் இருப்பை நாங்கள் அழித்துவிட்டோம் என்று உறுதியாக கூற முடியாது.. யுரேனியம் எங்கே இருக்கிறது என்று உறுதியாக சொல்ல முடியாது என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈரானின் அணு ஆயுதத் திட்டம் "முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டது" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறிய ஒரு நாளுக்குப் பிறகு, ஈரானிடம் ஆயுதத் தரம் வாய்ந்த யுரேனியம் தற்போது எங்கே உள்ளது என்று தங்களுக்குத் தெரியாது என்று அமெரிக்காவின் மூத்த அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

ஈரான் யுரேனியம் இருப்பு: அமெரிக்க அதிகாரிகள் கருத்து
இன்று அதிகாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செட் மற்றும் கூட்டுப் படைகளின் தலைவர் டான் கெய்ன் ஆகியோர், அணு ஆயுத தளங்களை தாங்கள் முழுவதுமாக அழித்துவிட்டதாக அதிபர் டிரம்ப் கூறிய கருத்தை உறுதிப்படுத்த மறுத்தனர். விமானப்படை பி-2 குண்டுவீச்சு விமானம் மற்றும் கடற்படையின் டோமஹாக் ஏவுகணைகள் மூலம் குறிவைக்கப்பட்ட மூன்று தளங்களிலும் பலத்த சேதம் மற்றும் அழிவு ஏற்பட்டதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.. இருப்பினும், அந்த சேதங்கள் எந்தளவுக்கு ஏற்பட்டது என்பதில் தெளிவான முடிவுகள் எட்டப்படவில்லை.
முக்கிய இலக்கான ஈரானின் ஃபோர்டோ யுரேனியம் செறிவூட்டும் ஆலையின் செயற்கைக்கோள் படங்கள், அமெரிக்காவால் வீசப்பட்ட 30,000 பவுண்டுகள் எடை கொண்ட பதுங்கு குழி குண்டுகளால் ஆழமான துளைகள் ஏற்பட்டிருப்பதைக் காட்டுகின்றன. ஆனால் அங்கே முழுமையாக யுரேனியம் நீக்கப்பட்டதா என்பதை சொல்ல முடியாது, என்று கூறி உள்ளனர். அதோடு இஸ்ரேலிய ராணுவத்தின் ஆரம்ப அறிக்கைகள், அந்த தளம் கடுமையாக சேதமடைந்தாலும் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று கூறுகின்றன.
இதுகுறித்து இஸ்ரேல் அதிகாரிகள் கூறுகையில், "ஈரான் யுரேனியத்தை நகர்த்தியது என்பதைக் காட்ட போதுமான ஆதாரங்கள் உள்ளன. 400 கிலோ யுரேனியம் இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கலாம். இதன் மூலம் 10 அணுகுண்டுகளை தயாரிக்கலாம்.
ஈரானிய அதிகாரிகள் சமீப நாட்களில் அந்த தளத்திலிருந்து உபகரணங்கள் மற்றும் யுரேனியத்தை நகர்த்தியுள்ளனர் என்பதைக் காட்ட போதுமான ஆதாரங்கள் உள்ளன. டிரம்ப் சமீபத்தில் விடுத்த அச்சுறுத்தல்கள் காரணமாக, 60% தூய்மைப்படுத்தப்பட்ட சுமார் 400 கிலோகிராம் யுரேனியத்தை அவர்கள் அகற்றியுள்ளனர். இது அணு ஆயுதங்களில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் 90% தூய்மை நிலைக்கு சற்று குறைவானதாகும். ஆனாலும் இதை விரைவில் அவர்களால் செறிவூட்ட முடியும்.
சுமார் 10 கார்களின் டிக்கிகளில் வைக்கக்கூடிய அளவிற்கான யுரேனியம் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளது. ஆனால் அவை எங்கே உள்ளது என்று தெரியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரானை தாக்கிய அமெரிக்கா
இஸ்ரேல் கோரிக்கையை ஏற்று ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி உள்ளது.
ஈரான் நாட்டில் உள்ள 3 அணு மையங்கள் மீது தாக்குதல் நடத்தியதை அதிபர் டிரம்ப் உறுதி செய்தார். இதனால் உலகப்போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய மூன்று அணு அமைப்புகள் மீது வெற்றிகரமாக தாக்குதல் நடத்தி முடிக்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.
டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில், "ஈரானில் உள்ள மூன்று அணு sites மீது நாங்கள் வெற்றிகரமாக தாக்குதல் நடத்தி முடித்துவிட்டோம். ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய இடங்களிலும் தாக்குதல் நடத்தப்பட்டது. அனைத்து விமானங்களும் தற்போது ஈரான் வான்வெளியை விட்டு வெளியேறிவிட்டன.
ஃபோர்டோவில் உள்ள முக்கியமான தளத்தில் முழு அளவிலான வெடிகுண்டுகள் வீசப்பட்டன. அனைத்து விமானங்களும் பத்திரமாக திரும்புகின்றன. இந்த சாதனையை நிகழ்த்திய அமெரிக்க வீரர்களுக்கு எனது வாழ்த்துகள். உலகில் இதை செய்யக்கூடிய ராணுவம் வேறு எந்த நாட்டிலும் இல்லை. அமைதிக்கு இதுவே சரியான நேரம்! இந்த விஷயத்தில் நீங்கள் காட்டிய கவனத்திற்கு நன்றி" என்று கூறியுள்ளார்.
-
குட்டையை குழப்பிய இஸ்ரேல்.. செங்கடலில் உச்சக்கட்ட பதற்றம்! போர் இப்போதைக்கு முடியாது போல! -
ஈரானுக்கு பயணம் வேண்டாம்.. அங்குள்ள இந்தியர்கள் உடனே வெளியேறுங்கள்.. மத்திய அரசு அவசர அறிவுறுத்தல் -
ஈரான் கொடுத்த கடைசி வார்னிங்.. இஸ்ரேல் செயலால் ஒட்டுமொத்த வளைகுடா நாடுகளும் பீதி! -
டொனால்ட் டிரம்ப் 'நான்தான் பாஸ்'.. டிரம்ப் சொல்லியும் கேட்காத இஸ்ரேல் நெதன்யாகு.. புதிய தலைவலி! -
ஈரானின் சர்ப்ரைஸ் தாக்குதல்.. ஆடிப்போன இஸ்ரேல் கொடுத்த பதிலடி.. 3 நகரங்களில் மக்கள் அலறல்! -
டிரம்ப் எச்சரிக்கையை மதிக்காத இஸ்ரேல்.. ஈரான் மீது சரமாரி அட்டாக்.. அமைதி பேச்சுவார்த்தை உடைகிறதா? -
நள்ளிரவில் மீண்டும் வெடித்த போர்.. இஸ்ரேல் மீது ஈரான் சரமாரி ஏவுகணை தாக்குதல்.. போர் நிறுத்தம் காலி? -
ஹார்முஸ் நோக்கி வந்த ஈரானிய டிரோன்கள்...சுட்டு வீழ்த்திய அமெரிக்கா..மீண்டும் உச்சத்தில் டென்ஷன் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி












Click it and Unblock the Notifications