Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஈரானுக்கே ஸ்கெட்ச்சா! அமெரிக்க விமானங்கள் பறக்க தடை.. சவூதி உள்ளிட்ட 4 அரபு நாடுகள் அதிரடி அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. விரைவில் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம் என்று கூறப்படுகிறது. இதனால் இருநாடுகள் இடையே கடும் பதற்றம் நிலவி வரும் சூழலில் தான் அமெரிக்காவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது 4 அரபு நாடுகள். அதாவது தங்களின் வான் எல்லையில் அமெரிக்கா விமானங்கள் பறக்க அரபு நாடுகள் அதிரடியாக தடை விதித்துள்ளன.

ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் என்பது இருந்து வருகிறது. தற்போது அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுள்ள நிலையில் இருநாடுகள் இடையேயான மோதல் என்பது இன்னும் வலுத்துள்ளது. ஈரான் அணுஆயுதம் தயாரிப்பதை அமெரிக்கா விரும்பாதது தான் இந்த மோதலுக்கு முக்கிய காரணமாகும்.

Iran US Gulf Nations

இதனால் அணுஆயுதம் தயாரிக்க மாட்டோம் என்று அமெரிக்காவிடம், ஈரான் ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று டொனால்ட் டிரம்ப் விரும்புகிறார். ஆனால் நாளுக்கு நாள் அமெரிக்காவால் அதிகரித்து வரும் பதற்றத்தால் ஈரான் அணுஆயுதம் தயாரிப்பதில் உறுதியாக உள்ளது. அதோடு அமெரிக்காவிடம் பேச்சுவார்த்தை நடத்துவது இல்லை என்று ஈரான் முடிவு செய்துள்ளது.

இது தற்போது இருநாடுகள் இடையே கடும் மோதலாக மாறி உள்ளது. ஈரான், அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டாம். இல்லாவிட்டால் இதுவரை இல்லாத அளவுக்கு ஈரான் மீது குண்டுகளை வீசுவோம் என்று டொனால்ட் டிரம்ப் பகிரங்கமாக அறிவித்துள்ளார். அதோடு ஈரானை தாக்கும் வகையில் மத்திய கிழக்கு பிராந்தியங்களில் உள்ள படை தளங்களில் அமெரிக்க வீரர்களையும், போர் விமானங்களையும் குவிக்கிறது. இதற்கு பதிலடி தரும் வகையில் ஈரான் அமெரிக்க படை தளங்களை குறிவைத்து ஏவுகணைகளை தயாராக வைத்துள்ளது. இதன் காரணமாக விரைவில் அமெரிக்கா - ஈரான் இடையே கடும் மோதல் என்பது வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தான் தற்போது அமெரிக்காவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது அரபு நாடுகள். பொதுவாக வானில் ஒவ்வொரு நாடுகளுக்கும் வான் எல்லைகள் இருக்கும். இந்த வான்வெளி பரப்பில் விமானங்கள் பறக்க வேண்டும் என்றால் அந்தந்த நாடுகளின் அனுமதி என்பது வேண்டும்.

இப்படி அனுமதி பெற்றே அனைத்து விமானங்களும் பறந்து வருகின்றன. ஒருவேளை அனுமதியின்றி இன்னொரு நாட்டின் விமானம் ஒரு நாட்டின் வான் எல்லையில் நுழையும்போது அதனை அந்த நாட்டினரால் சுட்டு வீழ்த்த முடியும். மேலும் குறிப்பிட்ட நாட்டின் விமானங்களை ஒவ்வொரு நாடுகளும் தங்களின் வான் எல்லையில் பறக்க விடாமல் தடை செய்யவும் கூட முடியும்.

அந்த வகையில் தான் இப்போது ஈரான் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டு அமெரிக்கா காய்நகர்த்தி வருகிறது. அமெரிக்காவுக்கும், ஈரானும் நேரடியாக எல்லைகளை பகிர்ந்து கொள்ளவில்லை. இதனால் ஈரான் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்றால் பிற நாடுகளின் வான் எல்லை வழியாக அந்த நாட்டின் விமானங்கள் பறக்க வேண்டும். இப்படியான சூழலில் தான் அரபு நாடுகள் தங்களின் வான் எல்லைகளில் அமெரிக்க விமானங்கள் பறக்க அதிரடியாக தடை விதித்துள்ளன. அதாவது அமெரிக்க விமானங்கள் ஈரான் எல்லையையொட்டிய தங்களின் வான் எல்லையில் 2 நாட்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதாவது ஈரான் மீது தாக்குதல் நடத்தும் அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு அரபு நாடுகளான சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், குவைத் உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து இந்த தடையை விதித்துள்ளன. இது அமெரிக்காவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. ஈரான் மீது உடனடியாக தாக்குதல் நடத்த முடியாத நிலை என்பது ஏற்பட்டுள்ளது. ஈரான் மீது குண்டுகளை வீசுவோம் என்று அமெரிக்கா கூறிய நிலையில் தற்போது தற்காலிகமாக 2 நாட்கள் மட்டும் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் இந்த தடை என்பது நீட்டிப்பு செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

இதனை அமெரிக்காவின் மூத்த அதிகாரி உறுதி செய்துள்ளார். இதுதொடர்பாக அவர், ‛‛ஈரானை தாக்கும் நோக்கத்தில் அரபு நாடுகளின் வான் எல்லையில் அமெரிக்காவின் போர் விமானங்கள் மற்றும் உளவு விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை என்பது வான் எல்லையில் விமானங்கள் பறப்பதற்கு மட்டுமின்றி எரிபொருள் மாற்றம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது'' என்றார்.

மேலும் அரபு நாடுகளின் இந்த தடைக்கு பின்னால் முக்கிய விஷயம் உள்ளது. அதாவது அரபு நாடுகள் மோதலை விரும்பவில்லை. ஈரான் - அமெரிக்கா மோதிக்கொள்வதை ரசிக்கவில்லை. ஏற்கனவே காசா மீது அமெரிக்காவின் ஆதரவுடன் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் காசாவின் நிலைமை மோசமாகி உள்ளது. 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். இதுபோன்ற நிலைமை ஈரானில் நடைபெற கூடாது என்பதற்காக அவர்கள் அமெரிக்காவை தடுக்கும் வகையில் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

கடந்த மாதம் தான் அமெரிக்கா அதிகாரிகள், சவூதி அரேபியா மற்றும் கத்தார் நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ராணுவ தளவாடங்கள் விற்பனை தொடர்பாக இந்த பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டது. கத்தாருக்கு எம்க்யூ -9 ரியப்பர் ட்ரோன் விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புக்கொண்டது. சவூதி அரேபியாவுக்கு ராக்கெட் மேம்படுத்த உதவுவதாக அமெரிக்கா அறிவித்தது. ஆனாலும் கூட ஈரான் மீதான தாக்குதலுக்கு அரபு நாடுகளின் ஆதரவு என்பது அமெரிக்காவுக்கு கிடைக்கவில்லை. இதற்கிடையே தான் அடுத்த மாதம் டொனால்ட் டிரம்ப் பல்வேறு அரபு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+