10 லட்சத்தில் ஒன்றுதான் இப்படி இருக்கும்..அதிசய கரடி.. ஆனால் கண்டுபிடிக்கப்பட்ட உடன் நிகழ்ந்த சோகம்
நியூயார்க்: உலகின் மிக அரிதான வெள்ளை நிற கரடியை அமெரிக்காவில் சிலர் படம் பிடித்து இணையத்தில் பதிவேற்றியிருந்தனர். ஆனால் அக்கரடி சில நாட்களிலேயே ஓநாய்களால் தாக்கப்பட்டு உயிரிழந்து விட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
10 லட்சம் கரடிகளில் ஒரேயொரு கரடி மட்டும்தான் இதுபோன்று வெண்மையாக இருக்கும். இது பனி கரடி அல்ல. எனவே இது மிக அரிதான ஒன்றாக கருதப்படுகிறது.
இவ்வாறு இருக்கையில், இந்த கரடி தற்போது உயிரிழந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது காட்டுயிர் ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெண்மை நிற கரடி
அமெரிக்காவின் மிக்சிகனில் உள்ள வனப்பகுதியில் இந்த கரடி முதன் முதலாக செப்டம்பர் 6ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. 'யூப்பர் அவுட்டோர்ஸ் #906' எனும் பேஸ்புக் குரூப்பில் இந்த கரடியின் படங்கள் பகிர்ந்திருந்தன. இந்த குழுவில் உள்ளவர்கள் சமீபத்தில் வனப்பகுதிக்குள் செல்லும்போது இந்த படங்களை எடுத்து பதிவேற்றியுள்ளனர். இது உலகம் முழுக்க வேகமாக பரவியது. ஏனெனில் 10 லட்சம் கரடிகளில் ஒரு கரடிதான் இதுபோல வெண்மை நிறத்தில் பிறக்கும்.

ஒன்றே ஒன்று
ஆனால் துர்திஷ்டவசமாக இந்த கரடி ஓநாய் கடித்து உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மாதத்திற்குள்ளாகவே அரிய வகை கரடி ஒன்று உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வனப்பகுதியில் பயணிப்பவர்களுக்கு வழிக்காட்டுவதற்காக குழு ஒன்று செயல்பட்டு வந்திருக்கிறது. இந்த குழுதான் ஃபாக்ஸ் நியூஸ் செய்தி நிறுவனத்திடம் இந்த தகவலை கூறியுள்ளது. இதனையடுத்து பேஸ்புக் குரூப்பிலும் இந்த தகவல் பகிரப்பட்டது.

பரிதாபமாக உயிரிழப்பு
அதாவது, நம்மூரில் அதிகமாக உள்ள ஓநாய்களால் அரிய உயிரினங்களில் ஒரு விலங்கு அழிக்கப்பட்டுள்ளது என்று 'யூப்பர் அவுட்டோர்ஸ் #906' எனும் பேஸ்புக் குரூப்பில் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வகை வெள்ளை கரடி, முழுமையாக வெண்மையாக இருக்காது. மாறாக உடல் முழுவதும் வெண்மை நிறமும் அதேபோல கழுத்து மட்டும் லேசான பழுப்பு நிறத்திலும் இருக்கும். இதற்கு முன்னர் மிக்சிகன் பகுதியில் இதுபோன்ற வெண்மை நிற கரடியை யாரும் பார்த்ததில்லை.

நம்பிக்கை
உலகம் முழுவதுமே இந்த வகை கரடிகள் வெறும் 100 மட்டுமே இருக்கிறது. இந்த கரடி குறித்த ஆராய்ச்சிகளை விஞ்ஞானிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். தற்போது மிக்சிகனில் சுமார் 1 லட்சம் கரடிகள் வாழ்ந்து வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதில் நீங்கள் வெள்ளை கரடியை பார்ப்பது மிக மிக அரிதானது. அப்பகுதி பழங்குடியின மக்கள், இந்த வெள்ளை கரடியின் வருகையை நல்ல காலத்தின் பிறப்பு என்று கொண்டாடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications