"இதை" எதிர்பார்க்கலைல! எலான் மஸ்க்கை கதறவிட்ட ஒற்றை "இமோஜி".. பவரை காட்டிய ட்விட்டர் ஊழியர்கள்!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: ட்விட்டர் 2.0 என்று எலான் மஸ்க் கொண்டு வந்த பிளான் ஒன்று அவருக்கே எதிராக திரும்பி உள்ளது. ஒற்றை இமோஜி தற்போது மஸ்க்கை காப்பியில் நனைத்த போல உடைய வைத்து இருக்கிறது.

ட்விட்டர் நிறுவனத்தின் பணி முறைகள் மாற போகிறது . இனி யாருக்கும் வொர்க் பர்ம் ஹோம் கிடையாது. இனி எல்லோரும் கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும்.

உங்கள் ரத்தம், ஆவி, சதை, குடும்ப வாழ்க்கை எல்லாத்தையும் மறந்துவிட்டு எங்களுக்காக உழைக்க வேண்டும். அதுதான் ட்விட்டர் 2.0. இந்த ட்விட்டர் 2.0வில் நீங்கள் வேலை பார்க்க வேண்டும் என்றால் கடின உழைப்பாளியாக இருக்க வேண்டும் என்று எலான் வியாழக்கிழமை காலையில் ஒரு மெயில் அனுப்பி இருந்தார்.

மெயில்

மெயில்

ஊழியர்களுக்கு அனுப்பிய இந்த மெயிலில், ஊழியர்கள் எஸ் மட்டுமே சொல்லும் பொத்தான் இருந்தது. அதாவது இந்த விதிமுறையை ஏற்கவில்லை என்றால் நீங்கள் எஸ் அனுப்ப முடியாது . இதன் அர்த்தம் நீங்கள் ட்விட்டர் நிறுவனத்தில் இருந்து வெளியேறுகிறீர்கள் என்பதாகும். மஸ்க்.. எல்லோரும் கண்டிப்பாக எஸ் சொல்லுவார்கள். ஏற்கனவே உலக அளவில் பொருளாதார மந்த நிலை இருக்கிறது. அதனால் யாரும் வேலையை விட மாட்டார்கள்.

வேலை

வேலை

கண்டிப்பாக நான் கடினமாக உழைக்கிறேன் என்று கூறுவார்கள் என்று நினைத்துக்கொண்டு இந்த மெயிலை அனுப்பினார். ஆனால் கார்ப்ரேட் நாடக இருந்தாலும் ஊழியர்களுக்குள் என்று வந்துவிட்டால் கம்யூனிஸ் தானாக வந்துவிடும் தானே? அப்படித்தான் பெரும்பாலான ஊழியர்கள் ட்விட்டர் நிறுவனத்தில் இருந்து மஸ்க்கின் இந்த அறிவிப்பை எதிர்த்து ஒன்றாக கைகோர்த்து உள்ளனர். ட்விட்டர் நிறுவனத்தில் மஸ்க் தலைவரான போது 7100 பேர் வரை இருந்தனர்.

 நீக்கம்

நீக்கம்

இதில் பாதி பேரை மஸ்க் நீக்கினார். நேற்று காலை வரை 2780 பேர் இருந்தனர். இதில்தான் 1000 பேர் தற்போது ஒன்றாக ராஜினாமா செய்துள்ளனர். மஸ்க்கிற்கு கீழ் எல்லாம் வேலை செய்ய முடியாது. நாங்கள் ஒன்றும் பொதி சுமக்கும் மாடுகள் கிடையாது என்று கூறிவிட்டு பைபை சொல்லிவிட்டு வெளியேறி இருக்கிறார்கள். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் critical குழுவில் இருக்கும் மொத்த டீமே வெளியேறிவிட்டது.

பாதுகாப்பு

பாதுகாப்பு

ட்விட்டர் நிறுவனத்தின் தினசரி இயக்கத்தை கண்காணிப்பது. அதன் பாதுகாப்பை உறுதி செய்வது, அதன் செயல்பாடு சரியாக இருக்கிறதா என்று பார்ப்பது தொடங்கி முக்கியமான பணிகளை எல்லாம் செய்வது இவர்கள்தான். இவர்கள் இப்போது வெளியேறிவிட்டனர். அதேபோல் ட்விட்டர் நிறுவனத்தில் கமெண்ட்களை கேட்கும் ஊழியர்கள் இல்லை. இவர்கள்தான் மக்கள் கொடுக்கும் புகார்களை பரிசீலனை செய்வது. இது போக ஊழியர்களின் மெயில் ஐடிகளை நீங்கும் டெக்னிக்கல் டீமும் வெளியேறிவிட்டது.

மெயில்

மெயில்

இதனால் ட்விட்டர் நிறுவனத்தை விட்டு வெளியேறிய நபர்கள் இப்பவும் ட்விட்டர் நிறுவன மெயில்களை பயன்படுத்துகிறார்கள். ட்விட்டர் செயலிக்குள் இப்போதும் அவர்களுக்கு பேக் எண்ட் ஆக்சஸ் இருக்கிறது. இவர்களின் ஆக்ஸஸை பிடுங்கும் ஊழியர்களும் வெளியேறிவிட்டனர். இதன் அர்த்தம் ட்விட்டர் நிறுவனத்தில் இருந்து நேற்று வெளியேறியவர்களுக்கும் ட்விட்டரில் என்ன நடக்கிறது என்று இன்று தெரியும். அவர்கள் நினைத்தால் செயலில் மாற்றங்களை செய்ய முடியும். (வழக்கு பாயும் என்பது வேறு விஷயம்)

மாட்டினார்

மாட்டினார்

இந்த சிக்கல்கள் காரணமாக எலான் மஸ்க் வசமாக மாட்டி உள்ளார். பலரும் ட்விட்டர் நிறுவனத்தின் மெயில் பாக்சில் குட் பை இமேஜி போட்டு வேலையை விட்டு சென்று வருகின்றனர். பொது மெயிலில் மஸ்க்கை சிசி வைத்து.. வேலையைவிட்டு செல்லும் ஊழியர்கள் இந்த குட் பை இமேஜியை தட்டி விடுவதாக தெரிய வந்துள்ளது. இந்த ஒரு இமேஜி கடந்த 24 மணி நேரத்தில் மஸ்க்கை கதறவிட்டுள்ளது. இதில் வெளியேறிய சில ஊழியர்களால் மஸ்க் அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ஊழியர்கள் வெளியேறுவதை தடுக்கவே மஸ்க் அலுவலகத்தை திங்கள் கிழமை வரை மூடும் முடிவை மஸ்க் எடுத்து இருக்கிறாராம் .

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+