காபூலில் அமெரிக்கா டிரோன் தாக்குதல்.. அல் கொய்தா தலைவர் அய்மான் ஜவாஹிரி கொலை.. பிடன் அறிவிப்பு
நியூயார்க்: அல் கொய்தா தலைவர் அய்மான் அல் ஜவாஹிரி அமெரிக்க டிரோன் தாக்குதலில் கொலை செய்யப்பட்டார். நேற்று காபூலில் சிஐஏ நடத்திய டிரோன் தாக்குதலில் அல் கொய்தா தலைவர் கொலை செய்யப்பட்டார்.
ஆப்கானிஸ்தானில் 20 வருடமாக போர் நடத்தி வந்த அமெரிக்க படைகள் அங்கிருந்து வெளியேறின. அங்கிருந்து அமெரிக்க படைகள் வெளியேறி ஒரு வருடம் ஆகிவிட்டது. இந்த நிலையில் அங்கு தாலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது.
அங்கிருந்து அமெரிக்க படைகளை வெளியேற்ற அமெரிக்க அரசு பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து வந்தது.

கோரிக்கை என்ன?
அதில் முக்கியமான கோரிக்கை ஆப்கானிஸ்தானில் தீவிரவாத அமைப்புகளுக்கு இடம் கொடுக்க கூடாது. தீவிரவாத அமைப்புகளின் புகலிடமாக ஆப்கானிஸ்தான் இருக்க கூடாது என்று அமெரிக்கா நிபந்தனை விதித்து அங்கிருந்து வெளியேறியது. ஆனால் அமெரிக்கா படைகள் மொத்தமாக வெளியேறிய மறுநாளே ஆப்கானிஸ்தானில் பல்வேறு தீவிரவாத அமைப்புகள் தஞ்சம் அடைந்ததாக கூறப்பட்டது. முக்கியமாக அல் கொய்தா, ஐஎஸ்எஸ் அமைப்பை சேர்ந்த பல தீவிரவாதிகள் இங்கு தஞ்சம் அடைந்ததாக கூறப்பட்டது.

தாக்குதல்
அமெரிக்க படைகள் வெளியேறிய நாளில் காபூலில் விமான நிலையத்தில் குண்டு வெடிப்பு தாக்குதல் நடந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் அல் கொய்தா தலைவர் அய்மான் அல் ஜவாஹிரி அமெரிக்க டிரோன் தாக்குதலில் கொலை செய்யப்பட்டுள்ளார். காபூலில் நடத்திய டிரோன் தாக்குதலில் அல் கொய்தா தலைவர் கொலை செய்யப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிய பின் அமெரிக்கா நடத்திய பெரிய டிரோன் தாக்குதல் இது. இந்த டிரோன் தாக்குதல் குறித்த அறிவிப்பை அமெரிக்க அதிபர் பிடன் இன்று வெள்ளை மாளிகையில் வெளியிட்டார்.

பிடன்
அல் கொய்தா தலைவர் கொல்லப்பட்டதன் மூலம் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது என்று அதிபர் பிடன் தெரிவித்துள்ளார். சிஐஏ மூலம் இந்த டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. அமெரிக்கர்களுக்கு எதிராக தொடர் தாக்குதல்களை நடத்தி வந்தவர் அய்மான் அல் ஜவாஹிரி. இவரை கொன்றதன் மூலம் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது என்று அதிபர் பிடன் தெரிவித்துள்ளார். காபூலில் வீடு ஒன்றில் அய்மான் அல் ஜவாஹிரி பாதுகாப்பாக இருந்துள்ளார்.

டிரோன் அட்டாக்
அவர் வீட்டு பால்கனிக்கு வந்த நேரத்தில் டிரோன் கேமரா உதவியுடன் அவரின் அடையாளத்தை உறுதி செய்து அமெரிக்க சிஐஏ படைகள் டிரோன் தாக்குதல் நடத்தி உள்ளன. இரண்டு ராக்கெட்டுகள் இவரின் வீடு மீது விழுந்தது குறிப்பிடத்தக்கது. இந்த தாக்குதலில் அவர் மட்டும் கொல்லப்பட்டதாகவும், அவரின் குடும்ப உறுப்பினர்கள் யாரும் கொல்லப்படவில்லை என்றும் அமெரிக்கா அதிபர் பிடன் தெரிவித்துள்ளார். கொல்லப்பட்ட அல் கொய்தா தலைவர் அய்மான் அல் ஜவாஹிரிக்கு 71 வயதாகிறது.

யார் இவர்?
ஒசாமா பின்லேடன் 2011ம் ஆண்டு அமெரிக்கா தாக்குதலில் பாகிஸ்தானில் கொல்லப்பட்டார். அவரை தொடர்ந்து அல் கொய்தா அமைப்பின் புதிய தலைவராக அய்மான் அல் ஜவாஹிரி தேர்வானார். அதன்பின் 11 வருடங்கள் இவர்தான் தலைவராக இருந்தார். இந்த நிலையில்தான் இன்று அய்மான் அல் ஜவாஹிரி கொலை செய்யப்பட்டுள்ளார். 911 தாக்குதலை அமெரிக்காவில் நடத்த முக்கிய காரணமாக இருந்தவர்களில் இவரும் ஒருவர்.

தாக்குதல்
இது போக அமெரிக்காவில் 2000, 2022 ஆகிய வருடங்களில் நடந்த பல தீவிரவாத தாக்குதல்களுக்கு இவர் காரணமாக இருந்தார். இந்த டிரோன் தாக்குதலை தற்போது தாலிபான் கண்டித்து உள்ளது. இது சர்வதேச விதிகளுக்கு எதிரானது என்று தாலிபான்கள் தெரிவித்து உள்ளது. 20 வருடமாக அமெரிக்கா போராடி தோல்வி அடைந்துவிட்டது. அப்படி இருக்கும் போது மீண்டும் இப்படி ஒரு தாக்குதலை நடத்துவது தவறு. இது சர்வதேச விதிகளுக்கும், அமைதி உடன் படிக்கைகளுக்கும் எதிரானது என்று தாலிபான் விமர்சனம் செய்துள்ளது.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications