நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஷாக் மேல் ஷாக்.. முதலில் பெரியவர்கள்.. அடுத்தடுத்து குழந்தைகள்.. கிலி தரும் தொற்று.. கதறும் வல்லரசு

அமெரிக்காவில் 2 லட்சம் குழந்தைகளை தாக்கி உள்ளது கொரோனாவைரஸ்

Google Oneindia Tamil News

நியூயார்க்: 2 லட்சம் குழந்தைகளை கொரோனா வைரஸ் தாக்கி உள்ளதாம்.. இது அமெரிக்க மக்களுக்கு பெரும் பயத்தை ஏற்படுத்தி வருகிறது.

உலகத்தையே இந்த கொரோனா வைரஸ் தன் பிடியில் வைத்து வருகிறது.. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடிந்திருக்கிறதே தவிர, முற்றிலும் ஒழிக்க முடியவில்லை..

இதற்கான ஆய்வுகளும் தொடர்ந்து நடந்து வருகையில்தான், ஒமிக்ரான் வைரஸ் பரவல் ஆரம்பமாகி உள்ளது.. இது இரட்டிப்பு கலக்கத்தை மக்களுக்கு ஏற்படுத்தியும் வருகிறது.

பிக் பாஸ் தமிழ் OTTயில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள்.. இந்த முறை தொகுப்பாளர் மாற்றமா?? பிக் பாஸ் தமிழ் OTTயில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள்.. இந்த முறை தொகுப்பாளர் மாற்றமா??

 அமெரிக்கா

அமெரிக்கா

இந்த பாதிப்பில் கடந்த 2 வருடங்களாகவே முதலிடத்தில் உள்ளது அமெரிக்காவாகும்.. மிக அதிகமாகத் தொற்றுப் பரவல் ஏற்பட்டுள்ளது என்று கடந்த சில தினங்களுக்கு முன்புகூட, உலக சுகாதார அமைப்பு கூறியிருந்தது.. அதாவது, கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து மெல்ல மெல்ல அதிகரித்து வந்த இந்த தொற்று, ஒமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டபிறகு, பரவலில் வேகமெடுத்துவிட்டதாம்..

 கொரோனா கேஸ்கள்

கொரோனா கேஸ்கள்

கொரோனாவால் புதிய கேஸ்கள் மட்டும் ஒரே வாரத்தில் 15 லட்சத்தை கடந்துள்ளது.. அமெரிக்கா மட்டுமில்லை, பெரும்பாலான நாடுகளில் டெல்டா வகை வைரஸ்தான் அதிகமாக பரவி இருந்தாலும், ஒமிக்ரான் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டபிறகு இந்த பரவலின் வேகம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அமெரிக்காவில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படும் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியாமல் அந்த அரசு திணறி வருகிறது..

 குழந்தைகள்

குழந்தைகள்

இதுவரை 6 லட்சத்துக்கும் அதிகமானோர் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்... நேற்று ஒரே நாளில் மட்டும் 5,44,67 பேருக்கு கொரோனா கேஸ்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கொரோனா, பச்சிளம் குழந்தைகளையும் விட்டு வைக்கவில்லை.. கடந்த சில நாட்களாகவே, அமெரிக்காவில், ஒரு வயது முதல் 18 வயது வரை உள்ளவர்களை கொரோனாவைரஸ் பெருமளவில் பாதித்து வருவதாக கூறப்படுகிறது..

 அதிகரிப்பு

அதிகரிப்பு

கடந்த மாதத்தை விட இந்த மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை மட்டும் இரட்டிப்பாக அதிகரித்துவிட்டது.. கடந்த வாரம் தொற்று பாதிப்பினால், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை 1 லட்சத்து 99 ஆயிரமாக உயர்ந்துவிட்டது.. இது 61.1 சதவீதம் அதிகம் என்கிறார்கள்.. இப்படி 2 லட்சம் குழந்தைகள் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளது, அந்நாட்டு மக்களுக்கு பெருத்த கவலையையும் கிலியையும் ஏற்படுத்தி வருகிறது.

English summary
America covid cases surge omicron and two lakh children hospitalisation
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X