Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வானத்தில் கோடு கோடாக.. பச்சை நிறத்தில் தோன்றிய வெளிச்சம்.. யுஎப்ஓவிற்கு இடையில்.. இது என்ன புதுசா?

ஜப்பானின் விண்வெளி ஆராய்ச்சி மையமான National Astronomical Observatory of Japanதான் முதலில் இதை ட்வீட் செய்தது.

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: யுஎப்ஓ குறித்த அச்சம் சர்வதேச அளவில் எழுந்துள்ள நிலையில் ஹவாயில் வானத்தில் திடீரென பச்சை நிறத்தில் கோடு கோடாக வண்ண வெளிச்சங்கள் தோன்றியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

திடீரென கடந்த இரண்டு நாட்களாக யுஎப்ஓ குறித்த அச்சம் அதிகரித்து உள்ளது. இன்று அதிகாலைதான் கனடா வானில் பறந்த மர்ம பொருள் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்த யுஎப்ஓ குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. அமெரிக்க விமானப்படை மூலம் மர்ம பொருள் சுட்டு வீழ்த்தப்பட்டது

நேற்று அமெரிக்க வானில் பறந்த மர்ம பொருள் சுடப்பட்ட நிலையில் இன்று கனடாவிலும் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. சுட்டு வீழ்த்தப்பட்ட மர்ம பொருள் குறித்த விவரம் வெளியாகவில்லை.

யுஎப்ஓ

யுஎப்ஓ

இந்த யுஎப்ஓ விவகாரங்களுக்கு இடையில் ஹவாயில் வானத்தில் திடீரென பச்சை நிறத்தில் கோடு கோடாக வண்ண வெளிச்சங்கள் தோன்றியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஜப்பானின் விண்வெளி ஆராய்ச்சி மையமான National Astronomical Observatory of Japanதான் முதலில் இதை ட்விட் செய்தது. அவர்களின் தொலைநோக்கி கேமரா மூலம் இந்த வெளிச்சம் பிடிக்கப்பட்டது. ஹவாயில் இருக்கும் மௌன்கே என்ற பகுதியில் கடந்த வாரம் இந்த வெளிச்சம் தெரிந்துள்ளது. வானத்தில் திடீரென பச்சை நிறத்தில் கோடுகள் தெரிந்தால் எப்படி இருக்கும்.

பச்சை கோடுகள்

பச்சை கோடுகள்

பச்சை நிறத்தில் வரி வரியாக.. அதிக இடைவெளி விட்டு இருப்பது போல கோடுகள் காணப்பட்டது. முதலில் இது என்ன என்று குழப்பம் ஏற்பட்டது. பூமியில் இருந்து செல்லும் வெளிச்சமா? ஏதாவது ஆராய்ச்சி மையத்தில் இருந்து செல்லும் லேசரா? வானத்தில் இருந்து பூமி நோக்கி வரும் வெளிச்சமா.. ஏதாவது ஏலியனா? என்ற குழப்பம் நிலவியது. முதலில் நாசாவின் ICESAT-2/43613 செயற்கைக்கோளில் இருந்து வரும் லேசராக இது இருக்கலாம் என்று கருதப்பட்டது. பூமியின் சமநிலை, தரை மட்டத்தை அளவிடுவதற்காக, ஆராய்வதற்காக இந்த லேசர் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என்று கூறப்பட்டது.

சீனா

சீனா

ஆனால் இது கடைசியில் சீனாவிற்கு சொந்தமான லேசர் கருவியாக இருக்கலாம் என்று ஜப்பான் கூறியுள்ளது. சீனாவின் சாட்டிலைட் ஒன்றில் இருந்து இந்த லேசர் கதிர்கள் வரலாம். பூமியின் தரை மட்டம், வளங்கள், நிலப்பகுதியில் ஏற்பட்டு இருக்கும் மாற்றங்களை கணக்கிடும் சாட்டிலைட்டுகளில் இந்த லேசர் வந்து இருக்கலாம் என்று ஜப்பான் தெரிவித்துள்ளது. ஆனால் சீனா இதை இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. இன்னும் மறுப்பும் தெரிவிக்கவில்லை. வானத்தில் அடிக்கடி தோன்றும் இந்த பச்சை நிற வெளிச்சம் ஹவாய் மக்களை குழப்பி உள்ளது. சமீபத்தில்தான் சீனாவின் உளவு பலூன் அமெரிக்காவில் சுட்டு வீழ்த்தப்பட்டது. அமெரிக்காவில் சீனாவின் உளவு பலூன்கள் பறந்த விவகாரம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அமெரிக்கா தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இதன் மூலம் சீனாவிற்கு என்ன மாதிரியான உளவு தகவல்கள், புகைப்படங்கள் அனுப்பப்பட்டன என்று விசாரணை செய்யப்பட்டு வருகின்றன. வடக்கு அமெரிக்க மேலே சீனாவின் இந்த ராட்சச பலூன் பறந்து கொண்டு இருந்தது. இந்த பலூன் கடந்த ஞாயிற்றுக்கிழமை சுட்டு வீழ்த்தப்பட்டது.

சீனா

சீனா

சீனாவின் உளவு பலூன் இது என்று அமெரிக்கா குற்றஞ்சாட்டி உள்ளது. முதலில் வெள்ளை நிறத்தில் ஏதோ பறக்கிறது என்று மட்டுமே கூறப்பட்டது. காரணம் பயணிகள் விமானம் பறக்கும் உயரம், போர் விமானம் பறக்கும் உயரத்திற்கும் அதிகமாக 30 கிமீ உயரத்திற்கு அருகே இந்த பலூன்கள் பறந்து கொண்டு இருந்தன. பலூனில் கீழே சென்சார்கள் இருப்பதும், கேமரா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதோடு அதில் பல தொலைத்தொடர்பு சாதனங்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சாதனங்கள் அனைத்தும் சோலார் பேனல்கள் உதவியுடன் இயங்கி வந்துள்ளன. பெரிய ராட்சச சோலார் பேனல்கள் இதில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அதோடு இவை ஹீலியம் உதவியுடன் வானில் பறந்து வந்துள்ளன. அமெரிக்காவின் ராணுவ தளவாடங்களுக்கு மேலே இவை பறந்து இருக்கின்றன. முதலில் இதை சீனா தங்களுடைய பலூன் இல்லை என்றது. இந்த பலூன் எங்களுடைய பலூன் கிடையாது. இதற்கும் எங்களுக்கும் தொடர்பு கிடையாது என்று சீனா கூறி வந்தது. அதன்பின் இது எங்களுடைய பலூன்தான். அட்லாண்டிக் கடலில் சர்வதேச எல்லையில்தான் இது பறந்து கொண்டு இருந்தது. இது வானிலைக்காக பறக்க விடப்படும் பலூன். வானிலையை கணிப்பது மட்டுமே இதன் வேலை. ஆனால் இதை பற்றி தவறான தகவல்களை பரப்புகிறார்கள் என்று சீனா கூறியது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+