ஐநாவில் பல்பு! பாகிஸ்தானிடம் உறுப்பு நாடுகள் சரமாரி கேள்வி.. பாதுகாப்பு கவுன்சிலில் நடந்தது என்ன?
நியூயார்க்: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், பாகிஸ்தான் கோரிக்கையை ஏற்று ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டம் கூடியது. இந்தக் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதானால் பாகிஸ்தான் போட்ட திட்டம் எதுவும் ஈடேறாமல் போயுள்ளது.
இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. பதற்றத்தை தணிக்க வேண்டும் என்று ஐநா அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் அவசரமாக கூடியுள்ளது. திறந்த ஆலோசனையாக இல்லாமல் Close door - மீட்டிங்காக நடைபெற்றது.

பாகிஸ்தானுக்கு சரமாரி கேள்வி
பாகிஸ்தான் கோரிக்கையை ஏற்று இந்த ஆலோசனை நடைபெற்றுள்ளது. எனினும், இந்த கூட்டத்தில் எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை. அறிக்கையோ தீர்மானமோ என எந்த ஒரு விஷயமும் எடுத்துக்கொள்ளாமல் கூட்டம் நிறைவு பெற்றது. இதன் மூலம் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தான் மூக்கு உடைபட்டுள்ளது.
இதற்கிடையே, ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், பாகிஸ்தானிடம் உறுப்பு நாடுகள் சரமாரி கேள்விகளை எழுப்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 90 நிமிடங்கள் நடைபெற்ற இந்த கூட்டத்தில், அணு ஆயுதம் மிரட்டல், ஏவுகணை தாக்குதல் என அடாவடி செயலில் பாகிஸ்தான் ஈடுபடுவது குறித்து உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சீனாவும் பின் வாங்கியது
அதேபோல, லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் தொடர்பு குறித்தும் சந்தேகம் எழுப்பப்பட்டதாக சொல்லப்படுகிறது. பஹல்காம் விவகாரத்தை சர்வதேச அளவில் எழுப்ப முயன்ற பாகிஸ்தானுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. கூட்டம் முடிந்த பிறகு எந்த கூட்டறிக்கை அளிக்க எந்த ஒரு நாடும் பாகிஸ்தானுடன் வரவில்லை. சீனாவும் பின் வாங்கியுள்ளது.
ஐநா பொதுச்செயலாளர் அண்டனியோ கட்டர்ஸ்,‛இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பிரச்சனை உச்சத்தில் உள்ளது. இந்த பிரச்சனைக்கு ராணுவ நடவடிக்கை என்பது தீர்வாக அமையாது. யாரும் தப்பு செய்ய வேண்டாம். இருநாடுகளுக்கு இடையேயான அமைதி பேச்சுவார்த்தைக்கு எனது அலுவலகத்தை கூட தயாராக இருக்கிறேன்" என்று கூறிய சில மணி நேரங்களில் இந்த ஆலோசனை நடைபெற்றுள்ளது.
இந்தியா முறியடிக்கும்
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தான் நிரந்தர உறுப்பினர் இல்லாத உறுப்பினராக உள்ளது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் மே மாதத்திற்கான தலைமை பொறுப்பை கிரீஸ் வகிக்கிறது. எனவே கிரீஸிடம் நேற்று பிற்பகல் இந்த ரகசிய ஆலோசனைக்கு பிறகு பாகிஸ்தான் கோரிக்கை வைத்துள்ளது. வழக்கமான ஐநா பாதுகாப்பு கவுன்சில் சேம்பருக்கு அடுத்தாற்போல் உள்ள அறையில் இந்த ஆலோசனை நடைபெற்றது.
முன்னதாக ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்திற்கு முன்பாக இந்தியாவின் முன்னாள் தூதர் சையது அக்பரூதின் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கவுன்சிலில் உறுப்பினராக இருக்கும் ஒரு நாடு தனது பொறுப்பை பயன்படுத்தி ஒரு தோற்றத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதில், எந்த ஒரு விளைவையும் எதிர்பார்க்க முடியாது. பாகிஸ்தானின் இதுபோன்ற முயற்சிகளை இந்தியா முறியடிக்கும்" என்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications