பல ஆண்டுகளாக யுஎப்ஓக்களை மறைத்த அமெரிக்கா.. வந்துவிட்டு போன ஏலியன்கள்? விசாரணையில் அம்பலம்?

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: ஏலியன்களின் வாகனங்களாக கருதப்படும் யுஎப்ஓக்கள் இருப்பது உண்மை என்று அமெரிக்கா நடத்திய பிரதிநிதிகள் சபை விசாரணையில் வாக்குமூலம் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த விசாரணையில் பல அதிர்ச்சி சம்பவங்கள் வெளியாகி உள்ளன.

ஏலியன்களின் வாகனம் என்று அழைக்கப்படும் யுஎப்ஓ வாகனங்கள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது. நேற்று அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையில் இது தொடர்பாக முதல் கட்ட விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.

Are Aliens real? What did happen in United States House of Representatives UFO hearing?

முன்னாள் அமெரிக்க விமானப்படை உளவுத்துறை அதிகாரி ஓய்வு பெற்ற மேஜர் டேவிட் க்ரூஷ் இந்த விசாரணையில் அதிர்ச்சி அளிக்கும் விஷயங்களை குறிப்பிட்டார். அவர் குறிப்பிட்ட முக்கியமான பாயிண்டுகள் பின்வருமாறு..

1. அமெரிக்காவில் ஏலியன் வாகனங்கள் எனப்படும் யுஎப்ஓக்கள் அரசு வசம் உள்ளது உண்மைதான். பல வாகனங்கள் உள்ளன. சில வாகனங்கள் உடையாமல் நல்ல நிலையில் உள்ளன. இதை அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

2. பல இடங்களில் இவர்கள் யுஎப்ஓக்களை தாக்கி அழித்துள்ளனர். அதேபோல் பல முறை ஏற்கனவே மாட்டிய யுஎப்ஓவை பார்த்து ரிவர்ஸ் எஞ்சினியரிங் மூலம் அதை திருப்பி செய்ய முயன்று உள்ளனர்.

3. இவை எல்லாம் பூமிக்கு சொந்தமானவை இல்லை. மனித உயிரிகள் மூலம் உருவாக்கப்பட்ட வாகனங்கள் இல்லை.

4, இந்த விஷயத்தை வெளியே சொல்ல முயன்ற பலர் துன்புறுத்தப்பட்டு உள்ளனர். கொடுமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மோசமாக நடத்தப்பட்டு உள்ளனர்.

Are Aliens real? What did happen in United States House of Representatives UFO hearing?

5. உலகம் முழுக்க இருக்கும் விமானப்படை, கடற்படை தளங்கள் அருகே இது போல யுஎப்ஓக்கள் காணப்பட்டு உள்ளன. உலகம் முழுக்க இது நடந்துள்ளது.

6. அலாஸ்கா கடல் பகுதியில் குறிப்பிட்ட காலத்திற்கு இது தினசரி செயலாகவே நடந்து உள்ளது. 2 வருடங்களுக்கு இங்கே தினமும் யுஎப்ஓக்கள் பறந்தது. இதை பின்னர் அமெரிக்கா கைப்பற்றியது என்று அவர் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

யுஎப்ஓக்கள்: உலகம் முழுக்க யுஎப்ஓ எனப்படும் அடையாளம் தெரியாத பறக்கும் தட்டுகள், பறக்கும் சாதனங்கள் குறித்து மக்கள் பலர் புகார் வைப்பது உண்டு. வித்தியாசமான பறக்கும் தட்டுக்களை பார்த்ததாக மக்கள் பலர் புகார் வைப்பது உண்டு.நாம் பல ஹாலிவுட் படங்களில் கூட இது போன்ற விமானங்களை பார்த்து இருக்கிறோம். அமெரிக்காவில் இது குறித்து பலர் புகார் வைத்து இருந்தாலும் கூட, கடந்த 2020ம் வருடம் வரை அமெரிக்கா இந்த யுஎப்ஓ குறித்து அதிகாரபூர்வமாக எதையும் ஏற்றுக்கொள்ளவில்லை.

தட்டுகள்: இந்த தட்டுகளை மக்கள் பார்த்ததை மறுத்து வந்த அமெரிக்கா கடந்த 2020ம் வருடம் இப்படி தட்டுகள் பறந்தது உண்மைதான் என்று முதல்முறை ஏற்றுக்கொண்டது. இது தொடர்பாக அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் அதிகாரபூர்வமாக வீடியோ வெளியிட்டு, யுஎஃப்ஓ (பறக்கும் தட்டு) குறித்த வீடியோக்களை பகிர்ந்தது. இந்த வீடியோவில் பறக்கும் தட்டு போன்ற ஒரு சாதனம் கருப்பு நிறத்தில் சென்று கொண்டு இருக்கிறது. முதலில் மிக மெதுவாக செல்லும் இந்த சாதனம் சில நிமிடத்தில் மிக வேகமாக பறந்து மறைந்துள்ளது. யுஎஃப்ஓ எனப்படும் அடையாளப்படுத்த முடியாத பறக்கும் பொருள் இருப்பதை ஒப்புக்கொண்டாலும் கூட இது வேற்றுகிரக வாசிகளுடையது என்று பென்டகன் தெரிவிக்கவில்லை.

ஏற்றுக்கொண்டது: இது தொடர்பாக அமெரிக்க காங்கிரஸ் அவை தொடர்ந்து பல்வேறு கேள்விகளை எழுப்பிய நிலையில், பென்டகன் இதை பற்றி விசாரிப்பதற்காக கடந்த 2019ம் வருடம் டாஸ்க் போர்ஸ் குழு அமைத்தது. காங்கிரஸ் அவை இந்த குழுவிடம் யுஎஃப்ஓ குறித்து ரிப்போர்ட் அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தது. இந்த நிலையில் பென்டகன் உருவாக்கிய குழுவின் இந்த யுஎப்ஓ ரிப்போர்ட் தற்போது வெளியானது. ஒரு வருட ஆராய்ச்சி முடியில், 144 யுஎப்ஓ விமானங்களில் ஒன்றை தவிர மற்ற எதை பற்றியும் விளக்கம் அளிக்க முடியாது. இது என்னவென்றே தெரியவில்லை. இந்த யுஎப்ஓ குறித்த போதிய டேட்டா இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் அமெரிக்காவில் அலாஸ்கா மாகாணம் மேலே பறந்து கொண்டு இருந்த மர்ம பொருள் ஒன்றை கூட சமீபத்தில் அமெரிக்க விமானப்படை சுட்டு வீழ்த்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+